Pages

Tuesday, September 7, 2010

எங்கே செல்லும் இந்த பாதை

அண்மைக்காலமாய் நான் வேதனைப்படும் விடயங்களில்...
உந்துருளியில்(Motor-bike) பயணிக்கும் போது பல தடவை எனக்குள்ளே கேட்டுக்கொண்டவைகள்.

இந்த படம் மட்டக்களப்பு நகரிலிருந்து வவுணதீவுக்கு செல்லும் பாதை எழுவான் கரையையும் படுவான்கரையையும் இணைக்கும் ஒரு பிரதான "வலையிறவு பாலம்" உள்ள பாதை இது. மட்டக்களப்பு நகரிலிருந்து கிட்டத்தட்ட 5 கிலோமீற்றர் இருக்கும் இந்த பாலத்தில் எத்தனையோ பல கிராமவாசிகள் பயணிக்கும் இந்தப்பாதையில் இருக்கும் பாலம் பற்றிய அறிவிப்பு பலகை என்ன சொல்லுகிறது....

(இந்தப்பாலம் எப்போதோ உடைக்கப்பட்டதாக அறிகிறேன்.இன்னும் திருத்தப்படாமல்)

தமிழ் வளர்ப்பவர்களே! சமூகசிந்தனையில் இருக்கும் தலைவர்களே! அவர்களுக்காக இருப்பவர்களே! பாருங்கள் நமக்காக இல்லாவிடினும் நாம் வளர்ந்த மக்களுக்காகவாவது...

இந்தப்பாதையில் பயணிக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களே உங்களால் நிச்சயம் இதற்கு விடைகாண முடியும் நமது மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலம் இவர்கள் வள்ளம் கொண்டு செல்வதும் நீங்கள் அறிவீர்கள்.
இந்தபாதையை சீர்படுத்தி இந்த பாலத்தையும் நிர்மாணித்துக்கொடுக்க இன்றே கருத்திட்ட முன்மொழிவு (Project Proposal) எழுதுங்கள். "நாமக்காக நாம் ஆவோம்"

ஒரு ஸ்டேடஜ்:
"என்னால் வெட்டப்பட்ட மரத்தின் கிளைகளை வளர்க்க நான் தண்ணீர் ஊற்றுவேன்"

மேலுள்ள விடயத்துக்கு இந்த ஸ்டேடஸ் பொருந்தும் உற்றுநோக்குபவர்களுக்கு....

4 comments:

ஜாவா கணேஷ் said...

உதயத்தின் கதிர்கள் இன்னும் இந்தப்பாலத்தில் படவில்லைப்போல???

S.T.Seelan (S.Thanigaseelan) said...

ரமேஸ் உன்மையில் பாவிப்பவருக்கு கூட வராத அக்கறை இந்த இளம் ரெத்தத்தில் ஊற்றெடுத்திருக்கிறது சந்தோசம் சந்தோசம் நிச்சயம் நிறைவு பெறும் எண்ணமே வாழ்கை.

Ramesh said...

@ஜாவா கணேஷ் said...

நன்றி கணேஷ்
வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் உங்ககருத்துக்கும் உங்களையும்

Ramesh said...

@Seelan said...

முடிந்ததை செய்வோம் அண்ணே.
முயற்சிப்போம்

நன்றி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு