Wednesday, October 13, 2010
செல்போன் சிணுங்கல்கள்
நாம் அதிகமாய்
பேசிய வார்த்தை
'அன்பே'(ஹாய்)
தொண்டை வரை வந்து
விழுங்கிக்கொண்டது
'நான் உன்னைக் காதலிக்கிறேன்'
(ஐ லவ் யூ)
யார் யாரோ உனக்கு
குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்)
அனுப்பலாம்
அழைப்பெடுக்கலாம்
ஈரத்தை உறுஞ்சி
சிறகுகளை உலர்த்தும்
அத்தனை சிலிர்ப்புக்களையும்
சங்கீரணமாக்கும்
சல்லடை
என் புன்சிரிப்பும்
தமிழும்
அன்று
என் அழைப்பை
நீ தவறியதால்
உனக்கு
'தவறிய அழைப்பு' (மிஸ்ட் கோல்)
எனக்கு
தவறிய வாழ்க்கை
இப்போதும் என்
'அழைப்பின் ஒலி' (ரிங் இன் டோன்)
என்றொ பதிவுசெய்த
உன் குரல்
Labels:
அலைபேசி,
கவிதைச் சில்லறைகள்,
காதல்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நல்ல கவிதை
எப்போதோ அடித்த அந்த "ரிங்டோன்" முடிந்துவிட்டாலும். அன்று உணரப்பட்ட "பைபிரேசன்" இன்னும் மனதுக்குள் இருக்குத்தான்போல!
ஃஃஃஃஃநீ தவறியதால்
உனக்கு
'தவறிய அழைப்பு' (மிஸ்ட் கோல்)
எனக்கு
தவறிய வாழ்க்கைஃஃஃஃ
அழுத்தமாக இருக்கிறது வாழ்த்துக்கள்...
அருமை.
@@யாதவன் said...
/// நல்ல கவிதை///
நன்றி யாதவ்
@@Jana said...
////எப்போதோ அடித்த அந்த "ரிங்டோன்" முடிந்துவிட்டாலும். அன்று உணரப்பட்ட "பைபிரேசன்" இன்னும் மனதுக்குள் இருக்குத்தான்போல!////
யார் யாருக்கோ பூத்தது என் அலைபேசியில்
நன்றி அண்ணா
@@ம.தி.சுதா said...
///அழுத்தமாக இருக்கிறது வாழ்த்துக்கள்...///
நன்றி சுதா
அழுத்தியதான் அழுத்தமாக வந்திருக்கு
@@Chitra said...
///அருமை.///
நன்றி சித்ரா
தொடர்வருகைக்கும் சேர்த்து
அருமையான எண்ணச் சிதறல்கள்....சொற்சித்திரங்கள்...கற்பனை கீதங்கள்,உள்ளத்தின் ராகங்கள்.....
Very nice Mobile ringtone
Post a Comment