கடற்கரை, கிரிக்கட்திடல்
உங்கவீட்டு முற்றம்
பக்கத்துல நீ
பஸ்வண்டி நீள் பயணம்,
அந்த நீலச் சைக்கிள்
கலாசாலை நெடும் சாலை
நான் எழுதிய கவிதை
உன் பெயரில்
அவள் பார்க்கும் சுவர்களில்
ஞாபகச்சிதறல்கள்
எத்தனை கனவுகளை தின்றிருப்பாய்
காயங்களில் காய்ந்துகொண்டிருக்கும்
நேர்கோட்டுச் சூரியரிப் பகல்களும்
பனிவிழும் இரவுகளும்
நீ தரும் அவஸ்தைகளும்
தேவைகளை கேட்டுக்கிறங்கி
உனது ஆசைகளின் தடைதாண்டல்
'நான்' அன்பானவன்
உன்பேச்சுக்கு கட்டணம் அறவிடுகிறார்களோ
தெரியவில்லை
நிச்சயம் உதடுகளை விசாலித்து
கன்னத்தை சுருக்கிவிட காசுதேவையில்லை
ஆயிரம் அன்புகளை அடிக்கிக்கொள்கிறேன்
உண்டியல்களில்
தலையசைத்துவிடு பார்த்து
உன் கண்ணீரின் காயங்களை துடைத்துக்கொள்ள
மீண்டும் மீண்டு வருவேன்
உள்மன ஆழம் கண்டவன் நான் என்பதால்
Wednesday, February 16, 2011
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
very nice..
கவிதை உங்களின் உணர்வுகளைத் தாங்கிய நினைவு மீட்டலாய் இருக்கிறது சகோதரம்.
கடற்கரை, கிரிக்கட்திடல்
உங்கவீட்டு முற்றம்
பக்கத்துல நீ
பஸ்வண்டி நீள் பயணம்,
அந்த நீலச் சைக்கிள்
கலாசாலை நெடும் சாலை
நான் எழுதிய கவிதை
உன் பெயரில்
அவள் பார்க்கும் சுவர்களில்
ஞாபகச்சிதறல்கள்//
http://music.ovi.com/in/r/Product/r/r/8467704
இந்த வரிகள் வைரமுத்துவின் இது போதும் எனக்கு கவிதையை நினைவூட்டுகிறது.
மீண்டும் வருவேன், மனதிற்கு விரும்பியவளின் எதிர்பார்ப்பிற்கு விடையளிக்கும் வினாவாய் அமைந்துள்ளது.
றமேஸ்...கவிதை நிறைய மனதின் ஆதங்கம் ஆசை பாசம் எல்லாம் சொல்லி நிற்கிறது உயர்வாக !
உன் கண்ணீரின் காயங்களை துடைத்துக்கொள்ள
மீண்டும் மீண்டு வருவேன்
உள்மன ஆழம் கண்டவன் நான் என்பதால்
......Lovely!
உஙடகளட கவிதை மனதை ஏதோ செய்கிறது..
@@ நன்றி நன்றி சுதா
@@ நன்றி நன்றி நிரூபன்
இங்கு போய்க்காண்க இக்கவிதையின் அர்த்தத்துக்கு..
http://sidaralkal.blogspot.com/2009/12/blog-post_26.html
நேற்று ஒரு சந்திப்பு அதனால் இக்கவிதையினால்
@@ நன்றி நன்றி ஹேமா உண்மை
@@ நன்றி நன்றி சித்ரா
@@ நன்றி நன்றி பவன்
@@ நன்றி நன்றி கரூண்
கவிதை நன்றாகவுள்ளது நண்பா
உன்பேச்சுக்கு கட்டணம் அறவிடுகிறார்களோ
தெரியவில்லை
நிச்சயம் உதடுகளை விசாலித்து
கன்னத்தை சுருக்கிவிட காசுதேவையில்லை..
Manasil Pathinchu...!!!
Avvida Nininu..Premam Kolikkum kavi Ahthikam...
Ivvida Lokathiley peramm selikka Ramesh Seeddan Meendum meendum varanym..
Post a Comment