Pages

Wednesday, October 6, 2010

விளக்கேற்றிய வல்லவர்களுக்கு வாழ்த்துக்கள்

என்னை வளர்த்து ஆளாக்கிய எனது அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய ஆசிரியத் தெய்வங்களுக்கு இன்று வாழ்த்துக்கூறும் நன்நாள் "சர்வதேச ஆசிரியர் தினம்" இன்று அக்டோபர் 6.
ஆசிரியர்களை கெளரவித்து அவர்களுக்கு வாழ்த்துச்சொல்லும் இந்நாள் மாணவரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றும் ஆசிரியர்களுக்கு நன்றிகளும் வணக்கங்களும் சொல்லும் பொன்னாள்.
எனக்கு பாடக்கல்வியையும் மற்றும் அனுபவப் பகிர்வுகளையும் தலைமைத்துவ பண்புகளையும் வழங்கி ஆசிர்வதித்த ஆசிரியர்கள் அனைவரையும் மனதில் நினைவுகொண்டு இன்று அவர்களை நன்றிகளோடு வாழ்த்துகிறேன்.

"என்னருமை ஆசான்களே எனது வெற்றிகளையும் இன்ப நுகர்வுகளையும் உங்களுக்கு அர்பணிக்கிறேன்."


"மணிஅக்கா ரீச்சர்" என்று செல்லமாக அழைக்கப்படும் என்னருமை திருமதி.தம்பிப்பிள்ளை ஆசிரியை அரிவரி பாடம் (ஆரம்பக்கல்வியை) வழங்கிய எனது ஆசிரியை


(ஒரு நிகழ்வுக்கு எனது பாடசாலைக்கு சென்றபோது அவர் உரையாற்றியபோது)

ஆரம்பத்திலிருந்து ஆங்கிலக் கல்வியைப் புகட்டிய "சம்பந்தன் சேர்" என்று நாம் கூறும் என்னருமை திரு.திருஞானசம்பந்தர் ஆசிரியர் அவர் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வுபெற முன்தினம் அவரைச்சந்தித்தபோது,
My Dear Sir "Happy Teacher's Day"

எனக்கு கணக்குப் பாடம்(கணிதம்) புகட்டிய என்னருமை திரு.அ.சுந்தரலிங்கம் சேர் ஆசிரியர் உங்களுக்கும் எனது வணக்கங்கள்.

அண்மையில் வாசித்த ஒரு கதையையும் பகிர்கிறேன்.
படங்களை சொடுக்கிப் பாருங்கள்.


5 comments:

Chitra said...

அருமையான பதிவும் கதையும். ஆசிரியர்களை , மதிப்பும் மரியாதையுடனும் என்றும் நினைத்துப் பார்க்கும் நெஞ்சங்கள் உள்ள வரை - அறிவு சுடர் கொழுந்து விட்டு எரியும்.

Ramesh said...

@@Chitra said...
நன்றி சித்ரா.

யோ வொய்ஸ் (யோகா) said...

எனது பள்ளி நாட்களையும் நினைவுபடுத்தியதற்கு நன்றிகள் தோழா

உங்களுடன் சேர்ந்து உங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், எனது ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.

இன்று நாங்கள் வெளிச்சம் தர காரணம் நீங்கள் அன்று உருகியமையால் எனது ஆசிரியர்களே

Ramesh said...

@@யோ வொய்ஸ் (யோகா) said...

///எனது பள்ளி நாட்களையும் நினைவுபடுத்தியதற்கு நன்றிகள் தோழா
உங்களுடன் சேர்ந்து உங்கள் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், எனது ஆசிரியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன்.///

நன்றி யோகா


\\\இன்று நாங்கள் வெளிச்சம் தர காரணம் நீங்கள் அன்று உருகியமையால் எனது ஆசிரியர்களே\\\
உண்மை அந்த உயிர்த்தீபங்களுக்கு எமது வாழ்த்துக்களும் வணக்கங்களும்

Unknown said...

பதிவுக்கு நன்றி தம்பி.

நாம் வாழும்வரை நமது ஆசிரியர்களை வாழ்த்திக்கொண்டே இருப்போம்.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு