Pages

Tuesday, May 10, 2011

இது ஸ்டேடஸ் - 14

"நிஜமான வெற்றி எண்ணங்களைவிட கனமான தோல்விகளில் கண்ணீர் அதிகம்"

"வாழ்த்துச் சொன்னால் என்ன,
சொல்லாவிட்டாலும் உன்மடியினில் என்றும் நான் குழந்தை,
நீ இருக்கும் பொழுதும் இல்லாதபொழுதும்.
உனக்காக
சில கண்ணீரும் கண்ணீர்துடைக்கும் விரல்களும்
எப்பொழுதும் நானாய் .."

"என் கனவும் நிஜமும் ஒன்றுதான் இரண்டும் இருட்டிலேதான்... "
##வாழ்க்கை##

"வியர்வையும் புழுக்கமும் இக்காலத்து வெயிலும் வெக்கையும் சேர்த்து
தடிமலும் இருமலும் கொல்லுதே"

"உனது பிறந்தநாளில் உண்மையில் கொண்டாட்டம் எமக்கு திண்டாட்டம் உனக்கு. ஆனால் இன்று முழுவதும் நீ சந்தோசமாய் இருந்ததை எண்ணி எம் எண்ணம் நிறைவேறிய மகிழ்ச்சி. உன்னை மகிழ்விப்பதே இன்றைய நோக்கம்". ## செய்தோம்##
- மருமகளுக்கு பிறந்தநன்நாள் -

"மகிழ்வுற்ற மற்றொரு நாள் இனிதாக விடைபெறுகிறது."

"எத்தனையோ இறப்புக்களின் மத்தியிலே ஒரு இறப்பு. கொண்டாடப்படுவதற்கா துண்டாடப்படுவதற்கா???
துப்பாக்கிபிடித்த கைகளுக்கு துப்பாக்கி ரவைகளே துர்ப்பாக்கியமாகும்.
அப்படியானால் அகிம்சைவாதிகளுக்கும் துப்பாக்கிரவைகளே காரணமாயின??? "
## கேள்விகளாலே##

"உழைக்கும் கைகளுக்கு வணக்கம்."

"ஒவ்வொரு இரவுகளையும் நேசிக்கிறேன்
கனவு ஆபரணங்களை கழற்றிவிடும் நீ
அணிந்து அழகுபடுத்தும் நான்"

"அண்மைய நாட்கள் மோசமாகவே விடிந்து முடிந்தன. அவ்வப்போது சில சந்தோசங்களை கஸ்டப்பட்டே ஏற்படுத்தப்பட வேண்டியதாயிற்று"

"அவள் அப்படியொன்றும் அழகில்லை.... தேவாலயத்துக்கள் நான். ஆராதானைகள்
கல்யாணத்துக்கு.."

இன்றைய படங்கள்

அண்மையில் இலக்கிய விற்பன்னர் பாலசுகுமார் அவர்களின் தொகுப்பும் அமைப்புமான "கொட்டியாரம்" என்ற வரலாற்று இலக்கியத்தேடல் புத்தக அறிமுக விழாவுக்குபோயிருந்தேன். அங்கு எடுக்கப்பட்ட படங்கள் இன்றை படங்களாக... வலியும் நெகிழ்ச்சியுமாய் இருந்த அந்த புத்தகப்பயிர் நிலத்தில் எத்தனையோ காவியங்களும் தமிழ் இனத்தின் அடயாளங்களும் புதைக்கப்பட்டதை கண்டேன். பொதுக்கென்று கண்ணீர் வந்ததை யாரால் தடுக்கமுடியும்...









7 comments:

ம.தி.சுதா said...

மருமகளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்தக்களும் சேரட்டும் அண்ணா... அமமாக்கான ஸ்டேடஸ் சூசூப்பர்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் மலர் விழியை கண்டிங்களா ?

Chitra said...

எப்படி இருக்கீங்க? நலமா? படங்கள் - பதிவு நல்லா வந்து இருக்கின்றன.

சென்னை பித்தன் said...

"ஒவ்வொரு இரவுகளையும் நேசிக்கிறேன்
கனவு ஆபரணங்களை கழற்றிவிடும் நீ
அணிந்து அழகுபடுத்தும் நான்"//
ரொம்ப நல்லாருக்கு!

ஹேமா said...

றமேஸ்....சுகமாயிட்டீங்களா?

தொடக்கம் முதல் முடிவு வரை உணர்வும் நிஜமும் கலந்த வரிகள் !

Unknown said...

நல்லதொரு பதிவு ரமேஸ் தம்பி. தங்களை கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துக்கள் தொடருங்கள்.

Subramaniyam said...

Oh fantastic Ramesh anna...

ரிஷபன் said...

வாழ்த்துச் சொன்னால் என்ன,
சொல்லாவிட்டாலும் உன்மடியினில் என்றும் நான் குழந்தை,
நீ இருக்கும் பொழுதும் இல்லாதபொழுதும்.
உனக்காக
சில கண்ணீரும் கண்ணீர்துடைக்கும் விரல்களும்
எப்பொழுதும் நானாய் .."

சபாஷ்..

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு