Pages

Sunday, January 2, 2011

ஆரம்பம், ஆயத்தம் (லெட்ஸ் கோ)

ஆரம்பம்


'வணக்கம்' என்ற சொல் தமிழில் உள்ள சிறப்புச்சொல். இந்த வணக்கம் சொல்ல நேரம் தடை இல்லை. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாரைத் தொடர்பு கொள்கினும் நாம் இலகுவாக வணக்கம் சொல்லலாம். ஆங்கில மொழியில் பேசும் போது நாம் பேசும் நபர்களின் நேரகாலங்களில் வணக்கம் சொல்லும் முறை வேறுபடுகிறது. நாம் ஒருவருக்கு காலைவணக்கம்(Good morning) சொல்லுங்கால் அவருக்கு பின்னிரவுப்பொழுதாக இருக்கும். ஆனாலும் தமிழில் வணக்கம் இந்த நேரகால வேறுபாட்டைத்தருவதில்லை. இது கூட நமது உறவு ஒருவர் சொல்லும் போதுதான் உணர்வானது. (பகிர்வு)

வருடத்தின் முதல்நாள் வாழ்த்துக்கள்


வருடங்கள் வேறுபடுகிறது மொழிகளால்,மதங்களால். உதாரணமாக தமிழ்-சிங்களப் புத்தாண்டு, திருவள்ளுவர் வருடம்,இஸ்லாமிய வருடம். இவ்வாறு வேறுபட்டுக்கொண்டிருந்தாலும் ஆங்கில வருடமே அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது. நமது கலாசாரம், சமயம் என்ற சொல்லுக்கு அப்பாற்பட்டு தொழில்நிமித்தம் நாம் ஆங்கில வருடத்தை பயன்படுத்திவருகின்றோம். ஆதலால் இவ்வருடத்தின் முதல் நாளான நேற்று நாம் நமது சமயம் அல்லது மதம் அல்லது இனம் சார்ந்து இவ்வருடத்தை வரவேற்க்கத் தவறுவதில்லை. அதேபோல் இவ்வருடத்தின் முதல்நாளில் நமது சமயம் அல்லது மதம் சார்ந்து கடவுள் வழிபாடுகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ளாமல் விடுவதும் இல்லை.

ஆக நாம் எம்மதத்தைச்சேர்ந்தவர்களானாலும் இப்புதிய வருடத்தின் முதல்நாளில் வாழ்த்துச்சொல்லக்கூட வெட்கப்படுவதுமில்லை, மறப்பதுமில்லை. இதற்காக நாம் எமது கலாசாரம், மதம் சார்ந்து வாழ்த்துச்சொல்ல அல்லது இப்புதிய வருடத்தைக் கொண்டாட மறுக்கும்போது ஏதோ குறுகிய வட்டத்துக்குள் இருப்பவர்களாகவே எண்ணத்தோன்றுகிறது. இவர்கள் வாழ்த்தாமல் அல்லது இப்புதிய வருடத்தைக் கொண்டா டாமல் பிடிவாதமாய் இருந்தால் மதப்பற்றாளர்களா? அல்லது காலாசார வாதிகளா? ஏன் இப்படி???

வார்த்தைகள் பேசுவதற்கும் காசு கொடுக்கவேண்டும் என்றால் அனேகம்பேர் பேசாமலே இருந்துவிடுவர். இப்படி இருக்கும் போது வாழ்த்துக்கள் என்று சொல்லி மற்றவர் மனதை இலேசாக்குதல் நமது மனதையும் மற்றவர் மனதையும் மகிழ்ச்சிப்படுத்துதல் நல்லதாக இருக்கும் இல்லையா?

வாழ்த்துக்கள் என்பது பிறந்தநாள், புதிய நாள், வெற்றிகள் குவியும் நாள்,... இப்படி பல்வேறு சந்தோசம் தரும் நாட்களில் அவரவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லி மகிழ்ச்சிப்படுத்துதல் உன்னதமான பண்பு என கருதுகிறேன். இதற்கு மதம், இனம் இன்னுமென்னவோ தடையாக இருந்தல் அவசியமன்று. வாழ்த்துச்சொல்லப்படுவதற்கு மற்றவர் யாராக இருக்கவேண்டும் என்பதும் அவசியமல்ல. நமக்கு ஒரு உறவானவராக தேவைப்படுபவராகத்தான் இருக்கவேண்டும் என்று கூட இல்லை. நமது நண்பராக, நமது வயதுக்கு கீழ்ப்பட்டவராக உயர்ந்தவராக என்று கூட இல்லை. யாரோ ஒருவராக இருக்கலாம் வாழ்த்துக்கள் தெரிவிக்க வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டிய தருணத்தில் சொல்லிவிடுங்கள். இல்லையேல் நீங்க சொல்லவேண்டிய நேரம் அவருக்கு அந்த வாழ்த்து பொருத்தமற்றதாகிவிடும். உதாரணமாக பிறந்தநாளைப் பாருங்கள். அன்றைக்குத் தவறினால் அடுத்த வருடம் வரை காத்திருக்கவேண்டும்.

ஒன்றிணைப்பு
நாம் ஒரு சமூகத்தில் வாழும் போது, ஒரு குடும்பத்தில் வாழும்போது, ஒன்றாக ஒரு வேலைத்தளத்தில் இருக்கும் போது... இவ்வாறு சேர்ந்து வாழும் எந்தப்பொழுதுகளிலும் நாமும் முன்னேறி மற்றவர்களையும் சேர்த்துக்கொண்டு போக வேண்டும் அதாவது இழுத்துக்கொண்டுபோகவேண்டும். உண்மையான வெற்றி இதுதான்.
தனி மனிதனொருவன் வெற்றிகாண்பதை விட சமூகம் வெற்றிகாண்பதில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது.

பாருங்கள் நமது நண்பர் ஒருவர் அனுப்பிய ஒரு காணொளி.
உங்களாலும் முடியுமா, முடிகிறதா என்று பாருங்கள், இல்லை என்றால் முயற்சியுங்கள்.

14 comments:

Jana said...

ஆம்...இதுவே உண்மையான வெற்றி.

யோ வொய்ஸ் (யோகா) said...

காத்திரமான கருத்துக்கள்.

காணொளியில் வெளிப்படும் கருத்துக்கள் அருமையானவை.

Ramesh said...

@@ஜனா அண்ணா
நீங்க பதிவுலகத்தில் செய்திருக்கீங்க என்று உணர்கிறேன்.
நன்றி

Ramesh said...

@@யோகா
ம்ம்
நன்றி

Bavan said...

வணக்கம்..:D
வெற்றி உண்மையான வெற்றி..:)

anuthinan said...

இறுதி காணொளி உண்மையில் அருமை அண்ணா!!!! வருடத்தின் முதல் பதிவே அருமையான சிந்தனையுடன் ஆரம்பித்து இருக்கீங்க

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்துக்கள் ஆசிரியரே....

ADMIN said...

நன்றி.. வாழ்த்துக்கள்..!

ஹேமா said...

உங்கள் நிறைவான எழுத்தே உங்களுக்கு வெற்றியைத் தரும் றமேஸ்.வாழ்த்துகள் !

Ramesh said...

@@Bavan said...
நன்றி பவன்

Ramesh said...

@@Anuthinan S said...
நன்றி அனு
இது இரண்டாவது பதிவு

Ramesh said...

@@SShathiesh-சதீஷ். said...
நன்றி சதீஷன்

Ramesh said...

@@தங்கம்பழனி said...
நன்றி பழனி

Ramesh said...

@@ஹேமா said...
நன்றி ஹேமா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு