Pages

Sunday, October 10, 2010

வழிகின்ற அது சுமக்கின்ற நான்

இன்னமும்
இழுத்துக்கொண்டு
இறக்கிவிட முடியாமல்

தள்ளிக்கொண்டும்
இழுத்துக்கொண்டும்
இன்னமும் நடந்துகொண்டு

சிரிக்கவேண்டிய தருணங்களில்
மெளனமாகவும்
கதைத்துவிடவேண்டிய பொழுதுகளில்
மெல்லிய உதட்டுச்சாயத்தை
உதிர்த்துக்கொண்டு

அடிமனதில்
சிவப்புப் படர்ந்திருந்த
கீறல்கள்
அந்திமாலையா
அதிகாலையா
கேட்டுக்கொண்டு

வெறும் கால்களோடு
பலதூரம் நடந்தபின்
பின்னால் ஒருவன்
வலதுகைப் பக்கமாக
முந்திக்கொண்டு
'உங்கள் கால்களில்
பலமாய் முட்கள்
தைத்திருக்கு
இரத்தத் தடங்கள்"
என்றவனை ஏறெடுக்க
ஒற்றைக்காலோடு
'தடி' ஏந்திக்கொண்டு
அவன்

அவனுக்கு
'என் இரத்தத்தை
தொட்டு நுகராதே
உன் விரல்களுக்கிடையில்
பிசுபிசுக்கும்
குடும்ப சுமையின்
வெப்பக்கண்ணீர்
வாழாமல் வழியும்
வாழ்க்கை'

6 comments:

Jana said...

வாசித்து முடித்தவுடன் தற்செயலாக வானொலியில் "மூத்தவள் நீ இருந்தால்" பாடல் ஒலிக்கின்றது. மிகப் பொருத்தமாக...

Ramesh said...

@@Jana said...

//வாசித்து முடித்தவுடன் தற்செயலாக வானொலியில் "மூத்தவள் நீ இருந்தால்" பாடல் ஒலிக்கின்றது. மிகப் பொருத்தமாக...//

வாழ்க்கை அது சந்தர்ப்ங்களைக் கொண்டு வலியாகும் வாழ்க்கை

நன்றி அண்ணா

கவி அழகன் said...

சூப்பர இருக்குங்க

Ramesh said...

@@யாதவன் said...
நன்றி யாதவ்

ஹேமா said...

ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான பாரங்கள், வேதனைகள்,
ஏக்கங்கள்.என்ன செய்வது றமேஸ் வாழ்க்கையை ஓட்டிப் போக வேண்டியிருக்கிறதே !

Ramesh said...

@@ஹேமா said...

//ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான பாரங்கள், வேதனைகள், ஏக்கங்கள். என்ன செய்வது றமேஸ் வாழ்க்கையை ஓட்டிப் போக வேண்டியிருக்கிறதே !///

ம்ம் என்ன பண்ணுறது. ஓட்டுவோம் வாழ்க்கையை.

நன்றி ஹேமா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு