"சந்தோசமும் இன்பமும் நமது செயல்களே தரும்.
மற்வர்களுக்காக நீ வாழ்கிறாய் என்று சொன்னால் உனக்காக யாரும் வாழமாட்டார்கள்.
ஆக நீயாக உனக்காக வாழ்"
"என்னால் செய்யப்பட்ட உதவிக்காக அதே உதவியை எனக்கு, உடனே செய்யவதை விட, கைமாறாக உதவி தேவைப்படும் வேறொருவருக்கு தருணத்தில் செய்துவிடுங்கள். உதவுதல் சங்கிலியாய் தொடரட்டும். தேவைப்படும் போது நானே கேட்பேன் # பார்த்தது பிடித்தது## அனுபவமும் கூட"
"அவன் திருந்திரானுமில்ல கேட்கிறானுமில்ல.
என்னைத் திருத்திக்கொண்டிருக்கிறான் என்று தான் சொல்லத்தோன்றுகிறது.
அமைதியும் அடக்கமும் அதிகரிக்கிறது"
"எதிரி எப்போதும் எதிரியே நண்பன் தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டியவன்" ##படித்தது பிடித்தது##
"நிகழ்வுகளின் நிழல் படங்களும் அவற்றைப் பகிர்தலும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் இல்லா வேளையில் யார் பகிர்வார் எனக்காய் என்று ஒரு ஏக்கம்"
"இதுவரை நல்லாத்தான் இருக்கு இனியும் நல்லாவே நடக்கும்"
"என் தவறுகளைத் திருத்திக்கொள்வதில் எப்போதும் ஆவலாய் இருப்பேன்.
எங்கு தவறிழைக்கின்றேன் என்று சொன்னால் தானே எனக்கு விளங்கும்"
"தவறுகளில் ஏதும் இருப்பின் தண்டனை கொடுங்கள்.
கொடுக்கும் போது காரணத்தையும் சொல்லிவிடுங்கள்.
மன்னிப்பு வேண்டாம்."
"ஒரு தந்தை குடும்பபிரச்சனையால் தன் பிள்ளைகளை பிரிந்திருந்து பல வருடங்களின் பின் இணைந்த மகிழ்ச்சியில் மனம்.
இணையக் காரணம் நானும் ஒருவானாக."
"முழுமனதுடன் இல்லாவிட்டாலும் சில மணிநேரம் செல்கிறேன்...."
"மற்றவர்கள் போல் இல்லாவிட்டாலும் கொஞ்சமாவது நீயாகவே இருந்துகொள்"
மட்டக்களப்பு கல்லடிப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல வருடமாய் இளுபறி நிலையிலிருந்து இப்போது வேலைப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
Tuesday, September 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
//தவறுகளில் ஏதும் இருப்பின் தண்டனை கொடுங்கள்.
கொடுக்கும் போது காரணத்தையும் சொல்லிவிடுங்கள்.
மன்னிப்பு வேண்டாம்//
வெகுவாக ரசித்தது..:)
//மட்டக்களப்பு கல்லடிப்பாலம் புதிதாக அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. பல வருடமாய் இளுபறி நிலையிலிருந்து இப்போது வேலைப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.//
அதே.. வாழ்த்துக்கள்..:D
@@Bavan said...
நன்றி பவன்
அருமையான தகவல்
பயனுள்ள சிதறல்கள்! வாழ்த்துக்கள் ரமேஸ் அண்ணா! தொடர்ந்தும் சிதறட்டும் சேர்த்தெடுக்கிறோம்!
@@யாதவன் said...
//அருமையான தகவல்//
நன்றி யாதவன்
@@MathaN said...
///பயனுள்ள சிதறல்கள்! வாழ்த்துக்கள் ரமேஸ் அண்ணா! தொடர்ந்தும் சிதறட்டும் சேர்த்தெடுக்கிறோம்!///
நன்றி மன்மதன்
Post a Comment