Pages

Monday, June 6, 2011

இது ஸ்டேடஸ் - 17

""சில நேரங்களில் சில முடிவுகள் நமக்கே அபத்தமாக தோன்றும். அவசரத்திலும் அடுத்தவர்களோடு சேர்ந்தும்..
நிதானமும் நம்பிக்கையும் சில வேளைகளில் தவிறிப்போகின்றன நம்மைப்போல சுற்றியுள்ளவர்களை ஒரே(?) வரிசையில் நோக்கும் போது....
வேறுபாடுகள் அன்பில் தெரிவதில்லை..""

"தோல்வியை காதலிக்க கற்றுகொள் ...இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு....."##நண்பனொருவனின் ஸ்டேடஸ்.. ##

"தமிழ்சங்க கலந்துரையாடல் விபுலாநந்தர் முத்தமிழ் விழாவை ஒட்டி.. திருப்தி.
அங்கே வித்துவான் ஞானரெத்தினம் ஐயாவும் வருகை தந்தது மகிழ்ச்சி.
தமிழ்மொழி வாழியவே..."


""நீ கேள்வியோடு குந்தியிருப்பதே விடைசொல்ல முடியாத , விடைகளைத் தேடாத வாழ்க்கை வாழ்கின்றாய் என்று தானே அர்த்தம்.""

"உன் கடலைக்கு நான் இலக்கானதைப் பற்றி கவலையைவிட
உனக்கு இஸ்டப்பட்ட வாழ்க்கை கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி"

"புலனாய்வு என்ற சொல்லே ஒரு சந்தேகமும் அதனால் அதுதொடர்பான சந்தேக ஆராய்ச்சியும் அதை நிரூபிக்கும் செயலே.."

"தடுமாற்றம் என்பது ஒரு உள்மன மாற்றத்தினாலேயே தானே.."

இப்பொழுதும் சொல்லுறேன் கேளுடி
" நீ என்னை விரும்பணும் என்பது அவசியமில்லை. இதுவரை நீ என்னோடு பழகிய அன்புகளுக்காக நான் எப்பொழுதும் உன்னை நேசிப்பேன் நீ போனால் என்ன இருந்தால் என்ன
நேசிப்பு ஒன்றுதான்." மாற்றம் எனக்கில்லை உனக்குள் தான்

"எத்தனையோ சப்தங்களின் பின்னர் தான் நிசப்தங்கள் வரும் என்பது உண்மை. அத்தனை சத்தங்கள் போட்ட உடல் களைப்படைந்து புத்துணர்ச்சி ஏற்படவேணும் அதுவரை நிசப்தங்களே சிறந்தது. ஆகவே சப்தங்கள் தேவை. பொதுவாக மெளனங்களிலே அனேகமானவை எழுதப்படும்"

"இந்த கணணித்திரை கற்பனைத் திரை தானே.. இதை ஆவணத்தில அடக்கலாமா... அப்போ புத்தகம் ஆவணம் என்பது.##டவுட்டு##
(கற்பனையிலே இவ்வளவா... )"

"எல்லோரும் திறவுங்கள் என்று சொன்னால் யார் பூட்டி இருக்காங்க.... ##டவுட்டு##"

"நேசி...
நேசிக்கப்படுவாய்...
ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதானே வளர்ச்சி...."- பாடலும் அனுபவமும்.

"குறள் 140:
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
முதுமொழி:
அம்மணமான ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்..
##???##"

"அன்பு அளவிடலில் அலகு இல்லை
உணர்வுகளால் மட்டும் கலக்கும் உறவு அது.."

"ஊர் சுத்துகிறேன் பாடல்கேட்டுக்கொண்டு.நடை நடையாய் ஒரு பின்னேரப்பொழுது.. அழகிய கிராமச்சூழல்"

" இந்த இரவு மணித்தியாலங்கள் நிமிடங்களாக முடியாதா?
என் தயாயின் மடியிலும் தந்தையின் நெஞ்சத்திலும் முகம் புதைக்க"
##பேரூந்துப்பயணத்தின் போது##

"ஓ.. சூரியனே கொஞ்சம் பொறு நான் வந்து ஒளிர்கிறேன் நாளை. நான் ஆரம்பித்துவிட்டேன்..."

