Pages

Friday, October 29, 2010

தெருநாடகம்

"நான் பொறந்தது தனியா வளர்ந்தது தனியா...." பாடலை பக்கத்துவீட்டு வானொலிப்பெட்டி பாடிக்கொண்டிருக்க. அவன் கண்களைக் கசக்கி உசுப்பி விட்ட இந்த பாடலுடன் ஆரம்பித்த அந்த நாள் மகேஷ்க்கு அர்த்தப்படாத நாளென்றே தோன்றி எழுந்தான். இவன் பிறந்து வளர்ந்து படிச்சிக்கொண்ட காலங்களில் மகிழ்ச்சி என்பது தொலைதூர நிலாவாகவே அவன் நினைவுகளுடன் விதியானது.

அவன் எவ்வளவு கஸ்டப்பட்டு முன்னுக்கு வர நினைத்தாலும் அவனை ஏதோ ஒன்று பின்னுக்குத் தள்ளுவதாய் உணரலானான். படிச்ச காலங்கள் அதிகம். வாழ்க்கையைப் படிக்க முடியல என்ற ஏக்கம். யாரையும் பார்த்தா அவங்களா இல்ல இவங்க நம்மளப்போலயா.. என்று ஏதோ ஒன்று அவனா அவன் கேட்டுக்கொண்டு. வாழ்க்கையை வாழ முடியாம வரம்புகளைப்பற்றியே யோசிக்கலானான்.

இருந்தாலும் மூங்கில் காட்டையே மூழ்கடித்துவிடும் அந்த புல்லாங்குழழகி அவனுக்குள் வராமல் இருக்க அவன் என்ன காவிநிறத்திலா மனசை உடுத்தி வைத்திருந்தான். அதே அந்த பதின்ம வயது கீறல்கள் மகேஷின் மனதில் அந்த அவள். ஒரு சொட்டுக்குறைவும் இல்லாமல் நனைத்துவிடும் மழையைப் போல அவள் பார்வை அவனை ஒவ்வொருநாளும் உசுப்பிவிட்டுப்போகும்.
அவளுக்கு இந்த வரிகளைச் சொல்லணும் போல இருக்கும் மகேஷ்க்கு

"உன்னோடு பழகும் வருஷங்கள்
பழம் நழுவி விழுந்த
'பால்'ய பருவங்கள்

உன்னைப் பிரித்துப்பார்க்க முடியவில்லை
உனக்கு மட்டும் எப்படி முடிகிறது
என்னை விட்டுவிட்டு போக"


என்னை எடுத்துக்கொண்டு போவதாய் உணர்கிறேன் என்றவளை எப்படியோ இல்ல, காதல் காதலாகணும் அது ஜெய்க்கணும் என்ற ஏக்கம் கொண்டவனாய்.

சீனியில்
மொய்க்கும் ஈக்களாய்
உணர்வுகள்
தின்னப்படுகிறது
கட்டிக்கொண்டது
கற்றுத்தரவில்லை


அவன் அடிக்கடி வரிகள் விதைக்கும் கவிதைக்கும் தாயாகினான் அந்தப்பொழுதுகளில்.
ஆனால் சனா இதைக் கண்டுக்கவில்லை. அவள் நண்பியிடம் சொல்லி அனுப்பிவிடுகிறான்.
"காதல் கிறுக்கிறான் மகேஷ், சனா காதலித்துவிடு" என்று விண்ணப்பிக்கிறான்.

அப்போதும் வழமையைப்போல் அவனுக்குள் அந்த எதிர்மறைச்சின்னங்கள் வெளிப்படுத்தப்பட்டுக்கொண்டு. "அவள் கிடைக்காமல்போனால் நான் என்னாவேன். அவள் கிடைக்கமாட்டாள். நான் யாரென்பதை அறிந்தால் சனா விட்டுவிடுவாள் என்னை. என்னை யாரென்று சொல்லியே ஆகணுமா இல்லை சொல்லாமல் போனால் பிறகு ஒடிந்து போவாளா?? நான் ஏன் பொறந்தேன்? இன்னும் நான் வாழவேணுமா,,?"
பாவம் வரம்புகள் வளர்ந்த மனிதர்களிடையே இவன் ஒரு வளர்ந்த நெல்லினம். பூசைக்குபோகாத பூவாய் கோயிலுக்கு வெளியில் வாழுகிறான். ரோசாச் செடிகளுக்குள் ஒரு அரளிப் பூ தான் தானென்று யோசிக்கலானான். தொடர்ந்து வேதனை ஏன் பொறந்தேன் என்று வாழ்க்கையை வெறுப்போடு பார்க்கலானான்.

