Pages

Friday, February 4, 2011

மீண்டும் வெள்ள அனர்த்தத்தில் மட்டக்களப்பு

மழை..
வெள்ளம்..
காற்று.. வான் கதவுகள் திறப்பு
இந்த சொற்களால் மனம் எவ்வளவு அவதிப்படுகிறது என்பதை அனுபவிக்கும் போதுதான் உணரப்படும். கடந்த மாதம் அதிகளவு மழைவீழ்ச்சியும் குளிர் காலநிலையும் என்றும் பின்னர் வெள்ளம் வழிந்தோடும் நிலையும் இருந்தது. அப்பொழுது அடைந்த வரலாறு காணாத வேதனைகளும் கண்ணீரைத்துடைக்க ஓடி வந்து உதவிய கரங்களும் கண்முன்னே நிக்கும். அவ்வெள்ளமே அனர்த்தம் என்று இருந்த எமக்கு இன்னும் இருக்குது என்பதை சொல்லும்பொழுதாக இப்பொழுதும் மீண்டும் அடைமழை, அதே வெள்ளம், இல்லை அதனை மீறிய வெள்ளம். மீண்டும் இடம்பெயரும் மக்கள். ஒரு குறிப்பிட்ட மழையையே தாங்கிப்பழகிய மக்கள் இந்த அதீத வெள்ளத்தின் காரணமாக அதிக இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர்.

நீரேந்து குளங்களின் நீர்மட்டம் அதிகரிப்பால் அவற்றின் வான்கதவுகள் படிப்படியாக திறக்கப்பட மீண்டும் கிராமங்களின் நீர்மட்டம் அதிகரிக்க மக்களின் வீடுகளில் வாழமுடியா நிலைதோற்றுவிக்கப்பட்டதால் மக்கள் உயர்ந்த கட்டடங்களில் அனேகமாக பாடசாலைகளில் இடம்பெயருகின்றனர்.மெதுவான சாரல் தூறல் மழையும் தொடர்ந்து பெய்துகொண்டிருப்பதானால் மழைவீழ்ச்சியினளவு அதிகரித்த வேளையிலும் குளங்களிலிருந்து திறந்துவிடப்பட்ட நீரின் கனவளவு அதிகரிப்பதால் தொடர்ந்து இயல்புவாழ்க்கையில் நிலைகுலைவு ஏற்பட்டவண்ணமிருக்கின்றன. மக்களின் தொகைகளுக்கு ஏற்றளவு போதிய இடவசதி காணப்படவில்லை பாடசாலைகளில். இது மற்றொரு பிரச்சனையாகக் காணப்படுகிறது.
மட்டகளப்பு மாவட்டம் முழுவதும் பரவலாக பாதிக்கபட்டுள்ளது. ஆயினும் முன்னைய மழைவெள்ள அனர்த்தத்துக்கு பாதிக்கப்பட்ட மக்களால் ஓரளவு இயைபாக்கமடைந்த தன்மையினால் வாழமுடிந்தாலும் மட்டகளப்பு செங்கலடி வந்தாறுமூலை முறக்கொட்டாஞ்சேனை போன்ற பகுதிகளில் வெள்ளம் அதிகரித்து மக்கள் கஸ்டப்படும் தன்மையை நண்பர்கள்(*அமல் மற்றும் ஹரி) தங்களது முகப்புத்தகத்தில் (Facebook)பகிர்ந்துள்ளனர்

இங்குபோய்க் காண்க

இங்கும் போய்க்காண்க

நமது மக்கள் கஸ்டப்படும்போது இயன்றளவு உதவிகள் நல்குதல்வேண்டுமல்லவா. முடிந்தளவு யாருக்காவது எப்படியாவது உதவுங்கள் நண்பர்களே.
இது வேண்டுகொள் என்பதை விட மனதநேயத்தின் கடமையல்லவா.

முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் அளவைவிட இப்பொழுது மக்கள் அதிகளவு பாதிப்புள்ளாக்கபட்டுள்ளனர். மட்டக்களப்பில் எழுவான் கரைக்கும் படுவான்கரைக்கும் இடையிலான தரைவழிப்பாதைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீண்டும் படுவான்கரை மக்களின் தொடர்பாடல் மிகக்கஸ்டமாக இருக்கும்.

இப்பொழுது சுதந்திரதினக் கொண்டாட்டங்களால் இவ்வெள்ள அனர்த்தம் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கு முன்னரும் அரசு உரியமுறையில் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருப்பதை மறுக்கமுடியாது. வெறும் ஊடகங்களுக்கு படம்காட்டுவதற்காக மட்டும் இவர்கள் நிவாரணம் வழங்குகிறார்களாக மக்கள் கருதுவதில் தவறில்லை என்பது உள்ளாந்த எண்ணம்.

ஆனாலும் இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கெல்லாம் இருந்து பல உதவும் கரங்கள் உதவியதை மறக்கமுடியாது.அனைவருக்கும் நன்றி. உங்கள் அனைவருக்கும் அனவரினதும் ஆசிர்வாதங்கள் நிச்சயம் கிடைக்கும்.

உண்மையில் மக்களின் பொருளாதாரம் அதாவது வாழ்வாதாரம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பொருளாதார ரீதாக கஸ்டப்படுகிறார்கள். மக்கள் அனேகமாக நடுத்தர மற்றும் மிகக்குறைந்த வருமாத்தைக்கொண்ட குடும்பத்தவர்களாக இருப்பதால் இவர்களின் வாழ்க்கையில் இந்த வெள்ள அனர்த்தம் பெரும் பிரச்சனைகளை உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை. நாளாந்தம் கூலித்தொழில் செய்யும் மக்கள், விறகுவிற்று வாழும் மக்கள், செங்கல் உற்பத்தி செய்யும் மக்கள், என்று நாளாந்த வருமானமீட்டி வாழ்க்கையைக் கொண்டு செல்லுகின்ற மக்களின் மனநிலையை பொருளாதார ரீதியாக பின்னடைவுக்குதள்ளும் நிலை காணப்படுகிறது.
ஆயினும் தற்பொழுது உணவுக்கும் இருப்பதற்கும் போதுமான நிலைகாணப்பட்டாலே போதும். இதனால் எங்கெல்லாம் மனம் காயப்படுகிறதோ அங்கெல்லாம் பூக்கட்டும் உணர்வின் உதவிக் கரங்கள்.


12 comments:

Chitra said...

இறைவன் அருளால், நல்லுள்ளங்களின் உதவியால் .... விரைவில் நிவாரணம் கிடைக்கட்டும். படங்களை பார்க்கும் போது, வேதனையாக இருக்கிறது.

தமிழ்தோட்டம் said...

விரைவில் இறைவன் வேதனைகளை நீக்குவார்...

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

வதீஸ்-Vathees said...

:(((

Jana said...

அடிமேல் அடியாக தொடரும் அனர்த்தங்கள். இயற்கையிடமே மக்களுக்காக மண்டாட வேண்டியுள்ளது.

தமிழ் உதயம் said...

மழை கொட்டி தீர்த்துள்ளது. அரசின் நிவாரணமும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் சீக்கிரத்தில் கிடைக்க வேண்டும்.

நச்சத்திரா said...

இறைவனிடம் இரஞ்சி வேண்டிக்கொள்கின்றேன்.

suthak said...

முடியல்லடா நண்பா கவலையா இருக்கு எல்லாமே பார்க்கும் போது...
எல்லாமே கடவுள் கைலதாண்ட......
கடவுளை பிரார்த்திப்போம் வழமையான நிலை மாறுவதுக்கு ...

றமேஸ்-Ramesh said...

@@சித்ரா : ம்ம் நன்றி

@@தமிழ்தோட்டம்: ம்ம் நன்றி பகிர்தலுக்கும் சேர்த்து

@@வதீஸ் :நன்றி

@@ஜனா அண்ண: ம்ம் இயற்கை. நன்றி
@@தமிழ் உதயம்: அரசின் நிவாரணம்??? ம்ம் நன்றி
@@நட்சத்திரா: நன்றி முதல் வருகைக்கும்
@@சுதா: நன்றி. கவலைப்படாதே உங்களது குடும்பம் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

sjitha said...

நன்றி ரமேஸ் எம் மக்களின் நிலமைகளை உலகிற்கு காட்டியதற்கு. இன்றும் நான் பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கும் நலன்புரி முகாம்களிற்கும் சென்றேன். வெள்ள நிலமை அதிகரிப்பினால அதிகமான மக்கள் நலன்புரி முகாம்களிற்கு வருகை தந்திருந்தனர். நேற்று இரவில் இருந்து உணவின்றி தவிர்த்த மக்கள் இன்று மதியம் வழங்கப்பட்ட விஸ்கோத்தினாலேயே பசியை ஆற்றிக் கொண்டனர். சில நலன்புரி நிலையங்களில் சமைப்பதற்கு தேவையான விறகு எடுப்பதில் ஏற்பட்ட சிரமத்தினால் உலர் உணவுப்ப பொருட்கள் மக்களிற்கு வழங்கப்படடிருந்தன. அவற்றைக் கொண்டு பாடசாலைக் கட்டிடங்களில் பாத்திஙகள் இன்றி சமைக்க முடியாமல் தங்கள் குழந்தைகளிற்கு உணவு கொடுக்க முடியாமல் மிகவும் கஸ்டப்பட்டனர். என் இனிய நன்பர்களே இந்த வேளையில் எம் உறவுகளுக்காக உதவி செய்யுங்கள்..நீங்கள் செய்யும் சிறிய உதவி கூட உங்கள் கஸ்டங்கில் கைகொடுக்கும்.... Amal Amirthalingam
FB Link- http://www.facebook.com/profile.php?id=1455886190

றமேஸ்-Ramesh said...

அமல் உங்களுக்கு நான் என்ன சொல்வதென்று தெரியாத நிலையில் இருக்கிறேன். சிலபேரைத் தொடர்புகொண்டுள்ளேன். பார்ப்போம்

Theepan said...

இயற்கைக்கு எங்கள் மேல் இவ்வளவு கோபமா? விடாமல் வதைக்கின்றதே , ஆறுதல்களை விட அனுகிரகமே தேவையாயிருகின்றது

கணேசன் ஜனார்த்தனன் said...

இயற்கையிடமே மக்களுக்காக மண்டாட வேண்டியுள்ளது.

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு