Pages

Wednesday, January 12, 2011

மழை வெள்ள துயரத்தின் காணொளி - 03

தகவலுக்கு தேற்றாத்தீவு மக்களின் துயர் மனதை உருக்கி உணர்வாக்குது நண்பர்களே. முடிந்தளவு யாருக்காவது எங்காவது உதவிக்கொள்ளுங்கள். உங்கள் உதவிகள் தண்ணீர் போத்தல்கள், உலருணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான பால் மா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விசேட ஆடைகள் என்பனவற்றை வழங்குங்கள்.


(நன்றி பேதுர்சன் ஒருங்கிணைத்துதந்ததற்கு)

இந்த தேசத்தின் குரல் எங்கெல்லாம் ஆர்க்குமோ இதயத்தை வருடி உளம் கனிந்து உதவும் கரங்கள் பெருகட்டும். உறவுகளின் உணர்வு சொந்த மண்ணின் மணத்தில் இருக்குமே... பால்வடியும் நிலம் இங்கு தண்ணீரால் நிரம்பி வழியுது. கண்ணீரின் கனம் தாங்காமல் உளம் கருகி வேர்க்கிறது. இதுவரை எமது அனர்த்த முன்னாயத்தங்களுடன் சமாளிக்கமுடிந்ததே. இனியும் ஐயகோ.... தாங்காது வெள்ளம் என்பது என்ன என்று அறிய வாங்கோ .பாதைகள் முடங்கப்படுகிறது. கடலின் துன்பம் கண்டோம் சுனாமியில் மழையின் துன்பம் காண்கிறோம் இப்பொழுதுகளில். தாங்க முடியவில்லை. அன்றாடம் உழைக்கும் நமது ஊர் மக்கள் அல்லல் படும் தன்மை ஐயனே..... கூலித்தொழில் செய்துவாழும் உறவுகளின் உறக்கம் கலைத்த வெள்ளம் எதை தேடி வதைக்கிறதோ......... தாகம் தீர்க்கும் தண்ணீரின் தாகம் என்ன சொல்வாயோ..

5 comments:

ம.தி.சுதா said...

நெஞ்சம் நெகிழ்ந்தேன்... அண்ணா உங்க காணொளியில் ஏதோ சிக்கல் இருக்கிறது (சிலவேளை எனது இணைப்போ தெரியல..)

Ramesh said...

நன்றி சகோரா
இது அலைபேசியில் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்டது
அவ்வவப்போது மின்சாரம் வரும்போது தொடர்ந்து தரவேற்றிக்கொண்டிருக்கிறேன்

KANA VARO said...

பரிதாபகரமான நிலை தான். ..

ஷஹன்ஷா said...

நிலமை மோசமடைய முன் உதவிகள் வந்து சேரும்.....கவலை வேண்டாம் தோழரே...

ஹேமா said...

றமேஸ்...கடவுள் மீதுதான் கோவம்.
இங்கும் நிதி சேர்க்கிறார்கள் !

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு