Tuesday, October 19, 2010
தாய்மையின் தாகம்
தலைவலி
அழுகின்ற நான்
தேசிக்காய்த் தேனீர்
சுடுசோற்று ஒத்தடம்
மடியினில்
முகம்புதைக்க
உன் கரங்களில்
என் கண்ணீர் துளிகள்
உச்சிமோந்துவிடும்
உன்முகம்
இல்லை என்று
நான் வெளியில்
தனிமையில்
உன் இடைவெளி
எனக்கு
தலைவலி
ஐந்து நாட்கள் பிரிவு
வாசல் கதவு திறக்க
வீடு சிரிப்பை
வர்க்கித்துக்கொண்டது
கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
அர்ச்சனை
என் நட்சத்திரத்தில்
காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை
வெறும் தேனீர் கோப்பையுடன்
Labels:
அம்மாவுக்கு,
கவிதைச் சில்லறைகள்,
பாசம்
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
நெகிழ்ச்சி.....
@@Chitra said...
/// நெகிழ்ச்சி........////
நன்றிம்மா
தாய்மை ஒளிர்கின்றது உங்கள் வரிகளில்...
"கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை"
வாழ்த்துக்கள் றமேஸ், மிகவும் சந்தோசமக இருக்கிறது, சற்றே பொறாமையாகவும். எந்தவொரு அன்பையும் சிறிதேனும் இழந்துவிடாமல் அனுபவித்துவிடுங்கள்.
@@Kousalya said...
/// தாய்மை ஒளிர்கின்றது உங்கள் வரிகளில்...///
தாய்மை தேடிய குழந்தையாய் நேற்று ஆயினன் அஃதே வந்தது வரிகளில்
நன்றி கெளசல்யா
@@@தீபன்... said...
/////
"கடவுள் தேடி நான் வர
அம்மா கோயிலில்
காத்திருக்கிறேன்
சாமிவரும்வரை"
வாழ்த்துக்கள் றமேஸ், மிகவும் சந்தோசமக இருக்கிறது, சற்றே பொறாமையாகவும். எந்தவொரு அன்பையும் சிறிதேனும் இழந்துவிடாமல் அனுபவித்துவிடுங்கள்///
நன்றி தீபன்
நான் எழுத நினைத்த வரி அவை சில வரிகள் அதற்கிடையில் புகுத்தவேண்டியதாயிற்று.
அன்பு அரவணைப்பு மற்றவர்களிடம் இருந்து பெறவேண்டிய பொழுதுகளில் பெற்றுவிடவேண்டும்.
மென்மையான நெகிழ வைத்த கவிதை அழகு
@@தியாவின் பேனா said...
///மென்மையான நெகிழ வைத்த கவிதை அழகு///
நன்றி நன்றி
தொடருங்கள்,,,,,,
மிக அருமை தொடருங்கள் நண்பரே
@@உருத்திரா said...
///தொடருங்கள்,,,,,,///
நன்றி
@@Theepan said...
///மிக அருமை தொடருங்கள் நண்பரே///
நன்றி
Post a Comment