Pages

Wednesday, February 2, 2011

சிதறும் சில்லறைகள் - 11

இன்றைய நாள்

உலக சதுர்ப்புநில தினம்

வருடம் தோறும் பிப்ரவரி 2ஆம் தேதி உலக சதுர்ப்புநில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுர்ப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் சிநேகிதன் என்று தனது வலைப்பதிவில் jayasrimahi பதிவிட்டிருக்கிறார். பாருங்கள்
உலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2

மழைவீழ்ச்சியும் நாங்களும்

மழை நாள் மீண்டும் துளிர்க்கிறது. உண்மையில் இது வெறுப்புணர்வைத்தான் தருகிறது. இன்றைய மழைவீழ்ச்சியின் அளவு மட்டக்களப்பு வானிலை ஆராய்ச்சி நிலையத்திலிருந்து (பி.ப 5.30 மணியளவில்)09.1 mm ஆனால் இது மட்டக்களப்பு நகரில் பதிவாகியது. ஆயினும் இவ்வளவு மட்டக்களப்பு மாவட்டத்தின் சராசரி மழைவீழ்ச்சியைத் தராது. காரணம் ஒவ்வொரு பிரதேசத்திலும் வெவ்வேறாக அதிளவும் குறைந்தளவாகவும் மழை தொடர்கிறது. இதுபற்றி வானிலை தகவல் நிலையத்து கடமைதரு பொறுப்பாளரிடம் உரையாடியபோது அவர் இதுபற்றி தமது திணைக்களத்துக்கு அறிவுறித்தியிருப்பதாகவும் ஓரளவு சராசரியான மழைவீழ்ச்சியின் அளவைப்பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேச செயலகத்துக்கும் ஒரு கிளை அலுவலகம் மாதிரி ஒரு ஒழுங்கமைத்து அதிலிருந்து பெறப்படும் மழைவீழ்ச்சியைக்கொணர்ந்து சராசரி கணித்தல் நல்லது என்று இவர் கூறியிருக்கிறார். ஆயினும் இது உழைப்பு சார்ந்த துறையாக இது அமையாததால் அரசு இதற்காக இம்முயற்சியை செவ்வனே செய்யுமா என்பது கேள்விக்குறியே! காரணம் இலங்கையில் அனர்த்த முன்னாயத்தங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மாறாக வானொலிகளே (தனியார்) இதற்காக நம்பிக்கைக்குரிய தகவல்களைப் பெற்று பொறுப்பான செய்திகளை வழங்கிவருகிறது கொஞ்சம் மனசுக்கு திருப்தியைத்தருகிறது.
ஆயினும் ஒவ்வொரு அனர்த்தத்தைப்பயன்படுத்தி வயிறுவளர்ப்பவர்களும் அரசியலில் இல்லாமல் இல்லை. இவ்வனர்த்தங்களை அரசியலாக்குவது தான் வருத்தமளிக்கிறது. மாறாக மக்களின் வாழ்வை வயிற்றுப்பசியை வாழ்வாதாரத்தைப்பற்றி சிந்திக்கத் தவறுகின்றனர்.

வெள்ளமும் திட்டமிடாத திட்டங்களும்

மழைவீழ்ச்சி அதிகரித்த போதும் வெள்ள நிலைமை தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது எங்களது கிராமம் போன்று அனேக இடங்களில் முறையாகத் திட்டமிடப்படாத கொங்கிறீட் வீதித்திட்டங்களும் பிரதான வீதியின் காப்பெற்(carpet)வீதித்திட்டமுமேயாகும். இவ்வீதிகளில் கொங்கிறீட் வீதிகள் அமைக்கம் போது இங்கு மதகுகள் அல்லது நீர்வழிந்து செல்லக்கூடிய முறையில் அல்லது நீர் இடமாற்றப்படக்கூடியதாக அமைக்கப்படவில்லை. மாறாக திட்டத்தை செலவுச்சுருக்கமாக செய்துமுடிக்கும் எண்ணமே இருந்திருக்கிறது. மக்கள் நலன் சூழலியல் தாக்கங்கள் அனர்த்த முன்னாயத்த விபரங்கள் பற்றிய விடயங்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை.
இதேபோல் காப்பெற் வீதியமைக்கும்போது இயற்கையாக நீர் வழிந்தோடும் இடங்கள் மூடப்பட்டு குறிப்பிட்ட இடங்களில் மாத்திரம் இம்மதகுகள் கல்வெட்க்கள் (culvert) அமைக்கப்பட்டன. இவ்வீதிகள் அமைக்கும்போது மக்களின் கருத்துக்கள் கூட அனர்த்தவிடயங்கள் பற்றிக்கலந்துரையாடப்படவில்லையென மட்டக்களப்பின் எல்லைக்கிராமங்களில அமைந்துள்ள வாகரைப்பிரதேச மக்கள் மற்றும் வெருகல் பிரதேச சபைக்கூட்டத்தில் தெளிவாக்கியை நினைத்துப்பார்க்ககூடியதாக அமைந்தது இந்த அனர்த்தத்தின்போது. அவர்கள் அப்போதே கூறினார்கள் எங்களுக்கு இந்த வீதியினால் மழைகாலங்களில் போக்குவரத்து செய்ய இயலாமப்போகும் என்று. அதுஅப்படியே உண்மையாகி இருக்கிறது. இம்முறை அதிகளவு மழைவீழ்ச்சியாயினும் இது அதிகூடிய அனர்த்தமாக இருப்பதாலும் இப்பாதிப்பு அதிகரித்தது தவிர்க்கமுடியாதாகியது.

