இன்றைய தினம்
நான் ஆசிரியனாக கடமையாற்றும் மட்/ இந்துக்கல்லூரியின் பிறந்த தினம் இதனை "கல்லூரிதினம்" (college day) என்று சொல்லுவோம். இந்துக்கல்லூரி 1946 - 02 - 01 ஆம் திகதி நிறுவப்பட்டது. இதனை நிறுவியவர் அமரர். வி. நல்லையா மாஸ்டர் (1909-07-01 - 1976 - 12- 27, 67 ஆண்டுகள்) அவர்களின் அயராத உன்னத முயற்சியாக உருவானது. அவருக்கு நன்றி சொல்லிக்கொண்டு.. அவரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து இன்றைய தினம் கல்லூரி தினம் கொண்டாடப்பட்டது மகிழ்ச்சி.
அவருக்காக சென்றவருடம் எழுதிய கவிதை
" நூற்றாண்டு கடந்து ஊற்றானவன் நல்லையா மாஸ்டர்"
நூற்றாண்டு கடந்து தமிழ்
ஊற்றானவன்
நல்லையா என்நு மட்டு
நல்லையாவானான்
இவன் பிறப்பு வளர்ப்பு
புளியந்தீவில் படிப்பு
புனித மிக்கேல் கல்லூரியில்
ஆங்கிலத்தில் துறைபோந்தனன்
லண்டன் மெற்றிக்குலேஷன்
கலைப்பட்டதாரியானான்
குடும்பவழியின் சீர்
ஆசிரியர் ஆசைகொண்டு
சென்றான் மகரகம கலாசாலை
வந்தான் பயிற்றப்பட்ட
ஆங்கில ஆசிரியனாய்
வைத்தான் முதல் காலடி
சிவாநந்தா வித்தியாலயத்தில்
ஆசிரியனாய்
உற்றான் நல்லுறவு முத்தமிழ்
வித்தகனிடம் பெற்றான்
கல்வி துறவு உறவு
உருவானான் சமூக
நல் சேவையாய்
கிழக்கின் முதல் ஆசிரியர்
கலாசாலையின் முந்திய
முதலதிபரானான்
அட்டாளச்சேனையில்
சட்டசபைத்தேர்தலில்
பெற்றான் வெற்றி
இருதடவை நின்றான்
தலைநிமிர்ந்து
தேசிய கல்வி நிருவாக
உறுப்பினனான் இலவச
கல்விக்கு ஆலோசனைகள்
ஆக்கியளித்தான்
ஆண்களுக்காய் அரசினர்
ஆசிரியர் பயிற்சி கலாசாலை
மட்டக்களப்பில் உருவாக்கினான்
பெண்களுக்கும் ஆனைப்பந்தி
பாடசாலையில் ஆரம்பித்தான்
சுதந்திர இலங்கையின்
முதல் மட்டக்களப்பு
பாராளுமன்ற உறுப்பினன்
தபால் தகவல் ஒலிபரப்பு
அமைச்சரானான் அப்போதே
தமிழுக்கு இவன்
தலைகுனிந்ததுமில்லை
தேனாட்டுக்கு சேவையில்
பிந்தியதில்லை
கட்டினான் அரசினர் கல்லூரி
அது
இந்துக்கல்லூரியானது
கட்டுவித்தான் வந்தாறுலையில்
மத்திய மகாவித்தியாலயம்
அது
கிழக்குப்பல்கலைக்கழகமானது
கதிரவெளியில் பல பாடசாலைகள்
வாழைச்சேனையில் கடதாசி
தொழிற்சாலை
நாற்புறமும் தபால் கந்தோர்
இவன் தயவால் எழுந்தன
மட்டக்களப்பில்
குளங்கள் புனரமைப்பு
பாதைகள் விஸ்தரிப்பு என
விவசாயத்துக்கு விருத்திகள் பல
போக்குவரத்து வசதிகள்
பாலங்கள் பல கட்டினான்
பாதைகள் அமைத்தான்
மொத்தத்தில்
மட்டக்களப்பை உருவாக்கினான்
நீ நூற்றாண்டு கடந்து
தமிழ் ஊற்றானவன்
வாழீ என்றும்
........
இப்பொழுதாவது மார்புதட்டும் பெருமையானவர்களே பாருங்கள் சேவையின் விருத்தியை இனியாவது படங்களுக்காக மட்டும் முகம் நகைக்காதீர்கள். இறங்குங்கள் களத்தில் சேவைக்காக.....
Tuesday, February 1, 2011
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
நல்லையா மாஸ்டரின் வாழ்க்கை வரலாறும், நினைவு மீட்டலும் அருமை. நல்லையா மாஸ்டர் பற்றி அறியத் தந்த உங்களுக்கும் நன்றிகள் நண்பா.
இப்பொழுதாவது மார்புதட்டும் பெருமையானவர்களே பாருங்கள் சேவையின் விருத்தியை இனியாவது படங்களுக்காக மட்டும் முகம் நகைக்காதீர்கள். இறங்குங்கள் களத்தில் சேவைக்காக.....
......முத்தான வரிகள்!
தனது ஆசானை இன்றளவும் மறவாது நினைவு கூர்ந்த ஒரு ஆசிரியருக்கு ஓர் ஆசிரியனாக எனது நல்வாழ்த்துக்கள்
@@நன்றி நிரூபன்
@@நன்றி சித்ரா
@@நன்றி தர்ஷன்
எனது ஆசான் இல்லை
Post a Comment