வாழ்க்கையின் அந்தங்களைத் தொடாவிட்டாலும்
அனேக
அத்தியாயங்களை புரட்டிப்பார்க்க முடிகிறது
என்னால்
நிலவைப் பற்றிக் கவலைப்படவில்லை
விண்மீன்களின் வெளிச்சம் போதும்
என் பாதைகளில் நடந்துசெல்ல
காற்றின் ஈரங்களில்
சிறகுகளை உலர்த்தும்
என்மனம்
இசைகளை எப்போதும் ரசிக்கும்
ஆறுதல் மொழி ஆயிரம் சொன்னாலும்
அழுதுவிடுவேன்
அவர்கள் அகன்ற பின்னால்
எத்தனை கவலைகளை
களைய முடிந்தாலும்
என் கண்ணீர்
அம்மாவின் கைகளாலே
துடைக்கப்படுகிறது
Thursday, September 23, 2010
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
கவிதை நல்லாயிருக்கு நண்பா
ஜிமெயிலின் ஊடான சந்திப்பு முடிந்ததுமே, இக் கவிதையைப் படித்தேன்.
பாராட்டுக்கள்!
றமேஸ்...அம்மாவிடம் தேவைப்படும் அன்பும்,உங்கள் எளிமையான மனமும் கவிதையில் தெரிகிறது.என்றும் இதே குணம் மாறாமலிருக்க வாழ்த்துகள்.
///...நிலவைப் பற்றிக் கவலைப்படவில்லை
விண்மீன்களின் வெளிச்சம் போதும்
என் பாதைகளில் நடந்துசெல்ல ...///
அருமையாக இருக்கிறது..
காற்றின் ஈரங்களில்
சிறகுகளை உலர்த்தும்
என்மனம்
இசைகளை எப்போதும் ரசிக்கும்
....அருமை ...அழகு....!
//எத்தனை கவலைகளை
களைய முடிந்தாலும்
என் கண்ணீர்
அம்மாவின் கைகளாலே
துடைக்கப்படுகிறது//
உண்மை...இந்த அன்பு என்றும் தொடர வாழ்த்துக்கள்.. :)
//எத்தனை கவலைகளை
களைய முடிந்தாலும்
என் கண்ணீர்
அம்மாவின் கைகளாலே
துடைக்கப்படுகிறது//
உண்மை, அருமை :)
ரொம்ப நல்லாயிருக்குங்க றமேஸ்.. அந்த கரங்களுக்கு உண்டான வலிமை வேறெங்கே கிடைக்கும்... அருமை...
@@யோ வொய்ஸ் (யோகா) said...
நன்றி யோகா
@@ஈழவன் said...
நன்றி களத்துமேடு
@@ஹேமா said...
நன்றி ஹேமா. நிச்சயம் மாறாது.
@@ம.தி.சுதா said...
நன்றி சுதா
@@Chitra said...
நன்றி சித்ரா
@@நல்லவன் கருப்பு... said...
நன்றி நண்பா நீங்களும் பதிவு எழுதுவதை தொடருங்கோ
@@Subankan said...
நன்றி சுபாங்கன்
@@க.பாலாசி said...
நன்றி அண்ணே
Post a Comment