Pages

Sunday, September 19, 2010

மரண ஊர்வலம்

இதற்கு முதல் இங்குபோய் வருக காதல் சாதல்

இசைப்புயல் ஏ. ஆர். ரஃமானுக்கு வாழ்த்துசொல்லி எழுதிய கவிதையில்
///
நீ யார் பக்கம் என்று
வாதிடும்
கோயில்களே
மசூதிகளே
கேளுங்கள்
இசையில் கடவுளைக்காண
கற்றுக்கொள்ளுங்கள்
கடவுளுக்காக பிளவுபட்டு
இசையைக் கலைக்காதீர்கள் ////


காதலும் இசைதான்.
காதலின் ஒவ்வொரு அனுபவத்தின் ஆழத்தில் எழுந்துகொள்ளும் இசைவடிவங்கள் காதலர்களின் மனதில் பாடகர்களாக தங்களை அறிமுகப்படுத்திக்கொள்ளும். ஆகவே காதலில் மதம் வேண்டாம். மதம் வளர்க்காதீர்கள். இவ்வாறு காதலின் தேவையில்  காதலர்கள் சொல்லிக்கொள்வதுண்டு. 
காதல் என்ற திருவிழாவில் காணமல் போன உள்ளங்கள் தங்களை கண்டுபிடிக்க முடியாமல் தேடல்கொள்ளும் பொழுதுகளில் எழுகின்ற முட்கம்பி வேலியாய் "மதங்கள் " (religion) இருப்பதை எந்த காதலும் ஏற்றுக்கொள்வதில்லை நாம்  ஏற்றுக்கொள்ளவேண்டும். அது தேவையின்பால் தேடலின் உளச்சலில் மனது உழுதுகொள்ளாமல் இருப்பதாக நாம் சொல்லிகிறோம். உண்மைதான் அவர்கள் பண்பட்டுக்கொள்ளவில்லை காரணம் தேடலில் இருக்கிறார்கள். 
காதல் என்பது இனம் மதம் மொழி பார்க்காது என்று சொல்லிக்கொண்டு காதலுக்கு கண் இல்லை காது இல்லை என்று பகிர்கின்றவர்களிடம் கேட்கத்தோன்றுது அப்படியானால் காதலுக்கு 'உயிரே' இல்லையா.???

காதல் என்பது ஒரு 'உறுதலுணர்ச்சி அல்லது மனஉணர்ச்சி (Feeling)' என்று பகரமுடியுமானால் தொடுதல் தொட்டுணர்தல் போல் அது முடிந்துவிடும் தெறிவினைத் தொழிற்பாடா? காதல் உணர்வு எல்லோரையும் பார்க்கும் போது பேசும் போது பழகும் போது உருவாவதில்லை. ஒருமுறை காதல் நுகரப்பட்டால் தொடரப்படும் மனசுக்குள்.

"காதல் மரணம் போன்றது
இன்னும் சுமக்கிறேன்
புதைக்கவும் வழியில்லை
எரிக்கவும் மனமில்லை."
(....எங்கேயோ படித்தது....)
இந்த மரண ஊர்வலம் தேவைகளுக்காக (காதல்) ஆனதாக நினைத்தால்

"எத்தனை வேலைப்பளு
தொல்லைகள் ஆயிரம்
ஆனாலும் உன்
மூன்றுபக்க கடிதத்தை மட்டும் படித்து
மூன்று சொற்களில்
மனசை சுருக்க முடிகிறது
'ஆதாமின் அப்பிளால்'"
 
இந்தக்கவிதையின் கருத்தில் தெரிகிறதா இந்த இதயத்தை தொட்டுக்காட்டும் அந்த காதல் உணர்வு மூவாயிரம் சொற்களையும் மூன்று சொல்களில் சொல்லத்துடிக்குது அதிக  தேவையான அவசியமான வேலைகளுக்கு மத்தியிலும் ஒரு இனிமை. தவிப்பு தாகம் அங்கு உணரப்படுகிறது என்று. காதலுற்றவ(ன்)ள் அவஸ்தை அனுபவிக்கும் போது தெரிந்துகொள்ளலாம். தமது தரநிலை தகுதி அந்தஸ்து என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் நிலையற்ற வாழ்க்கைத் தேடலில் ஒரு சுகம் காணும் போது இந்த நல்ல இன்பத் தேடலை வெறுப்பதற்கு இனம் மதம் அந்தஸ்து அவசியமா என்று சிந்தித்துப்பாருங்கள்.

மதம் என்பது நமக்கு நமது பெற்றோர் அல்லது உறவினர்களால் திணிக்கப்பட்டது அல்லது சொல்லாமலே தொடரச்செய்யப்பட்டது. அதாவர் செயற்பாட்டுநிலை. ஆனால் காதல் என்பது தன்னிலைப்படுத்தப்படுவது (என்னால் ) காதலர்களால் கண்டுபிடிக்கப்படுவது.
இங்கு மதம் என்பது தடையாகும் தருணம் காதல் என்பது தவிப்பாகும் தருணம். தயக்கமின்றி உற்ற உறவுகளை மற்றவர் நட்புக்களை இழக்கக் கூட தயங்காது. காரணம் காதலின் இன்ப வலிமை சூரியனையும் உருகச்செய்யும்.சுட்டெரிக்கச் செய்யும்.

ஆதலால் காதல் அனுபவித்துக்கொள்வதை விட அவஸ்த்தைகளிலே அதிகம் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனாலும் பாடல்களும் கவிதைகளும் அனேகம் பெண்களின் பால் இவை வெளிக்காட்டப்படுவது ஒரு ஆணாய் சற்று வேதனைகொள்ளச் செய்கிறது. ஆனாலும் இயல்பாக காதலின் உணர்ச்சி பெண்ணுக்கு அதிகம் என்று ஒருபாடலில் (எனைத் தாலாட்ட வருவாளா... என நினைக்கிறேன்.) கவிஞர் சுட்டிக்காட்டுகிறார்.  ஆனால்
"காதல்" "போஸ் (எ) பாஸ்கரன்" என்கிற படங்களில் ஆண்களின் அவஸ்தைகள் பற்றி ஹரிச்சரனின் பாடல் சொல்லுது.

மதம்பற்றி காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் பற்றி ....
வாழ்க்கையின் எச்சங்கள் பிள்ளைகள் அவர்களே அடுத்த பரம்பரைக்கு நாம்  விட்டுச்செல்லும் சொத்துக்கள். ஆக காதல் என்ற போர்வையில் இனம் மதம் கடந்து காதல் வேலி தாண்டுது என்றால் அந்த காதலர்களின் பெற்றோர் கொண்ட மதம் கலாசாரப்பின்னணி கலாசாரப்பாங்கு மொழி என்பன அழிக்கப்பட தங்களால் மற்றபராம்பரைக்கு கடத்தப்பட முடியல என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். நாம் எச்சம் என்ற சொல்லில் விஞ்ஞானப்பதம் விரிவாக சொன்னாலும் எளியமுறையில் புணர்ச்சியின் விளைபொருள் புதிதான பிள்ளை தாம் பின்பற்றிய சமய கலாசாரத்தைத் தொடரவேண்டும் என்ற எண்ணமே ஒழிய வேறொன்றுமில்லை. வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த காதலர்கள் இருவரில் எந்த மதம் அல்லது கலாசாரத்தை பின்பற்றுவது என்ற கேள்வியும் நடைமுறைச்சிக்கலுமே முதலில் இம் மதம் பார்க்காத காதலுக்கு தடை உத்தரவைப் பிறப்பிக்கிறது. இதனாலேயே பல காதலர்கள்  தண்டவாளங்களாய் ஆகிறார்கள் காதல் புகைவண்டி போகாமல்.....


"தெரிகின்ற பொருளாய் காதல் இல்லை தேடலின் விளைவாய் காதல்"
காதல்:

என்னைக்
கட்டிக்கொள்ளுங்கள்
கடைசிவரை
காப்பாற்றிக்கொள்ளுங்கள்
என்னையல்ல
உங்கள்
மகுடம் கலையாமல்
பார்த்துக்கொள்ளுங்கள்

காகிதத்திலும்
கல்லறையிலும் மட்டும்
நான்
இன்னும்....
                   தொடரும்.....

6 comments:

யோ வொய்ஸ் (யோகா) said...

காதலுக்கு மதம் எதிரியல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இசைப்புயலை வாழ்த்திய கவிதையை ரசித்தேன்....

Riyas said...

//காதல் மரணம் போன்றது
இன்னும் சுமக்கிறேன்
புதைக்கவும் வழியில்லை
எரிக்கவும் மனமில்லை."//

நல்லாயிருக்கு...

Jana said...

மிக..அருமை..
"காதலிக்க தொடங்கிய பொழுதுகளிலேயே நாகரிகங்கள் தோன்றியது"
காதல் பூ போன்றது ஒருமுறை கசக்கப்பட்டால் அது மலராது
என்பவர்களுக்கு தாங்கள் சொல்லிக்கொள்வது

"இல்லை காதல் பொன் போன்றது சுடச்சுடத்தான்
மிழிர்வது" -என்பது போல உள்ளது

அனுபவிக்கும் எழுத்துநடை..அபாரம்..
தொடர்ந்தும் காதலியுங்கள்..

Ramesh said...

@@நன்றி யோகா
முதல்ல நாம உணரணுமே..

@@ riyas
நன்றி நண்பா

@@ Jana anna
நன்றி அண்ணே
அனிச்சம் பூ பற்றி எழுதுறன்
சுடுதல் பற்றியும்

நன்றி அண்ணா

KANA VARO said...

இசை! அது எங்கிருந்து வருகுது தெரியுமா? (கிங் பட வடிவேல் ஜோக்கை சொன்னன்)

கலக்கலா இருக்கு கவிஞரே!

Ramesh said...

@KANA VARO
இசை எங்கிருந்துவந்தாலும் ரசிப்போமே.
நன்றி வரோ.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு