இன்றைய தினம்:
"உலக இருதய தினம்". இத்தினம் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 26 ஆந்திகதி 1999/ ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.
இவ்வருடத்திற்கான தொனிப்பொருள் "ஆரோக்கியமான வேலைத்தளத்தில் உங்களுடைய இதயத்திற்கு பொறுப்பானவர்களாய் இருங்கள்"
"Workplaces Wellness: Take responsibility for your own heart health"
"World Heart Day, which used to take place every year on the last Sunday in September, is organized by the World Heart Federation, and has been celebrated annually since 1999. As of 2011, World Heart Day is celebrated every 29 September"
நமது மனம் கஸ்டப்படும் பொழுதுகளில் எமது இதயம் பலவீனப்படும் என்பது யாவரும் அறிந்ததே.அண்மைக்காலமாய் பல வேதனைகளில் துன்புறும் போது நமது இதயம் பாதிக்கப்பட்டு பல இதய நோய்களுக்கு ஆளாகிக் கொண்டிருப்படுத்தை அனேகர் அறிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் இதய நோய்களுக்கு காரணம் பல இருக்கலாம். மனவேதனைகளும் இதயத்தை பலவீனப்படுத்துவதை தவிர்ப்பதற்கே இத்தினம் கொண்டாடப்படவேண்டிய தேவையும் இவை பற்றிய ஒரு விழிப்புணர்ச்சியும் அவசியம். அனேகமாக சமுதாயம் என்ற சமூகச் சூழலில் நாம் வாழவேண்டிய பொழுது இன்ப மற்றும் சந்தோசச் சாயத்தைப் பருகிக்கொள்ள முடியாமல் இருப்பதாலேயே பல சிக்கல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் நாம் ஆளாகின்றோம். இதற்காக நான் எங்கேயோ கேட்ட விடயம் இதயபலவீனமாவர்களுக்கு அல்லது இதய நோயாளிகளுக்கு "இசை" மருத்துவம் மிகச் சிறந்தது.
ஆனாலும் இதயச்சுமை மனதினால் ஏற்றப்படும் வலி இவற்றைக்குறைப்பதற்கு சரியான தொடர்பாடல், இளகிய சொல்லாடல், இனிமை ததும்பும் பேச்சு, புன்சிரிப்புடனான உறவு, கோபம்,ஆத்திரம் தவிர்த்து உறவாடும் போது மற்றவர்களின் மனதை வருடும். அவாகளிகன் இதயத்தின் வலிகளை நாமே குறைக்கலாம். அவ்வாறே நமது இதயமும் இலேசாகும் என்பது வலிமை தருகிறது.
என் பாரம் அதிகரிக்கும் தருணங்களில் அம்மா அப்பாவிடம் அழுதுவிடுவேன் அவர்கள் எனக்காக பகிரும் அந்த பாசத்தில் அதிக சுமைகளைக் குறைக்க நேரிட்டாலும் இது எனது பலவீனத்தைக் காட்டுவதாய் உணர்கிறேன்.
ஆனாலும் மற்றவர்கள் உளரீதியாக கஸ்டப்படும் பொழுது அவர்களை ஆற்றுப்படுத்தல் சிறந்தது. அது அவா்களுக்கு எப்போதும் துணையாக நீங்கள் இல்லாவிட்டாலும் உங்கள் சொற்கள் அவர்களை எப்போதும் இயல்பாக வைத்திருக்க உதவும் என்பது எனது அனுபவம்.
அதேபோல் நமது மனக்கஸ்டங்களுக்கு பரிகாரமாய் நாம் ஒவ்வொருவரும் மாற்றுவழிகளைக் கையாளும் போது மற்றவர்களைப் பாதிக்கா வண்ணம் இருக்கவேண்டும்.இல்லையேல் மாற்று வழியே மாறுதலாகிவிடும்.
நேற்றைய பொழுது
எங்க ஊர் பாலமுருகனுக்குத் திருவிழா. அதற்காக பட்டெடுத்தல் நிகழ்வு நடைபெற்றபொழுது பிடித்த ஒரு மாலைநேரக்காட்சி.
"மூன்று நாள்
சொர்க்கம்" -சுஜாதா
பாடசாலை மாணவர்கள் அவசியம் வாசிக்கவேண்டிய ஒரு புத்தகம் அழகாக சித்தரித்து எழுதியிருக்கிறார் சுஜாதா. வாசிக்கும் போதே இது நம்ம பார்த்த சம்பவம் போல இருக்கு
என்கிற உணர்வை எத்தனிக்கிறது. வாசிக்கவேண்டும் அனைவரும். கதைகள் புனைவுகள் என்றாலும் கருத்துக்கள் ஆழம் பார்க்கப்படவேண்டியது.
சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் புதைந்த மனது இப்போது சில தடங்களில் சமூகத்தில் பாய்கிறது.
நிலைபேறாத்தன்மை
பெரும் புலமை வாதிகள் தாங்கள் முன்னேறி எங்கள் கலை இலக்கிய நிகழ்வுகளை வெளிநாடுகளுக்கும் பேட்டிகளுக்கும் கொண்டுசெல்வதை வரவேற்கிறேன்.ஆனால் அவர்களால் ஏதாவது அதே நிகழ்வை எமது கிராமமட்டங்களில் செய்யமுடியாமல் இருப்பது, அல்லது செய்யத்துணியாமல் இருப்பது வருந்தத்தக்க விடயம்.
அதேபோல் தங்களுக்கு பின் வாரிசாக தங்கள் பிள்ளை அல்லது உறவினன் மட்டும் வரவேண்டும் என்று எண்ணிக்கொள்வது எமது கலை இலக்கியங்களின் நீடித்து நிலைக்கமுடியாத தன்மையைக் காட்டுகிறது. நிறையத் திறமையுள்ள மாணவர்களை வழிநடத்தாமல் இருப்பது கவலையளிக்கிறது. அவர்களுக்கு உந்துகோலாக இருக்காமை வெறுக்கிறது எனக்கு.
இது பல்கலைக்கழக மட்டத்திலிருந்து எங்கும் இருக்கும் விடயம். தாங்கள் புலமை வாதிகள் என்றால் அந்த நூற்றாண்டு அப்படியே அவர்கள் மட்டுமே வாழவேண்டும். தங்கள் காலத்தில் வேறு ஒரு மாணவனை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் அனேகர் இல்லை.இதனை விளங்கிக்கிக்கொண்டு நீடித்து நிலைக்கவேண்டிய தன்மையை ஏற்படுத்த முயலவேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
சிலருக்காக அல்லது சிந்தனைக்காக
மு.மேத்தாவின் சில வரிகள்
"நான் எனக்குள்ளேயே செத்துப்போனாலே தவிர
என்னை எவராலும் புதைத்துவிட முடியாது என்பதை நான் புரிந்து வைத்திருக்கிறேன்.
அதனால் தான் - நான் இழப்புக்களின் மத்தியிலும் எழுந்து நிற்கிறேன்.
சோகங்களில் மூழ்கிப் போகாமல் சுறுசுறுப்போடு சுற்றி வருகிறேன்."

8 comments:
எல்லாம் பெறுமதியான சில்லறைகள். மூன்றுநாள் சௌர்க்கம் கண்டிப்பாக இன்றைய உயர்தர மாணவர்கள் படிக்கவேண்டிய ஒன்றுதான். சிறப்பு.
// நமது மனக்கஸ்டங்களுக்கு பரிகாரமாய் நாம் ஒவ்வொருவரும் மாற்றுவழிகளைக் கையாளும் போது மற்றவர்களைப் பாதிக்கா வண்ணம் இருக்கவேண்டும்//
உண்மை
படங்கள் அருமை :)
மூன்று நாள் சொர்க்கம் - இன்னும் வாசிக்கவில்லை
மொத்தத்தில் அத்தனையுமே பயனுள்ள சிதறல்கள் :)
எல்லா படைப்புகளும் நன்றாக உள்ளது. உளவியல் சார்ந்த படைப்பு நிச்சயம் தேவை நல்ல படைப்பு , ஒரு சின்ன கருத்து படைப்புகளும் தனி தனியாய் போட்டிருக்கலாம்
அருமையான பதிவு சகோதரா.. இதயம் பற்றி சொல்லியுள்ளது மிகவும் கவர்ந்திருக்கு எல்லாம் மனம் தான் ஏனெனில் நானும் சிறு வயதில் atrial stenosis ஆல் பாதிக்கப்பட்டவன் ஆனால் மனபலம் தான் கடைசியில் ஒரு மாவட்ட அணிக்கே அணித் தலைவர் ஆகா வைத்தது.(குருநாதர் பற்றி சொன்னால் அது சாதரணமாகவே எனக்குப் பிடிக்கும்)
@@@Jana said...
///எல்லாம் பெறுமதியான சில்லறைகள். மூன்றுநாள் சௌர்க்கம் கண்டிப்பாக இன்றைய உயர்தர மாணவர்கள் படிக்கவேண்டிய ஒன்றுதான். சிறப்பு///
நன்றி அண்ணா
அதுவும் சாதாரண தர உயர்தர பெண்பிள்ளைகள் கட்டாயம் வாசிக்கணும்
@@Subankan said...
// படங்கள் அருமை :)
மூன்று நாள் சொர்க்கம் - இன்னும் வாசிக்கவில்லை
மொத்தத்தில் அத்தனையுமே பயனுள்ள சிதறல்கள் :)///
நன்றி சுபாங்கன்
@@யாதவன் said...
///எல்லா படைப்புகளும் நன்றாக உள்ளது. உளவியல் சார்ந்த படைப்பு நிச்சயம் தேவை நல்ல படைப்பு , ஒரு சின்ன கருத்து படைப்புகளும் தனி தனியாய் போட்டிருக்கலாம்///
நன்றி யாதவன்
தனித்தனியே எழுதுவது பற்றி கருத்தில் எடுத்தேன். ஆனால் இவை சிதறல்களின் சில்லறைகள்
@@ம.தி.சுதா said...
///அருமையான பதிவு சகோதரா.. இதயம் பற்றி சொல்லியுள்ளது மிகவும் கவர்ந்திருக்கு எல்லாம் மனம் தான் ஏனெனில் நானும் சிறு வயதில் atrial stenosis ஆல் பாதிக்கப்பட்டவன் ஆனால் மனபலம் தான் கடைசியில் ஒரு மாவட்ட அணிக்கே அணித் தலைவர் ஆகா வைத்தது.(குருநாதர் பற்றி சொன்னால் அது சாதரணமாகவே எனக்குப் பிடிக்கும்)///
நன்றி சுதா.
அனுபவம் தான் சோதரா. நேற்று நான் போட்ட ஸ்டேடஸ்
####Ramesh Siva தெரிவுசெய்தல், முன்னுரிமைப்படுத்தல், முடிவெடுத்தல் கஸ்டமாக இருக்கு பல நாட்களின் பின்னர் இந்நிலமையில் நான். ஆற்றுப்படுத்தல் ம்ம் யோசனை.####
அதுக்கு பிற்பாடு தான் இந்தப்பதிவு.
Post a Comment