Pages

Friday, May 20, 2011

இது ஸ்டேடஸ் - 15

"எதையும் சிறப்பாகவும் பொருத்தமான நேரத்திலும் செய்யக்கூடிய செயல்தகு நிலை எம்மில் வளரவேண்டும். வெற்றியும் மகிழ்ச்சியும் மலரும்."

"நீயாக அழைக்காமல் நானாக வந்து வினையாகேன்...
இலவசத்துக்கு மதிப்பில்லை. சொற்களுக்கும் காசுவேண்டும் விற்கப்படவேண்டும் அப்போதுதான் ஏற்றுக்கொள்ளப்படும் உலக நடைமுறை "
##நிதர்சன உண்மை##

"உன் மகிழ்ச்சியில் என்னை சேர்த்துக்கொண்ட நீ
உன் துன்பத்திலே நானே சேர்ந்துகொள்வேன்..
ஆதலால் உன் அழுகையை பகிர்ந்து கொள்கிறேன்."

"........... கடல்
........... வாய்க்கால்
உயிர்.. தமிழ்..
இடைவெளிகளிலும் மூன்றெழுத்துக் கொண்டே நிரப்பிக்கொள்வேண்டி இருக்குது..
கண்ணீர் அஞ்சலி.."

"விசாக வெண்மதி
கடற்கரை நிம்மதி
அலைகள் ஊடுருவும் சங்கதி
சொல்லும் சேதி என்ன
காற்றில் கரைந்த உள்ளங்களுக்கு வணக்கம்

"என்வீட்டு தூரிகை சுவரை புழுதிபடியச் செய்கிறது அடுத்த வீட்டு வர்ணச் சித்திரத்தை கேலி செய்து.."
##வாழ்க்கைக்கோலம்##

"மணல்வீடுகட்டி கடற்கரையோரத்தில் கால் புதைத்து நடந்து.. மணல்களால் கைகள் கழுவி... நானும் மருகளும்.. இனிய சூரியப்பொழுது ஆரம்பம்.."

"நீ பார்த்த பார்வையில் (கெ)கட்டியானது
என்னுள் இருந்தபோது திவலைகளாய்
போனபின்தான் ஆவியாகிறது
காதல்"
#பெளதீக நிலைமாற்றம்##

"எழுத்துக்கள் என்னை அடயாளப்பாடுத்தும்
உனக்கான எழுத்துக்கள்
காதலை அழகுபடுத்தும்"

"ஒருவரின் தோல்வி கொண்டாடப்படமுடிகிறது. இன்னொருவர் வெற்றியை ஏற்கவும் முடியவில்லை. இரண்டும் இலங்கைத் தமிழ் என்ற நினைப்பில். அப்போ இலங்கைத் தமிழரெல்லாம் உத்தமர்தானா என்கிறகேள்வியும்.."

"உனது வலிகளிலும் வழிகளிலும்
இன்பங்களிலும் துன்பங்களிலும் அத்தனையுமாய்
எனக்கான சில கடப்பாடுகளோடு உனக்காக இருப்பேன்
நண்பேன்டா"

"வசந்தன், பறைமேளம், வடமோடி, தென்மோடி என பழந்தமிழ் மரபுக்கலைகள் பற்றிய நல்லதொரு சம்பாசணை சதாகரன் அண்ணாவுடன் இனிதான மொட்டைமாடி நிலாப்பொழுது கரைந்தது ஒரு மணிநேரம்"

"யாரோ ஒருவர் வந்தார் யாரோ ஒருவரைக் கேட்டார். யாரோ ஒருவர் உங்ககிட்ட சொல்லவில்லையா என்றார், மீண்டும் நீங்க யார் என்றேன் அப்போதும் அவர் அந்த யாரோ ஒருவர் தான் உங்களை சந்திக்க சொன்னாரே என்றார்.
கடைசியில் நான் " வந்ததற்கு நன்றி சென்றுவருக" என்றேன்."

"'என்னை இலகுவில் மறக்கமாட்டேன்' சொல்லுகிறாய் நீ...
முகப்புத்தக நட்பிலா
உளப்புத்தக நட்பிலா? வந்தது"
... #சந்தேகப்பேர்வழிகள்#

"வெற்றிகளையும் சிறப்புக்களையும் கண்டு ஓளித்துக்கொண்ட புன்சிரிப்பில் வாழும் மனிதர்கள் குறைகளின் போது மட்டும் வாய்திறந்து பேசுவதால் என்னபயன்.??
*நிறைகளில் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் போது நீ பிறரது குறைகளையும் குற்றங்களையும் சொல்லும்போது அவை ஏற்றுக்கொள்ளப்படும்."


"அண்ணா ஒருவர் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் சில வரிகள்:
"சிதறல்கள் & தேனலை" (நான் கற்ற பாடசாலை, என் ஆசிரியர்கள், நான் வணங்கிய கோவில்கள், நான் சுற்றிய கடற்கரை மற்றும் குளத்தோரம் ஆக என் கண்கள் கலங்கின ) ...."

இன்றைய படங்கள்
எனது மருமகள் எனது விடுமுறைக் காலையில் கடற்கரையில் நானும் அவளும்


நடைபயிலல் மருகள்


12 comments:

நிரூபன் said...

கடல்
........... வாய்க்கால்
உயிர்.. தமிழ்..
இடைவெளிகளிலும் மூன்றெழுத்துக் கொண்டே நிரப்பிக்கொள்வேண்டி இருக்குது..
கண்ணீர் அஞ்சலி.."//

பூடகமான ஸ்டேட்டஸ் இல் பல வரலாறுகள் புதைந்துள்ளன.
கண்ணீரை மட்டும் தான் காணிக்கைகளாக முடிகிறது சகோ

நிரூபன் said...

கடல்
........... வாய்க்கால்
உயிர்.. தமிழ்..
இடைவெளிகளிலும் மூன்றெழுத்துக் கொண்டே நிரப்பிக்கொள்வேண்டி இருக்குது..
கண்ணீர் அஞ்சலி.."//

பூடகமான ஸ்டேட்டஸ் இல் பல வரலாறுகள் புதைந்துள்ளன.
கண்ணீரை மட்டும் தான் காணிக்கைகளாக முடிகிறது சகோ

நிரூபன் said...

விசாக வெண்மதி
கடற்கரை நிம்மதி
அலைகள் ஊடுருவும் சங்கதி
சொல்லும் சேதி என்ன
காற்றில் கரைந்த உள்ளங்களுக்கு வணக்கம்//

சந்தம் கலந்த கவியாய், இந்த ஸ்டேட்டஸ் சரித்திரத்தை உரைக்கிறது சகோ.

Chitra said...

கடற்கரை மணலில்...... கவிதையாய் மிளிரும் படங்கள். அருமைங்க

தமிழ் உதயம் said...

மெல்லிய சோகம்... கொல்லும் ஞாபகம்...
சொல்லும் கவிதை - படங்களுடன் சிறப்பு.

Mohamed Faaique said...

//"உன் மகிழ்ச்சியில் என்னை சேர்த்துக்கொண்ட நீ
உன் துன்பத்திலே நானே சேர்ந்துகொள்வேன்..
ஆதலால் உன் அழுகையை பகிர்ந்து கொள்கிறேன்.///
நல்லாயிருக்கு...

புகைப்படங்களில் Caption மாறி விட்டது என்று நினைக்கிறேன். சரி செய்து விடுங்கள்

A.R.ராஜகோபாலன் said...

உன் மகிழ்ச்சியில் என்னை சேர்த்துக்கொண்ட நீ
உன் துன்பத்திலே நானே சேர்ந்துகொள்வேன்..
ஆதலால் உன் அழுகையை பகிர்ந்து கொள்கிறேன்."

காதலின் மகத்துவமும்
நட்பின் நிதர்சனமும்
சொன்ன வைர வரிகள்

ஹேமா said...

இதய அஞ்சலிகள் உட்பட ஒவ்வொரு சொற்களுக்கும் மதிப்பு உங்கள் ஆரோக்யமான வார்த்தைகளில்.
மருமகள்தான் உங்களுக்கு ஆறுதல்போலும்.நடையை உங்களைப்போலவே பழக்குங்கள் றமேஸ் !

Unknown said...

@"அண்ணா ஒருவர் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலின் சில வரிகள்:
"சிதறல்கள் & தேனலை" (நான் கற்ற பாடசாலை, என் ஆசிரியர்கள், நான் வணங்கிய கோவில்கள், நான் சுற்றிய கடற்கரை மற்றும் குளத்தோரம் ஆக என் கண்கள் கலங்கின ) ...."//

அன்புக்கு நன்றி தம்பி

Unknown said...

@ இன்றைய படங்கள்
எனது மருமகள் எனது விடுமுறைக் காலையில் கடற்கரையில் நானும் அவளும்.



ஓ! சந்தோசம் பகிர்வுக்கு நன்றி

கார்த்தி said...

/* விசாக வெண்மதி
கடற்கரை நிம்மதி
அலைகள் ஊடுருவும் சங்கதி
சொல்லும் சேதி என்ன
காற்றில் கரைந்த உள்ளங்களுக்கு வணக்கம்
*/
டச்சிங் லைன்ஸ்!!
மருமகளின் படம் நன்றாயிருந்தது!!

Ramesh said...

நன்றி நிரூபன்
நன்றி சித்ரா
நன்றி தமிழுதயம்
நன்றி ராஜகோபாலன்
நன்றி ஹேமா
நன்றி மகாதேவன் அண்ணே
நன்றி ரத்னவேல் ஐயா
நன்றி கார்த்தி
நன்றி மொகமட் : நீங்கள் சொன்னது உண்மை

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு