
வரும் ஞாயிறு மாலை பி்ப. 2 மணிக்கு.. தேசிய கலை இலக்கியப்பேரவை வெள்ளவத்தையில்..

இதையும் பாருங்க..... (வைரமுத்துவின் காதலித்துப்பார் பார்வையில் பதிவெழுதிப்பார்)
பதிவெழுதிப்பார்....
உன்னைச் சுற்றி
ரசிகர் வட்டம் தோன்றும்
உன் எழுத்துக்களால்
உலகம் எழுதப்படும்
நடுநிசி கடந்து
ராத்திரி சிவராத்திரியாகும்
தட்டெழுத்து வேகமாகும்
பின்னூட்டல்காரன்
தெய்வமாவான்..
தட்டித் தட்டிக் கீபோட்
உடைந்துபோகும்
கணணித்திரை பார்த்து
கண்ணிரண்டும்
பிதுங்கிக்கொள்ளும்
கதிரையை சூடாக்குவாய்
நல்ல பின்னூட்டங்கள்
வந்தால்
நன்றி சொல்வாய்
வராவிட்டால்
அடிக்கடி மின்னஞசலை
அவதானிப்பாய்
யாரும் உன்னைக்
காணமாட்டார்கள்
ஆனாலும்
இணைய உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்...
அனானிகளின் இம்சையை
அடைந்ததுண்டா..?
உன்னையே அறிந்த
அனுபவம் உண்டா????
பலதூர இடைவெளிகளில் இருந்து
பின்னூட்டல் வந்ததும்
சிலிக்க முடியுமே??
அதற்காக
பதிவெழுதிப்பார்
தமிழ் என்ற சொல்லுக்கு
அர்த்தம்
ஆயிரமாக
பதிவெழுதிப்பார்....
11 comments:
அடுத்த வைர முத்தா? நல்லாத்தான் சிந்திக்கிரிங்க..
ஹா ஹா....
அவரோடு.... ம்ம்ம்ம வேணாம்..
நாங்க சின்னப்பசங்கப்பா....
நன்றி சந்ரு
அடடா.....
கலக்குகிறீர்களே....
//யாரும் உன்னைக்
காணமாட்டார்கள்
ஆனாலும்
இணைய உலகமே
உன்னையே கவனிப்பதாய்
உணர்வாய்...//
ஹி ஹி....
அனுபவம் தானே வாழ்க்கை.
நல்ல பதிவு....
வாழ்த்துக்கள்....
///அனுபவம் தானே வாழ்க்கை.///
அனுபவம் இல்லாவிட்டால் ????
//நல்ல பதிவு....
வாழ்த்துக்கள்....//
நன்றி...
சூப்பர் நண்பா...
நன்றி நண்பனே
அருமை நண்பரே
// கணணித்திரை பார்த்து
கண்ணிரண்டும்
பிதுங்கிக்கொள்ளும்//
school leave தானே அதே கதிதான் எனக்கும்
நன்றி தர்சன்
///school leave தானே அதே கதிதான் எனக்கும்///
குதூகலியுங்கள்
நல்ல பதிவு நண்பா...
வாழ்த்துக்கள்....
பங்குச்சந்தைக்கு நன்றி
நன்றி வசந்த்..
Post a Comment