எந்தவொரு திட்டங்களும் மக்களுக்காக செய்யுமிடத்து மக்கள் கருத்து மிகமுக்கியம் அதுவும் அனர்த்தங்கள் பற்றிய விடயங்கள் மிக அவசியம்.

ஒருவீடியோ
நமது நண்பரொருவர் தனது முகப்புத்தகத்தில் பகிர்ந்த காணொளி

நாமும் செய்கை பண்ணுகிறோம் ஆனால் இவ்வீடியோவைப் பார்த்ததும் நாம்???? முன்னேறவேண்டும் அபிவிருத்தியில் தொழிநுட்பத்திறனில்


வாழ்க்கை
அண்மையில் வாசித்துக்கொண்ட விடயம்
வாழ்க்கை பற்றிய ஆங்கிலச்சுருக்கம் "X X X" ஆகும்
*நேற்று என்பது ஓர் அனுபவம் - Xperience
*இன்று என்பது ஒரு சோதனை - Xperiment
*நாளை என்பது ஓர் எதிர்பார்ப்பு - Xpectation
இதனால் உங்கள் எதிர்பார்ப்பை உங்கள் பரிசோதனையில் அனுபவத்தைப் பயன்படுத்துங்கள்.


ஒரு கவிதை
நான் கஸ்டப்படும் பொழுதுகளில் புத்தகங்களே ஆறுதலாக எனது கண்ணீரைத்துடைக்கும் விரல்களாக..
கவிஞர் மு.மேதாவின் இதயத்தில் நாற்காலி எனும் நூலிலிருந்து
தந்தைக்கு ஒரு தாலாட்டு
துருதுருத்த கவலைகளில்
தூக்கமில்லா இரவுகளில்
தவிதவிக்கும் தந்தையே!
நான் தாலாட்டுப் பாடட்டுமா,?

ஓய்வெடுக்க மனமின்றி
உழைப்பதற்கும் வழியின்றி
பாய்வெறுத்த தந்தையே
நான்
பாட்டொன்று பாடட்டுமா,,

நீதியின் பாதையிலே
நெடும் பயணம் நடத்தியதால்
பாதியாய் ஆனவரே
நான்
பாராட்டுக் கூறட்டுமா??

தேரோடும் கனவுகளைத்
தெருவொடு அனுப்பிவிட்டுப்
போராடி வாழ்ந்தவரே
நான் புகழ்மாலை போடட்டுமா?

ஒன்பதாம் வயது
உருகியதை அறியாத
மெழுகுவர்த்தி தேம்புவதை
நான் மேடைகட்டிப் பேசட்டுமா,?

சற்று நீ கண்மூடி
சாய்ந்திருப்பாய் தலையணையில் - உன்னைத்
தட்டிக்கொடுப்பதற்கு
நான் சந்திரனை அனுப்புகிறேன்!

உன் கண்ணை மூடி நீ
ஓய்வெடுப்பாய் சிறுநேரம் - நீ
தூங்கி விழித்தவுடன்
நான் சூரியனை அனுப்புகிறேன்!

பூமி உனக்களித்த புழுக்கத்தை
நீ மறந்து
கண்துயில்வாய் சிறுநேரம்
நான் காற்றை அனுப்புகிறேன்!

வாழ்க்கை உனக்குச் செய்த
வஞ்சகத்தை நீ மறந்து
சிறுபொழுது கண்ணயர்வாய்
நான்
தென்றலை அனுப்புகிறேன்!

விடிந்தால் என் வாழ்வில்
வெளிச்சம் வரும்!
வந்தவுடன்
அடைந்த வெளிச்சத்தை
நான் அப்படியே அனுப்புகிறேன்!

ஒரு ஸ்டேடஸ்
வாசித்த விடயம் ஒன்றுதான்
"யாரோ ஒருவரின் மகிழ்ச்சியை எழுதுகின்ற ஒரு பென்சிலாக நீங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எல்லோருடைய வருத்தங்களையும் அழிக்கக்கூடிய அழிப்பானாகவாவது (Rubber)உங்களால் இருக்கமுடியுமே முயன்று பாருங்கள்."

6 comments:

Chitra said...

சிந்திக்க வைக்கும் சிதறும் சில்லறைகள்.

மதுரை சரவணன் said...

அனைத்தும் அருமை.. வாழ்த்துக்கள்

தர்ஷன் said...

அருமை

நிரூபன் said...

"யாரோ ஒருவரின் மகிழ்ச்சியை எழுதுகின்ற ஒரு பென்சிலாக நீங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எல்லோருடைய வருத்தங்களையும் அழிக்கக்கூடிய அழிப்பானாகவாவது (Rubber)உங்களால் இருக்கமுடியுமே முயன்று பாருங்கள்."//


அருமை அருமை ரசித்தேன், திட்டமிடாத மழைக்காலம் பற்றிய நினைவுகள் மனதினுள் விரக்தியினைத் தருகின்றன. இம் மழைக்காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கைப் பரமாரிப்பு பற்றிய அளவீற்டு நூற்றுக்கு ஐம்பது வீதமே.

மழை நின்று மனங்களெங்கும் மகிழ்ச்சி பொங்க வாழ்வு செழிக்க வேண்டும் என்பதை தவிர சொல்வதற்கேதுமில்லை.

Jana said...

இம்முறை சிதறிய சில்லறைகள் மிகப்பெறுமதியானவை என்று கருதுகின்றேன். சில இடங்களில் இதயம் கனக்கின்றதை உணர்கின்றேன்.

றமேஸ்-Ramesh said...

@@நன்றி சித்ரா,

@@நன்றி சரவணண்,

@@நன்றி தர்ஷன்,

@@நன்றி நிரூபன்,

@@நன்றிஜனா அண்ணா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு