வணக்கம்
எதிர்பார்த்து எதுவும் நடைபெறாமல் போனால் கவலை. மனதுக்கு ஒரு நெருக்கடி ஆனாலும் அவ் எதிர்பார்ப்பு நிறைவேறினால் ஒரு தித்திப்பு இல்லையா.
எங்க ஊர் பாடசாலையின் வறுமையும் திறமையையும் இங்க பார்த்திருப்பீங்க.
அதே போல் கடவுள் எங்கே .....பிள்ளைய பாருங்க.. பார்த்திருப்பீங்க.
எமது பாடசாலையின் வறுமையின் அல்லது முயற்சியாண்மையில் வெற்றிகளில் பொருளாதாரம் தடையாக இருக்கின்றது என்பது எமது கண்களால் துருப்பட்டுக்கொண்டிருந்த விடயம்.
ஆனாலும் எங்கெல்லாம் மனம் காயம் படும்போதெல்லாம் காயம் ஆற்ற மனம் ஏங்கும் உணர்வு நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கும் என்பதை காணக்கூடியதாக இருந்தது எனக்கு.
காரணம் இவற்றின் எழுத்துக்களாலே எமது மண்ணின் பல உறவுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது இந்தப்பதிவுலகத்தில் நான் அடைந்த வெற்றிகளில் ஒன்று.
இதுமட்டுமன்றி நமது வறுமை அல்லது பொருளாதார வசதிகுறைந்த பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்கு ஒருசிலபேரது இடைவெளியை நிரப்பக்கூடியதாக எமது கனேடிய வாழ் உறவுகளின் முயற்சிகளால் அன்பளிப்புக்கள் நிதியுதவிகள் கிடைத்தது பதிவுலகத்தில் முழுமையாக நான் பெற்ற உயர்ந்த வெற்றி.
இதையும் தாண்டி எமது கிராம பாடசாலையின் பரிசளிப்பு விழா 2010 ஆண்டுக்கு நடைபெறுவது பொருளாதார பின்னடைவால் நிறுத்தப்படும் என்றிருந்த நிலையில் எமது புலம்பெயர் உறவுகளிகள் கனேடிய வாழ் உறவுகள் மூலம் நாம் எட்டமுடியாத இலக்கை அடையவைத்தது எமது உறவுகளின் உணர்வுகளுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்புக்கும் நன்றியைத் தவிர வேறென்ன கூறமுடியும்.
ஆக உறவுகளின் தேக்கம் எங்கெல்லாம் இருக்கிறது என்ற உணர்வை புரிந்துகொள்ள முடிந்தது. அதேபோல் எமது கிராம பிள்ளைகளின் திறமை அவர்கள் பொருளாதாரத்தினால் தடைப்படக்கூடாதென்ற பண்பு நம் எல்லோர் மனதிலும் இருக்கிறது என்பது மனதுக்கு இன்னுமின்னும் ஒரு புத்துணர்வைத்தந்தது.
ஆனாலும் இன்று இன்னொரு சம்பவம். கண்ணீரின் ஓரங்களை நனைத்துவிட்டுப்போனது. எனது வீட்டிற்கு ஒரு தாய் வந்து ' தனது பொருளாதார பின்னடைவைப்பற்றியும் கணவன் நீங்கிய பின்னர் கஸ்டப்பட்டு தனது பிள்ளைகளை வளர்க்கும் தன்மையையும் மற்றும் தனது பிள்ளைகளின் திறமைகளையும் சொல்லியபோது கடவுளுக்கும் கண்ணீர் கசிஞ்சிருக்கும். நான் இந்த வேலைகளில் இருந்து சற்று ஒதுங்கிக்கொள்ளவேண்டும் என்று நினைத்தபோது இப்படி ஒருநிலையை உணர்ந்தபோது ஒரு வாக்கியம் எனது சிறுபராயத்தில் எனக்காக சொல்லப்பட்டது எனது மாமாவால்
சுவாமி விவேகானந்தரினது பொன்மொழி அது.
"நன்மை செய்யப் பிறந்த நீ
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாதிரு"
இந்த பொன்மொழி எங்கெல்லாம் கஸ்டம் தெரிகிறதோ அங்கெல்லாம் எனது மனது பார்க்கும்போது கண்கள் வாசிக்கும் ஒரு வாக்கியம். ஒவ்வொருமுறையும் நான் நானாக இருக்கிறேனா என்று என்னையே கேட்டுக்கொள்ளும்.
இன்று இந்த தித்திப்பு ஒரு சுயபுராணமாய் இருக்கலாம். ஆனாலும் எமது உறவுகளின் ஒன்றுசேர்ந்த இந்த முயற்சியை தொடர்ந்து எமது பிள்ளைகளுக்காக செய்யவேண்டும் என்ற தன்மையைச்சேர்த்துவிடுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
வாழ்த்துகள். முயற்சி திருவினையாக்கும்.
இதை எல்லோர் கவனத்திற்கும் கொண்டு வந்தமைக்கு மிக்க நன்றிகள்...
நிச்சயம் விடிவு உண்டு.. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
இந்த பொன்மொழி எங்கெல்லாம் கஸ்டம் தெரிகிறதோ அங்கெல்லாம் எனது மனது பார்க்கும்போது கண்கள் வாசிக்கும் ஒரு வாக்கியம். ஒவ்வொருமுறையும் நான் நானாக இருக்கிறேனா என்று என்னையே கேட்டுக்கொள்ளும்.
..... வைர வரிகள். நீங்கள் என்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
//"நன்மை செய்யப் பிறந்த நீ
நன்மை செய்யாவிட்டாலும்
தீமையாவது செய்யாதிரு"//
உண்மையான பொன்மொழி...
உன்னுடைய நண்பனானாக இருப்பதற்கு பெருமை படுகிறேன்..
"நதி தேங்கிக் கிடக்கும்போது பயனற்ற குட்டையாகி விடுகிறது... அது ஓடும்போது தான் பயனுடையதாயும், அழகாயும் இருக்கும்.. இந்த நதி கனடாவுடன் தேங்கிவிடப் புறப்படக்கூடாது... " வாழ்துகள்..
தங்கள் ஆதங்கத்தையும், ஈர உணர்வுகளையும், புரியமுடிகின்றது.
சுயமாக சுகமாக வெற்றி வாழ்த்துக்கள்.
@@வானம்பாடிகள் said...
நன்றி அப்பு
@@ம.தி.சுதா said...
நன்றி சுதா
@@Chitra said...
நன்றி சித்ரா
@@சங்கவி said...
நன்றி சங்கமகேஷ்
@@நல்லவன் கருப்பு... said...
நானும் தான் நண்பா
நன்றி
@@Seelan said...
நன்றி ஐயா செய்வன சிறப்புற செய்வோம்
@@Jana said...
நன்றி அண்ணா
வாழ்த்துக்கள் தோழரே! உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாக நடக்கட்டும்...
Post a Comment