"புலரும் பொழுதுகள்
தானாய் விடியலுறும்.
மனதிலும் எண்ணத்திலும்
வரவேண்டும் 'விடியல்'
வெளிச்சமாக்குங்கள் உள்ளத்தை
புலர்ந்துகொள்ளலாம்"
"யாரை நோக்கி கல் வீசப்படுகிறதோ அவரை நோக்கியதாக இருக்கணும் ஆக மற்றவர்களை நோகடிக்கப்படாது"
"புகைந்து கொண்டிருப்பதை விட
எரிந்து விடுவது மேல்....
எனக்குள் நீயும் (நானும்)
உனக்குள் நானும் (நீயும்) "
..............எங்கேயோ படித்தது அதனுடன் நானும் சேர்ந்து............
"ஒவ்வொரு
பார்வைகளிலும்
அவஸ்த்தை
நீ
சாலையில் போகிறாய்
கண்களை கழற்றிவிட்டு"
"வாழ்க்கையைப்பற்றி தெரிந்து கொள்ள,
முதலில் மற்றவர்களின் கஸ்டத்தை புரிந்துகொள்ளுங்கள்,
மனசு நெகிழும் போது நமது கஸ்டம் சிறிதாகிடும்"
"சட்டவாக்கம் சட்டம் உருவாக்குவதை விட பரஸ்பர நம்பிக்கையையும் பங்காண்மையையும் எற்படுத்தி நல்லுறவு மூலம் ஆட்சி வேண்டும்"
"எத்தனை வேலைப்பளு
தொல்லைகள் ஆயிரம்
ஆனாலும் உன்
மூன்றுபக்க கடிதத்தை மட்டும் படித்து
மூன்று சொற்களில்
மனசை சுருக்க முடிகிறது
'ஆதாமின் அப்பிளால்'"
"அந்த ஏரியா இந்த ஏரியா எல்லா ஏரியாவிலயும் ஐயா கில்லி கில்லி உன் மனசத் தவிர.."
"செய்த தவறை ஒத்துக்கொள்ளணும் அதற்காக எத்தனை முறை வாதிட்டாலும் தவறு சரியாகிய வரலாறு இல்லை. "
"முடிந்தவரை மற்றவர்களின் கருத்துக்கு செவிசாய்க்கும் போதே உங்களுடைய கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்"
என் மருமகள் என் மாமாவோடு
Saturday, September 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
ம்
//"வாழ்க்கையைப்பற்றி தெரிந்து கொள்ள,
முதலில் மற்றவர்களின் கஸ்டத்தை புரிந்துகொள்ளுங்கள்,
மனசு நெகிழும் போது நமது கஸ்டம் சிறிதாகிடும்"
//
enakku pidiththathu
இம்முறை ஸ்டேட்டஸ் அனைத்துமே கலக்குது.. எல்லாமே பிடித்திருக்கு..:)
@@@நன்றி யோகா
@@@நன்றி அனு பித்திருக்கு என்பதை விட செயல்படுங்கள்
@@@பவன் நன்றி
Post a Comment