எழுத்தறிவிக்கும் இறையோன்களே!
உங்கள் பழுத்தறிவிலே
பகுத்தறிவு வாழ்க்கை வாழ்கிறோம்
பாடக்கல்வி எழுத்துக்களின்
கட்டாயக் கல்வி
அனுபவப் பகிர்வும் - உங்கள்
அரவணைப்புக்களும்
காலத்தின் நின்று கட்டியெழுப்பும்
உணர்வுத்தூண்கள்
வெற்றிகள் உயர்வுகள் எம்மைச்
சுற்றிவரும் பொழுது
கடவுள் எம்மை
ஆசிர்வதிக்க மறந்தாலும்
எங்கோ ஒரு மூலையில் -உங்கள்
அருளும் ஆசிகளும்
விளக்கேற்றிக்கொண்டிருக்கும்
தவறு செய்யும் கணங்களில்
தண்டனை கொடுங்கள்
மன்னிப்பு என்னை வழிப்படுத்தாது
கற்றுத் தந்தது நீங்களே!!
கரும்பலகை மனதில்
வெள்ளையடித்து
வெளிச்சப்படுத்தும் உங்கள்
'வெண்கட்டி' எழுத்துக்கள்
அழித்துவிட்டுப்போனாலும்
அழியா இடம் பிடித்துக்கொள்ளும்
தடுமாறும் கணங்களிலும் நான்
தடம்மாறக் கூடாதென்று
எப்போதும் அரணவணைத்து
ஆசிர்வதிக்கும் ஆசான்களே!!
வெளிச்சம் ஏற்றிய
வெற்றித்தீபங்களே!!
எனது வெற்றிகளையும்
இன்ப நுகர்வுகளையும்
அர்ப்பணிக்கிறேன் உங்களுக்கு.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
தடுமாறும் கணங்களிலும் நான்
தடம்மாறக் கூடாதென்று
எப்போதும் அரணவணைத்து
ஆசிர்வதிக்கும் ஆசான்களே!!
.....இப்படி ஆசிரியர்கள் எல்லோருக்கும் அமைவது ஆசிர்வாதமே! அருமை.
மீண்டும் வந்துட்டோம்ல...
அருமை ... எழுத்தறிவித்தவன் இறைவன் அல்ல அதற்கும் மேல் ஆகின்றான்.
தாரமும், குருவும் தலைவிதிப்படியே!
@@யோ வொய்ஸ் (யோகா) said...
// :)//
நன்றி யோகா
@@Chitra said...
/// .....இப்படி ஆசிரியர்கள் எல்லோருக்கும் அமைவது ஆசிர்வாதமே! அருமை.///
நன்றி சித்ரா
@@Jana said...
//மீண்டும் வந்துட்டோம்ல...///
வரவேண்டும் தலைவர்
\\ அருமை ... எழுத்தறிவித்தவன் இறைவன் அல்ல அதற்கும் மேல் ஆகின்றான்.
தாரமும், குருவும் தலைவிதிப்படியே!\\\
ம்ம்
நன்றி அண்ணா
Post a Comment