Pages

Wednesday, October 20, 2010

ஈரத்தை உடுத்திக்கொள்கிறேன்

உன் பருவ மாறுதல்களில்
அதிகம் ரசிப்பது
என் மேல் படரும்
உன் கால்தடங்களை

என்னை நனைக்கும்
நீ
உன் முழுவல்*
நான் யாசகன்

உனது வருகையை
உறுதிப்படுத்தும்
ஆயிரம் வாற்று
மின்
இலத்திரன் பாய்ச்சலின்
சப்தங்கள்
கண்கள் நிசப்தத்தில்
உன் வருகை பார்த்து

உலர்த்தி வைத்திருக்கிறேன்
உடலையும் உள்ளத்தையும்
வா வந்து
ஈரப்படுத்து
ஒவ்வொரு முத்தத்தால்

உனது கண்ணீரில் மட்டும்தான்
நான் காணாமல் போவேன்

எங்கள் விளைநிலம்
விதையாகும் உயிர்
பயிராகும்
பயிர் உயிராகும்

ஒரு சொட்டுக் குறைவில்லாமல்
என்னைக் கழுவி விடு
மனது இலேசாகும்

உன் பருவ மாறுதல்களில்
உன் கால்கள்
என்மேல் படரணும்
எங்கள் விளைநிலத்தில்
நீ வேரூன்றவேண்டும்



(*முழுவல் - தொர்ந்துகிடைக்கும் அன்பு)

3 comments:

Chitra said...

அழகிய படமும் கவிதையும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

nice...

Ramesh said...

@@ Chitra said...

///அழகிய படமும் கவிதையும்.//
இணையத்தில் சுட்ட படம்.
நன்றி சித்ரா

@@யோ வொய்ஸ் (யோகா) said...

//nice...//

நன்றி யோகா

@@vanathy said...
///
very nice!///
நன்றி வானதி

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு