சர்வதேச ஓசோன் தினம் (16-09-2010) ஓசோனுக்காய்..... என்று நான் சென்ற வருடம் எழுதிய பதிவு வாசிக்தத்தவறியவர்களுக்காக இங்கு போய்க் காண்க ஓசோனுக்காய்......
திறந்த வெளியில்
நீ
என் காவலனாய் ....
போர்வை போர்த்தியதும்
நிறமற்றவனாய்
நின்றபோதும்...
உணர்கிறேன்
தட்ப வெப்பநிலை மாற்றம்
உறை பனியில் உருக்கம்
மழைவீழ்ச்சியில் சுருக்கம்
இப்போதுதான்
தெரிகிறது
உன்னில் விழுந்த
ஓட்டைகளுக்கும்
கிளிஞல்களுக்கும்
காரணம்
நான் ஆனதற்காக
வருத்தப்படுகிறேன்
இன்று என்னை வளர்த்து ஆளாக்கிய என்னோடு என்றும் இருக்கும் என் சின்னம்மாவின் பிறந்தநாள் அவருக்கு எனது இனிய வாழ்த்துக்கள் அன்ரி..
எங்க ஊர்த்திருவிழா
எங்க ஊரில் பால முருகன் கோயில் அலங்காரத்திருவிழா நேற்று முன்தினம் ஆரம்பமாகியது கொடியேற்றத்துடன்...
அனுபவம்
எதிர்மறை சிந்தனைகளில் இருந்து எப்படி விடுபடுவது என்பது இன்று எனக்கு மிகவும் கஸ்டமாக இருந்தது. எனது இன்றைய பயணத்தில் சில முரண்பாடான கருத்து மோதல்கள் என் சக நண்பர்களிடம்.
சில வேளைகளில் மெளனமும் மெல்லிய பாடல்களும் என்னைச் சாந்தப் படுத்தும் என்பதை இன்று உணர்ந்துகொண்டேன். நீங்களும் முயற்சிக்கலாமே. வழமையாக பிரச்சனைகள் என்று வந்தால் பொதுவாக ஒதுங்கிக்கொள்ளும் நபர்களில் நானும் ஒருவன். பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதை வெறுப்பவன் அல்ல.
"வாழ்க்கையின் ஒவ்வொரு பிரச்சனைகளும் படிப்பினையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவல்லவை."
அவ்வாறான பிரச்சனைகளை சவால்களை ஏற்றுகொள்வதில் "தில்" இருக்கும் இதை தவிர்க்கவிருப்பமுமில்லை எனக்கு. ஆனால் தேவையில்லாத முரண்பாடுகளுக்குள் மூக்கு நுழைத்து முட்டிக்ககொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கில்ல. எதிர்மறைக்கருத்துக்கள் எண்ணங்கள் எப்போதும் நமது எண்ணத்தில் முயற்சியில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கருத்தில் கொள்க. நல்லவை நடக்காவிட்டாலும் நல்லவைகளையாவது சிந்திக்கலாமே. மற்றவர்களை உன்னிப்பாக பார்த்துக்கொண்டு அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டிக் கொண்டிருப்பதை விட நாமாக முன்னேறப்பார்க வேண்டும். நமது வளர்ச்சியை மேம்படுத்தப் பார்க்கவேண்டும்.
சிந்தனைக்கு
"ஒப்பிடுதைக்காட்டிலும் முன்னேற எத்தனிப்பது மேல் அந்தசிந்தனையை வளர்ப்பது அதை விட மேல்"
6 comments:
சில்லறைகளை பொறுக்கி கொண்டேன்..
நன்றி
///...என் காவலனாய் ....
போர்வை போர்த்தியதும்
நிறமற்றவனாய்
நின்றபோதும்.../// ஆரம்பமே அசத்தலாக கவிதை அரம்பித்திருக்கிறது... வாழ்த்துக்கள்..
கவிதை, நறுக்கென்று இருக்கிறது.
...உங்கள் சின்னம்மாவுக்கு எங்களது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
ஓசோன் மனதை குளிரச்செய்தது. சத்தியமாக ஸி.எவ்.ஸி வெளிவரவில்லை.
ஊர்த்திருவிழாவா? இயந்திரத்தனமான வாழ்க்கையில் இப்படியான நிகழ்வுகள்தான் மனதுக்கு கொஞ்சம் ரிலாக்ஸ்...
ஜெஸ்...எதையும் போக்கவல்லது இசை மட்டுமே..
சித்திக்கு மகன் என்ன புத்தகத்தை பரிசாக கொடுத்தீர்கள்???
கவிதை நல்ல இருக்கு உங்க சின்னம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@@யோ வொய்ஸ் (யோகா) said...
நன்றி நண்பா
@@ம.தி.சுதா said...
நன்றி சுதா
@@Chitra said...
நன்றி
சித்ரா
@@Jana said...
கவிதை ஸி.எப்.ஸி பிறீ
சித்தி பட்டகஸ்டத்திற்காகத் தான் என்னைப்படிக்க வைத்தார். அதால அவங்க விரும்பும் ஒரு பொருளை வாங்கிக்கொடுத்திருக்கேன்.
இசை என் ஜீவன்
நன்றி அண்ணா
@@சௌந்தர் said...
நன்றி அண்பரே..
Post a Comment