Sunday, December 27, 2009
யாருக்கோ , ஏதோ எழுதுகிறேன்
ஏதேதோ எழுதுகிறேன்
ஏதாவது அகப்படுமா
என்று
உனக்குத் தான்
என்று
உனக்கு மட்டும் தான்
புரியும் என்பது
உனக்கும் எனக்கும்
தான் தெரியும்
தமிழ்கொன்று
தமிழ் வளர்ப்பதாய்
நம்பச் சொல்கிறார்கள்
மீண்டும் போர்க்களத்தில்
மனிதம் குடிக்கும்
கதிரைக்காக
அவர்கள்
வளர வேண்டும் என்று
நினைத்தேன்
தலை
நரைத்த பின்
வளர்ந்திட்டேன் என்று
நினைத்தேன்
இன்னும்
வாழ்க்கைத் தேங்காயில்
வழுக்கையாய்
நான்
Labels:
கவிதைச் சில்லறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
வாழ்க்கைத் தேங்காயின் வழுக்கை - சுவையான வரிகள்
வாங்க அப்பாத்துரை அண்ண
முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும் நன்றி. தொடர்ந்திருங்கள்
வழுக்கை தேங்காய் கலக்கல் றமேஷ்
இங்கு ர வுக்கு பதில் ற பயன்படுத்துவது ஏனென்று விளக்க முடியுமா?
மிகவும் நன்றாக இருக்கிறது நண்பா...
வாழ்த்துக்கள்...
நான் வந்து போனதுக்கான தடம் பதித்து செல்கிறேன்
உனக்குத் தான்
என்று
உனக்கு மட்டும் தான்
புரியும் என்பது
உனக்கும் எனக்கும்
தான் தெரியும்
எங்களுக்கும் புரிஞ்சுது... ஹி..ஹி..
அருமை RAMESH :))
//வளர வேண்டும் என்று
நினைத்தேன்
தலை
நரைத்த பின்//
வாழ்த்துக்கள் றமேஷ்.....
>>>பிரியமுடன்...வசந்த் said...
நன்றி வசந்த்...
///இங்கு ர வுக்கு பதில் ற பயன்படுத்துவது ஏனென்று விளக்க முடியுமா?///
அதுக்காக ஒரு பதிவு வரும் ஹாஹா..
பெயர் பதிவு வைக்கும்போது இந்த எழுத்து மாற்றத்தை நம்ம பெற்றோர் கவனிக்கல்ல.. எனக்கு 16 வயதானபோதுதான் இது தெரிய வந்தது
>>>kamalesh said...
///மிகவும் நன்றாக இருக்கிறது நண்பா...வாழ்த்துக்கள்...
////
நன்றிங்க..
>>>அஸ்பர் said...
//நான் வந்து போனதுக்கான தடம் பதித்து செல்கிறேன்//
இடம்மாறமல் தொடர்ந்திருங்கள் இருங்கள்
>>>.Balavasakan said...
///எங்களுக்கும் புரிஞ்சுது... ஹி..ஹி..///
புரிய வேண்டியவர்களுக்கு இன்னும் புரியவில்லை
ம்ம்ம்ம்
நன்றி
>>>பலா பட்டறை said...
///அருமை RAMESH :))//
நன்றி சங்கர்
>>>>மகா said...
//வாழ்த்துக்கள் றமேஷ்.....//
நன்றி வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்
Post a Comment