இன்றைய படங்கள்
நம்ம ஊரின் சில காட்சிகளும் மருமகள்மாருடன் கடற்கரையும்...







12 comments:

Mohamed Faaique said...

photos சூப்பர்... கடைசி இரண்டு போட்டோவும் கவிதை..

SShathiesh-சதீஷ். said...

சூப்பர்

Bavan said...

//"தோல்வியை காதலிக்க கற்றுகொள் ...இறுதிவரை வெற்றியுடன் வாழ்வதற்கு....."##நண்பனொருவனின் ஸ்டேடஸ்.. ##//

#படித்ததில்_பிடித்தது :-))

படங்கள் = NICE :-))

Jana said...

ம்ம்ம்... உங்கள் சமுக இணைய நிலைகள் எப்போதுமே கருத்தாழம் அமிக்கவைதான்.
இறுதியில் இருக்கும் அந்த சின்ன தேவதைகள் அழகுக்கு ஒரு அழகு..

Ashwin-WIN said...

//இந்த இரவு மணித்தியாலங்கள் நிமிடங்களாக முடியாதா?
என் தயாயின் மடியிலும் தந்தையின் நெஞ்சத்திலும் முகம் புதைக்க" //
மிகவும் பிடித்தது..
படங்களை களவாடுகிறேன். குறை நினைக்க வேணாம்.

ASHWIN WIN
Ashwin Winபெண் கண்டார் பெண்ணே கண்டார் - அடிச்சுடாதேங்கோ...

ஹேமா said...

உங்கள் அனுபவ வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும்.விடைகளைத் தேடாத வாழ்க்கை வாழ்வதின் அர்த்தம் அருமை.பசுமையான படங்களும்கூட !

test said...

வழமை போலவே அட்டகாசம் பாஸ்! நிறைய யோசிக்க வைக்கிறீங்களே! :-)

போட்டோக்கள் அருமை! அவ்வளவு அழகான ஊரா பாஸ்? நான் வந்ததேயில்லை!

Unknown said...

உண்மையில் தேனூரின் அழகு ஒரு தனியழகுதான்.


படத்தில் முதல்க்கானும் மழலை கௌரி அக்காவின் மகளா தம்பி ?

Unknown said...

@ "சில நேரங்களில் சில முடிவுகள் நமக்கே அபத்தமாக தோன்றும். அவசரத்திலும் அடுத்தவர்களோடு சேர்ந்தும்..
நிதானமும் நம்பிக்கையும் சில வேளைகளில் தவிறிப்போகின்றன நம்மைப்போல சுற்றியுள்ளவர்களை ஒரே(?) வரிசையில் நோக்கும் போது....
வேறுபாடுகள் அன்பில் தெரிவதில்லை..""

ஆம்!!

Ramesh said...

@@ நன்றி மொகமட் - அதே.
@@ நன்றி சதீஷ் - வருகை இன்பம்
@@ நன்றி பவன் - :)
@@ நன்றி ஜனா அண்ண - அழகே
@@ நன்றி அஸ்வின் - சரி
@@ நன்றி ஹேமா - திருப்தி
@@ நன்றி ஜீ - கிராமங்கள் என்றும் அழகு
@@ நன்றி மகாதேவன் அண்ணே - ஆமாம் சின்னவள் கெளரி அக்கா பிள்ளை. பெரியவள் கவிதா அக்கா பிள்ளை.

Vathees Varunan said...

ஆஹா அருமை

ARV Loshan said...

""நீ கேள்வியோடு குந்தியிருப்பதே விடைசொல்ல முடியாத , விடைகளைத் தேடாத வாழ்க்கை வாழ்கின்றாய் என்று தானே அர்த்தம்.""
//
ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் யாரும் இல்லை :)

//"எல்லோரும் திறவுங்கள் என்று சொன்னால் யார் பூட்டி இருக்காங்க.... ##டவுட்டு##"//
ஹா ஹா.. பூட்டி இருக்கிறவங்க தான்..

படங்கள் அழகு,.. கிராமத்தின் தூய்மையும் இயற்கையும் மனத்தைக் கொள்ளை கொள்கிறது

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு