Pages

Wednesday, November 11, 2009

பெய்யென பெய்க...



பிள்ளைப்பூமிக்காய்
வானத்தாயின்
பாலமிர்தம்
இது
இளந்தைத் தூறல்
இன்பத்தின் சாரல்
உன்
ஒவ்வொரு துளியிலும்
உயிர் வளர்த்தேன்
கவிதைக்கு
தமிழ் சேர்த்தேன்



ஏர் உழுது எரு இட்டு
களை பிடுங்கி
விதை நட்டு
செழிக்கும் பயிர் கண்டு
சிரிக்கும் உழவர் கொண்டு
உலகம் இன்பம்
வலை விரிக்க
உன் வரவு வேண்டும்
விதை நிலம்
கருத்தரிதுக்கொள்ள

இங்கு நிலவும்
உன் வரவு
பொங்கும் இன்பத்தின்
உறவு
கனவும் இனி
உன் உலகு



நனையும் உடல்
தேன் வார்த்த திடல்

வருவாய் தினம்
கண்குளிரும்
என் மனம்

2 comments:

அருண். இரா said...

கலக்கல்ஸ் அருமை நண்பரே !!
தொடருங்கள் ..அடிக்கடி வருகிறேன் :)

உன்
ஒவ்வொரு துளியிலும்
உயிர் வளர்த்தேன்
கவிதைக்கு
தமிழ் சேர்த்தேன்//

சிறப்பான சொல்லாடல் !!

Ramesh said...

நன்றி மச்சான்ஸ் அருண்

இது 1998 இல் எழுதப்பட்டது இப்பதான் பதிவாகிறது

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு