Pages

Tuesday, October 12, 2010

வெட்டாதீர் விதையுங்கள்

வீழ்ந்தாலும்
தாவரமாகவே முளைக்க
விரும்புகிறேன்
ஈர விழுதுகள் கொண்டு
உங்களை வாழவைக்கிறேன்

மரம் வெட்டும்
மனிதர்களே!
மரத்துப்போனவர்களே!!
மரமின்றி
மரணித்துபோகிறவர்கள்
நீங்களே!!!

மரம் வெட்டி
விருத்தி காணவேண்டுமெனில்
மனிதம் கொன்று
கல்லறை கட்டுங்கள்

மரம் வெட்டி
கட்டடம் கட்டுவதை விட
மனிதம் கொன்று
கல்லறை கட்டுங்கள்

இறந்தபின் என்னை
தென்னை
மரத்தடியில் புதையுங்கள்
அத்தனை உறுப்புக்களாலும்
உங்களுக்கு உதவுகிறேன் மனிதர்களே!

ஒளிச்சேர்க்கையின்
இலைவாய் வாயுப்பரிமாற்றம் கொண்டு
உயிர்வாழவைக்கிறேன் உங்களை

வெயிலின் வெப்பத்தை
மழையில்லா வரட்சியை
'ஏசி' அறையில், வாகனத்தில்
கனவு காணலாம்
நீங்கள் அனுபவித்த
'வாழ்க்கையை' மறந்துவிட்டீர்கள்
மற்றவர்கள் வாழ்க்கைக்கு
உலைபோடாதீர்கள்
இருக்கைகளுக்காக
மரங்களின் மனிதர்களின்
இருப்பை விலைகொடுக்காதீர்கள்

இப்போதும் சொல்கிறேன்
அபிவிருத்தி எனும் பேரில்
தாவரங்களை வெட்டாதீர்
உங்களைப்போல் அது
'தாமரைகள்' அல்ல

தாவரங்கள்
நிலையாய் நின்று
உலகை (நிலை)நிறுத்தும்
உயிர்ச்சின்னங்கள்

மனதை அகலமாக்குங்கள்
உள்ளம் விருத்தியாகட்டும்

நான் வீழ்ந்தாலும்
ஒரு
தாவரமாகவே
முளைக்க வேண்டும்
இலைகள் கொண்டு
விழுதுகள் கொண்டு
வேர்கள் கொண்டு
உங்களை வாழவைக்கிறேன்



மேலுள்ள படங்கள் மட்டக்களப்பு வாவிக்கரை வீதி இல 1 இன் ஓரங்களில் இருக்கும் மட்டக்களப்பு வாவியின் ஓரங்களில் இருக்கும் மரங்கள். இவற்றை வெட்டி வீதி அபிவிருத்தி செய்யப்படப்போகிறதாம். (இதில் முதலமைச்சர் வாசஸ்தலமும் இருக்கிறது) இவ்வீதிகளை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்குப்பதிலாக, இவ்வீதியை இருபக்க வீதியாக்கப்படுவதை விட ஒரு பக்கவீதியாக (one way)பயன்படுத்தலாம் இம்மரங்களை வெட்டும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து வெட்டாதீர்கள். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

5 comments:

Ramesh said...

@@KANA VARO said...

/// நல்ல பகிர்வு///
நன்றி வரோ

Chitra said...

இவ்வீதிகளை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவதற்குப்பதிலாக, இவ்வீதியை இருபக்க வீதியாக்கப்படுவதை விட ஒரு பக்கவீதியாக (one way)பயன்படுத்தலாம் இம்மரங்களை வெட்டும் எண்ணம் இருந்தால் தயவுசெய்து வெட்டாதீர்கள். சிந்தியுங்கள் செயல்படுங்கள்.

.....அருமையான இந்த கருத்தை வழி மொழிகிறேன்.

Jana said...

பசுமைப்பேர்வைகொண்டு இதயத்தை போர்க்கின்றது கவிதை. இதயங்கள் மலரட்டும். ..மரங்கள் வாழட்டும்.
"மரமின்றி வாழா இவ்வுலகு"

Ramesh said...

@@Chitra said...

/// .....அருமையான இந்த கருத்தை வழி மொழிகிறேன்.///

நன்றி சித்ரா

Ramesh said...

@@Jana said...

/// பசுமைப்பேர்வைகொண்டு இதயத்தை போர்க்கின்றது கவிதை. இதயங்கள் மலரட்டும். ..மரங்கள் வாழட்டும்.
"மரமின்றி வாழா இவ்வுலகு"///

நன்றி ஜனா அண்ணே.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு