"கனவு காணுங்கள்" என்ற மந்திரச் சொல்லின் ஆத்ம புருஷர் என்றே அழைக்கலாம் நமது டாக்டர் அப்துல் கலாம் அவர்களை. எப்போதும் புத்துணர்ச்சியையும் சிந்திக்க வைக்கும், செயல்படத்தூண்டுகிற கருத்துக்களை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கும் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் சிந்தனைகளில் எழுந்தவைகளை (படித்தவற்றில்)பகிர்ந்துகொள்கிறேன். வாசியுங்கள் செயல்படுங்கள். செயல்படுவோம்.
இளையதலைமுறையினருக்காக அவர் சொன்ன விடயங்கள் எனக்குப் பிடித்தவைகளில் சில
தேடல்
உங்கள் மனதில் உள்ள ஆர்வத்தீயை வளர்த்துக்கொள்ளுகள். பெரியவர்களைப் போல் நீங்களும் தொலைநோக்குடையவராய் இருங்கள். அவர்கள் காட்டும் வழியில் நடக்கவேண்டும். நேர்மை என்பது மக்களின் உயரிய குறிக்கோளாக இருக்கவேண்டும்.
உயர்வு
உங்கள் எண்ணம் உயர்ந்ததாயிருந்தால்தான் நீங்கள் வாழ்வில் உயரமுடியும். கடுமையான உழைப்பு, உறுதியான இலட்சியம், அஞ்சாமை மூன்றும் உங்களிடம் இருந்தாக வேண்டும்.
ஒரு பொறியியலாளராகவோ, மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ தான் நீங்கள் வரவேண்டுமா? ஏன் ஒரு தொழிலதிபராகக்கூடாதா? எல்லோருக்கும் வேலை தருவது அரசால் இயலாது. எல்லாருக்கும் அரசு வேலை கிடைத்துவிடாது. நாம் ஒரு தொழிலதிபராக வர வேண்டும் என்று கனவு காணுங்கள் பலருக்கு உங்களால் வேலை கிடைக்கும். எதையும் சமாளிக்கும் திறமையை நீங்கள் வளர்த்துக்கொண்டால் அத உங்களால் முடியக்கூடியதுதான்.
போராடுங்கள்
பிரச்சனை வரும்போது எதிர்கொள்ளத் தயங்காதீர்கள். கடுமையாய் எதிர்த்துப் போராடுங்கள். பிரச்சனையின் பிடியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அது உங்கள் பிடியில் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பிரச்சனையை வெல்ல இதுவே சிறந்தது.
புனிதப்பணி
நான் ஆசிரியர்ப் பணியைப் பெரிதும் நேசிக்கிறேன். ஆசிரியர்கள் தாம் இளைய தலைமுறையினரின் வளர்ச்சிக்கு வழிகாட்டுபவர்கள். ஆயிரமாயிரம் பேரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கிறார்கள்.
வெளிநாட்டில் வேலை
நம் நாட்டிலிருந்து பல பொறியிலாளாகள், மருத்துவர்கள், இன்னும் பல அறிவியல் நிபுணர்களும் வெளிநாடுகளில் வேலை தேடிச் செல்கிறார்கள். இந்நிலை மாறவேண்டுமானால் இலட்சக்கணக்கில் வேலைவாய்ப்புக்களை நம் நாட்டில் நாம் உருவாக்க வேண்டும்.
கடமை
நன்கு படிப்பது மட்டும் மாணவர்களின் கடமையாகிவிடாது. தங்களுடைய சுற்றுப்புறத்தைப் பசுமையாக வைத்துக்கொள்கிற, சுற்றியிருப்பவர்களின் அறிவை மேம்படுத்துகிற கடமையும் அவர்களுக்கிருக்கிறது. ஒவ்வொரு மாணவனும் இரண்டு மரக்கன்றுகளை நடவேண்டும். படிப்பறிவில்லாத இரண்டுபேருக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க வேண்டும்.
மேலுள்ள விடயங்கள் நமக்கு அவசியம் ஒரு உந்துசக்தியைத் தரும் என்பது திண்ணம். கொஞ்சம் நான் இதையும் சொல்லலாம் என்று தோன்றுது.
போர் என்ற சூழ்நிலையால் எதை எதை இழந்தோம் என்று எண்ணிப்பார்க்க முடியாத வடுக்களின் காயத்தை ஆற்றிக்கொள்ள வேண்டிய நிலையில் நாம் வளர வேண்டிய தருணம் இது. நமது பிள்ளைகள் வளர்ச்சியுற்றால் நமது சமூகம் வளரும். ஆக நாம் சுற்றியிருக்கும் எங்காவது ஒவ்வொரு பிள்ளையிலும் கவனத்தை முடிந்தளவு செலுத்தி அவர்களின் கல்விக்கு வழிகாட்டி கல்வித்தேவையில் கஸ்டப்படும் பிள்ளைகளுக்கு முடிந்தளவு உதவி செய்து அவர்களை வளர்க்கவேண்டும். இதை ஒரு கடமை என்றும் கட்டாயம் செய்யவேண்டிய தேவை என்றும் கருதுவோம்.
"ஒரு பெண் கல்விபெற்றால் ஒரு குடும்பமே கல்வி பெற்றதாகும்" என்று ஒரு இடத்தில் டாக்டர் அப்துல் கலாம் சொல்கிறார். வாழ்க்கையின் நீடித்த தன்மைக்கு பெண் கல்வி அவசியம். நமது நாட்டில் பல நூற்றாண்டுகள் கல்வியில் நாம் பின்னுக்கும் பொருளாதார வளர்ச்சியிலும் குறைவாக இருக்கிறோம். மற்றைய சமூகத்தின் வளர்ச்சியிலும் நாம் பின்னிலையிருக்கிறோம் என்று நினைத்தால் நாம் நமது சமூகத்தின் சில பிள்ளைகளையாவது வளர்ச்சி பெறச்செய்தாலே போதும்.
ஒரு தனி மனிதன் ஒருவனின் சாதனையைக் கண்டு நாம் பெருமிதம் கொள்வதை விட ஒரு சமூகம் சாதனைகாணவேண்டும்.
வீட்டுக்கு வீடு வாசல் படி இருப்பது போல் கல்வியின் படி(வழி) பெருகவேண்டும் ஒவ்வொரு வாசல்களிலும்.
Sunday, October 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
நல்ல படைப்பு தொடருங்கள்
--
@@யாதவன் said...
//நல்ல படைப்பு தொடருங்கள்//'
நன்றி யாதவ்
தொடருவோமே
ரமேஷ் அண்ணா எனக்கே எழுதியது போல இருக்கிறது!!! சூப்பர் அண்ணா!! இந்த பதிவில் நீங்கள் தேடியதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்!!!
VERY GOOD POST..
றமேஸ் அறிவுபூர்வமான தேவையான பதிவுகளையே தருகிறீர்கள்.
சந்தோஷம் !
@@நன்றி அனு
@@நன்றி ரியாஸ்
@@நன்றி ஹேமா
Post a Comment