சனா அவனை அவன் குடும்பத்தையும் அவன் வாழிடத்தையும் அறிந்துகொள்கிறாள்.
"மகேஷ் நீ நண்பனாகவே இரு. அதுக்கு மேல யோசிக்காத உனக்கு இது பற்றிச்சொல்லத்தேவையில்ல. தெரியும் தானே" என்று முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறாள். காதல் முற்றுப்புள்ளியானது. இல்ல சூனியமானது வாழ்க்கை நரகமானது. மகேஷ் மனதில் பாரம். இதயத்தில் ஓட்டைகள். கண்களில் ஈரம்.

ஆனாலும் அவன் வெற்றிகரமாக கடினப்பட்டுப் படிச்சதால பல்கலைக்கழகம் செல்கிறான். அங்கே வாழ்க்கையின் கோலத்தை மாற்றலாம். வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவேன். நான் என்ன மனிதன் தானே என்று மனக்குமுறல்களை கொட்டிக்கொண்டு சனாவுக்கு விடைபகருகிறான். அவள், வீட்டிலே அடுத்தமுறை கெம்பஸ் (பல்கலைக்கழகம்) போவேன் என்று மறுபடியும் உயர்தர பரீட்சைக்காக படிக்கத் தொடங்குகிறாள்.

மகேஷ் பல்கலைக்கழகத்தில் மிக ஆவலாகவும் அறிவானவனாகவும் சதம் சதமாய் முன்னேறுகிறான். அங்கேயும் தனது படிப்பை மட்டும் நம்பி வாழ்க்கையின் தனது அடுத்த இருப்பைப் பற்றி சிந்திக்கலானான். அங்கே ஒரு சாலையில் தனியே அவன் உலா வருகையில் அந்த வரிகள் கண்ணில் பட்டது.

நீ வீசிய பந்து நோபோல் என்றால்
உன்னுடைய ஓவர் ஒவரா
மறுமுறை பந்து வீசு
விக்கட்டை வீழ்த்தலாம்
இக்கடடைத் தீர்க்கலாம்
.......கவிஞர் வாலி..........

இந்த கவிதைவரிகள் அவனுக்குள் இன்னொரு பரிணாமத்தைக் காட்டிவிட்டது. ஆனாலும் அவன் தனிமையை அடிக்கடி அசைபோடும் ஒரு உளறல்காரன். இது அவன் விரும்பிக்கொண்டதல்ல அவனது குடும்பம், குடும்ப வர்க்கத்தில் பிறந்ததால் ஏற்பட்ட ஒன்று. அவன் அவற்றிலிருந்து விடுபடவேணும். மாற்றம் வேண்டும் உலகில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று சாணுக்கும் முழத்துக்குமாய் மனசில எண்ணிக்கொண்டு....
பல்கலைக்கழகத்தில் மூணு வருசம் ஒன்றாகப்படித்து பழகிய மீராவின் மீது தனது ஈர்ப்பை இனங்காணுகிறான். நரகம் கொண்ட வாழ்வு சொர்க்கம் என்ற மாறுதல் கிடைக்கும் என்ற அசயாத நம்பிக்கையில் கால்கோள் இடுகிறான் கல்யாணத்தில் வாழ்க்கை ஆரம்பிக்க வேலையும் கிடைச்சது கண்டு இரட்டிப்பு மகிழ்ச்சியும் அவனை மீண்டும் அவனாக்கிய அந்த வாழ்க்கை இன்பநுகர்ச்சியையும் தந்தது மகேசுக்கு. ஆனாலும் அந்த வேலை அவனுக்கு தேவையா என்று பிறகு மீண்டும் எதிர்மறையான சிந்தனைகள் தலைதூக்க ஆரம்பிக்கின்றன...
இப்ப கூட அவன் பிழையாக நினைப்பது அவனது வேலையல்ல அவன் வேலைசெய்த இடம் அவன் குடும்பத்தை பிரிந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம். அங்கே அவனுக்கு கிடைத்த மாறுதலான உணர்வுகள். மீண்டும் தனிமை என்ற நிலைமை. வாழ்க்கை வெறுத்த அவன். கடவுளை காணவேணும் அல்லது. கடவுளைக்கொல்லவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் உருப்பெற்று வழிப்பெற்றுக்கொண்டிருக்க. அவனறியாமல் அவன் யாரையும் சந்திக்க முடியாமல் சந்திக்க விரும்பாமல் உலகின் எவ்வளவோ இன்பங்களையும் சந்தோசங்களையும் புதைக்கலானான். தனிமை என்ற நிலைமையில் அவனைத் தள்ளினான் அவன்.
அவனுக்கு ஏதோ பேய் பிசாசு சூனியம் பிடிச்சிருக்கு எண்டு பூசாரிக்கிட்ட பரிகாரம் தேடிச்சென்றனர் மீராவின் குடும்பத்தினர். இருந்தபோதும் மீரா இதையெல்லாம் ஒரு நம்பாமல் தனது கணவனக்கு என்ன ஆச்சு என்பதை அறிந்தால் கணவனின் பிரச்சனையை தான் அல்லாமல் வேறொருவர் மூலமாக அறிந்தால் அதற்கான தீர்வை எட்டமுடியும் என்று நம்பினாள். ஆனால் அவளுக்கு யாரைப் இதற்கு உதவிக்கு கேட்பது என்று தெரியாமல் தடுமாறினாள். உண்மையில் மகேஷைவிட மீரா இப்போது அதிக மன உழைச்சலுக்கு உள்ளாகினாள். பாவம் அவள் என்னசெய்வது என்று தடுமாறும் போதேதான் அந்த தெருநாடகம் மட்டக்களப்பு நகருக்கு அவள் அன்று செல்லும்போது அரங்கேற. அங்கே ஒரு துண்டுப்பிரசுரம் அவளுக்கும் கொடுத்தார்கள் கிழக்குப்பல்கலைக்கழக நாடகமும் அரங்கியலும் மாணவர்கள். அவளுக்காகவே அந்த நாடகம் அரங்கேறியதாக மீரா உணர்ந்தாள்.
அந்த துண்டுப்பிரசுரம்



பூசாரிய நம்புறத்த விட சாமிய கும்பிடலாம் என்பது சரியாய் பட்டது மீராவுக்கு. அவள் மகேஷ ஒருவாறு சம்மதிக்கச் செய்து உளவள நிலையத்துக்கு கூட்டிக்கிட்டு போனாள். அங்க ஆலோசனையும் வழிகாட்டலும் மகேஷ்க்கும் அவருக்கு உரிய மருத்துவசிகிச்சைகளும் முறையே வழங்க மகேஷ் நல்ல நிலையடைந்தான்.
மீரா இப்பதான் யோசித்தாள் மகேஷ் தற்கொலைசெய்ய முயற்சித்தபோது தடுக்காதிருந்தால் தனது வாழ்வும் மகேஷின் வாழ்வோடு முடிந்திருக்கும் எண்டு கண்ணீர்சொரிய மகேஷ் அவளை ஆரத்தழுவி நான் நானாகிட்டேன் நாம் ஏன் கலங்கணும் என்று சொல்ல அந்த தெருநாடகத்தை பார்க்கணும் போல ஒரு ஆர்வம் மகேஷ் மனதில்.....

10 comments:

மதுரை சரவணன் said...

super...

ம.தி.சுதா said...

/////நீ வீசிய பந்து நோபோல் என்றால்
உன்னுடைய ஓவர் ஒவரா
மறுமுறை பந்து வீசு
விக்கட்டை வீழ்த்தலாம்
இக்கடடைத் தீர்க்கலாம்
.......கவிஞர் வாலி........../////
மிகவும் யதார்த்தமான வரிகள்... ஒவ்வொரு மனிதனும் தான் உணர்ந்தால் கூடப் போதும்... மற்றவன் நல்லாயிரப்பான்...

Chitra said...

நல்லா இருக்குங்க!

கவி அழகன் said...

அருமை அருமை கலக்கிறிங்க

Ramesh said...

@@மதுரை சரவணன்
நன்றி சரவணா

@@ம.தி.சுதா
நன்றி சுதா

@@Chitra
நன்றி சித்ரா

@@யாதவன்
நன்றி யாதவ்

Durga Rajendren said...

"மூங்கில் காட்டையே மூழ்கடித்துவிடும் அந்த புல்லாங்குழழகி அவனுக்குள் வராமல் இருக்க அவன் என்ன காவிநிறத்திலா மனசை உடுத்தி வைத்திருந்தான்"

உங்கள் வரிகள் வைரமானவைகள்தான்

anuthinan said...

படித்தேன் அண்ணா!!!

பிடித்து இருக்கிறது!!!

ஈரோடு கதிர் said...

நல்லாயிருக்குங்க றமேஷ்

Ramesh said...

@@Durga Rajendren

நன்றி துர்க்கா

@@Anuthinan S
நன்றி அனு

@@ஈரோடு கதிர்
நன்றி அண்ண

Durga Rajendren said...

உங்கள் எழுத்துக்கள் எம்மை படிக்கத்த தூண்டுகின்றன......
அடுத்த வெளியீடு எப்போ??????
காத்திருக்க வைக்க வேண்டாம்.....
plzzzz

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு