இன்றைய தினம்
நவராத்திரி விழாவின் இறுதிப்பொழுதுகள் அன்னை சரஸ்வதிக்கு பூஜை பண்ணும் கடைசிப்பொழுது.
நான் வீட்டுக்கு வெளியில் ஒரு பயிற்சிப்பட்டறைக்காக இருப்பதால் இந்த உல்லாச விடுதியில் எப்படி இத்தினதைக் கடப்பது. ஆயினும் வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த முறைமையின் படி மனதை ஒருமித்து ஒரு சிலநிமிடங்கள் செலவழிக்க முடிந்தது மகிழ்ச்சி.
நாளை விஜய தசமி தினம். இந்து மக்கள் யாவரும் அறிந்த வித்தியாரம்பிக்கும் தினம். இதுபற்றி சில மனசுக்குள் தொக்கும் வரிகளை விதைக்கிறேன்
"எழுத்தறிவித்தல் இறைவனின் செயல்" என்று சொல்லுவர். எமது பிள்ளைகளுக்கு இத்தினத்திலே அனேகமாக நாம் எழுதப்பழக்கிக் கொடுக்கிறோம். ஆனால் இத்தினத்துக்கு முன்னமே நமது பிள்ளைகள் எழுத ஆரம்பித்துவிடுவர். ஆனால் சமய சம்பிரதாயம் என்ற ஒரு சடங்கு முறைகளுக்காகவே நாம் இச்செயலை செய்கிறோம்.
இதை தவிர்க்க என்ன செய்யலாம். நமது பிள்ளை இரண்டு அல்லது இரண்டரை வயதுகளிலே எழுத ஆரம்பிக்கும் நாம் ஏதாவது படிக்கும் பொழுது எழுதும் பொழுது அந்தப்பிள்ளையும் வந்து படிக்க எழுத ஆரம்பிக்கும் ஆனால் அவர்களை அந்த செயலுக்கு விடாமல் சில பெற்றோர் "உனக்கு ஏடு தொடங்கல நீ இப்ப எழுதாத" என்று அவர்கள் கல்வி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியிட வேண்டாம். அவர்கள் இரண்டு வயது ஆகினால் என்ன இரண்டு வயதுக்கு முன்னமே எழுத்தறிவிக்கலாம் இல்லையா. அப்பிள்ளைக்கு நான்கு ஐந்து வயது வரை காத்திருக்க வைக்காமல் எழுத ஆரம்பிக்க ஏடு தொடங்கணும் என்று முழங்குகிறேன்.
விஜயதசமி என்றால் ஏடு தொடங்கும் நாள் மட்டுமா. இது வித்தியாரம்பிக்கும் நாளும்மல்லவா.
இயல் இசை வாத்தியம் என்று எந்த நற்செயலானாலும் அவற்றை ஆரம்பித்தவிடுங்கள். விதைகளைப் பார்க்கும் போது தெரியாது அதன் விருட்சம். வளர்த்துவிட பிள்ளைக்கு வித்தியாரம்பித்துவிடுங்கள்.
நவராத்திரி விரதம் எனது பழைய பதிவு இங்கு காண்க
ஒரு கவிதை
'அன்னையே உன்னை
ஆராதிக்கிறேன்
அரிசியில் அகரம்
எழுதிய நாள்
முதலாய் தமிழாகி
தலையாயினன்
கற்றுக்கொண்டனன்
வழிகாட்டி நீ என்பதால்
மொழியானேன்
இன்பத் தமிழானேன்
சொல்லிவிடு எழுதிவிடு
எழுதாமல் இருக்கும் எல்லோருக்கும்
இயல் இசை எழுத்து என்று
ஏடு தொடங்கிவிடு
யாவருக்குமாய்
உணர்கிறேன்
என் குரல்வழியை விடசொல்லில்
விரல் வழியாய் விளைந்தவன்
ஆதலால்
அன்னையே வணங்குகிறேன்"
எமது மண்ணின் படைப்பு
இதுவும் எனது ஊரின் அண்ணா தணிகசீலன் அவர்களால் ஆகுகின்ற படைப்புக்கள். இங்கே சமயம் கிராமம் பாட்டு என்று பலவற்றை தரவேற்றம் செய்கிறார். நவராத்திரிப்படைப்பு இங்கே வெள்ளிச்சரம்
ஒரு பாடல்
எங்கே செல்லும் இந்தப்பாதை
பாருங்க சேது படத்திலிருந்து ஒரு பாடல். என் மனதை உருக்கி பல தடவைகள் கேட்டுக்கேட்டு கிறங்கி அழுத பாடல் இப்போதும்கேட்கும் போது மனதை என் பழைய சில நிகழ்வுகளை நெருக்கிவிடும் உணர்வு உயிரின் ஆழத்திலிருந்து சென்று மேலெழந்து கண்ணீரைச் சொரிந்துவிடும்.
என்பாதையின் வழியில் பிதற்றிய சில பொழுதுகள். நண்பன் ஒருவனுடன் கொண்ட மாறுதல்களின் விளைவினால் நான் பட்ட கஸ்டம். ஆனால் இங்க இந்தப்பாடல் காதல் என்று விதைக்கிறது. நான் இதை நட்பு என்று சொல்மாற்றிப்படித்தேன்.
எங்கிருந்தாலும் அவன் நல்லா வாழவேண்டும். அவனால் தான் எனது முன்னேற்றங்கள் வர்க்கங்களாயின. அவனை யாருக்கும் பிடிக்காமல் போகும் எனக்கு எப்போதும் பிடிக்கும்.
"நட்பின் நீளங்கள் புரியாவிட்டாலும் அதன் தாகம் உணர்வாய் ஒருநாள் "
Saturday, October 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
நல்ல பகிர்வு நண்பரே .. நவராத்திரின்னு சொல்லீட்டு சேது பாட்டு போடுறீங்க ...
இதையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம் .
http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html
//நவராத்திரின்னு சொல்லீட்டு சேது பாட்டு போடுறீங்க ...//
Yes...அதுதான் வழியும் வலியும்.
@@S.Sudharshan said...
///நல்ல பகிர்வு நண்பரே .. நவராத்திரின்னு சொல்லீட்டு சேது பாட்டு போடுறீங்க ...
///
நன்றி நண்பரே. இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்வு அதுவே இயல்பு.
/// இதையும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்///
தெரிந்துகொண்டேன். பகிர்வுக்கு நன்றி
@@யோ வொய்ஸ் (யோகா) said...
// :)//
புன்சிரிப்பின் ஒலிபுகள்
நன்றி யோகா
@@Jana said...
//நவராத்திரின்னு சொல்லீட்டு சேது பாட்டு போடுறீங்க ...//
//Yes...அதுதான் வழியும் வலியும்//
அதே அதே...
நன்றி அண்ணே
Post a Comment