யார் யாரெல்லாம்
என் தெருவில் இப்பொழுது
என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை
உன்னைச் சூழ்ந்துகொண்டதே
சுத்திகரிக்கபட வேண்டிய காற்று
நான் சுவாசிப்பதே
உயிர்க்காற்று
உன்தன் சாலைகளில்
சலவை செய்யவேண்டிய
மனிதர்கள் அதிகம்
இங்கே
சேறுகளில் கால்கழுவி
வேர்த்து உழைத்து
மனம் சிரித்து
முகம் விரிக்கும்
கைகள் ஆயிரம்
என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை
நீ வந்து போ
நான் உன்னையும் நேசிப்பேன்
ஆனாலும் உன்வருகை
இயல்பாக இருக்கவேணும்
என் தெருவில் இப்பொழுது
என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை
உன்னைச் சூழ்ந்துகொண்டதே
சுத்திகரிக்கபட வேண்டிய காற்று
நான் சுவாசிப்பதே
உயிர்க்காற்று
உன்தன் சாலைகளில்
சலவை செய்யவேண்டிய
மனிதர்கள் அதிகம்
இங்கே
சேறுகளில் கால்கழுவி
வேர்த்து உழைத்து
மனம் சிரித்து
முகம் விரிக்கும்
கைகள் ஆயிரம்
என் தெரு
உணர்வுகளால் ஆனது
சாயங்கள் பூசப்படாத சாலை
நீ வந்து போ
நான் உன்னையும் நேசிப்பேன்
ஆனாலும் உன்வருகை
இயல்பாக இருக்கவேணும்
4 comments:
சாயங்கள் இல்லாமல் உணர்வுகளுடன் ஒரு சாலை. சுவாசிக்க ஜீவனுடன் உயிர்க்காற்று.இனிமையான வாழ்க்கை. அனைவருக்கும் அவசியமான வாழ்க்கை
மனித நிறங்களால் மிதி பட்டும். வண்ணம் மாறாத சாலைகள். . .அருமையான சிந்தனை. . .
மனிதனை மனிதம் நிறைந்த மனிதனாக்க நினைக்கிறீர்கள்.
நல்லது றமேஸ் !
தெருவுக்கு பெயர் வையுங்க சார்! முதலில!
Post a Comment