Pages

Saturday, February 12, 2011

சிதறும் சில்லறைகள் - 12 (நினைவுகள்)


இன்றையநாள்
சார்ல்ஸ் டார்வின் தினம் (Charles Darwin Day)
இயற்கைத் தேர்வு மூலம் கூர்ப்புக் கொள்கையை வெளியிட்டு மனிதனுக்கு உணர்த்தப்பட்ட உயிரிகளின் அடிச்சுவடுகளுக்கு காரணம் கற்பித்த அறிஞர் சார்ல்ஸ் றொபேட் டார்வின் (CHARLES ROBERT DARWIN)அவர்கள் பிறந்த இந்நாளை சார்ல்ஸ் டார்வின் தினம் அல்லது டார்வின் தினமாக வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது.
விக்கிபீடியாவில் இருந்து
டார்வின் நாள் (Darwin Day) என்பது ஒவ்வோர் ஆண்டும் பெப்ரவரி 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 1809 ஆம் ஆண்டில் பரிமாணத் தத்துவத்தை உலகுக்கு அளித்த சார்ல்ஸ் டார்வின் பிறந்தார். அறிவியலையும் அறிவியலை மேம்படுத்தவும் உதவிய டார்வினின் பணிகளை இந்நாளில் நினைவு கூருகிறார்கள்.

இத்தினத்துக்காக சர்வதேச டார்வின் தின நிதியம் (The International Darwin Day Foundation) உருவாக்கப்பட்டு தனது இணையத்தளத்தில் உலகளாவிய ரீதியில் இத்தினத்தை விஞ்ஞான மற்றும் மனிதநேய வளத்திற்காக கொண்டாடுகிறது. உலகில் இத்தினக் கொண்டாட்டம் தொடர்பான விடயங்களை வெளியிடுகிறது. இத்தளத்தை இங்கு காண்க

ஒரு ஸ்டேடஸ்

பல நாட்களுக்குப்பிறகு எங்கட ஊர் கடற்கரைக்கு சென்று திரும்பினேன். இதன் பின்னர் எனது டுவீட்டரில் இட்ட இஸ்டேடஸ்
##நீண்ட நாளைகளுக்குப் பிறகு கடற்கரையில் கால்தடங்களை பதிவு செய்தேன்.
அலைகள் வந்தது நினைவுகளுடன்.
அடித்துநொருக்கிச்சென்றது தடங்களை,
இன்பநிலை##

சில காட்சிகள்

ஊரின் இன்றைய கடற்கரை பின்னேரப் பொழுதில் சில காட்சிகளை பிடித்துக்கொண்டேன்


ஒரு புத்தகம்
காதலர்களுக்காக ஒரு புத்தக அறிமுகம். முன்னைய கவிஞர்களில் மு.மேதா மற்றும் வைரமுத்து காதல் கவிதைகளுக்காக புதுக்கவிதைகளை (காதலர்களுக்கும்) தந்து பல கவிஞர்களுக்கு ரோல் மொடலாக இருந்தனர். பின்னர் காதல் மொழிபேசிய தபு சங்கர் வழிமொழிந்த கையோடு அனேக புத்தகங்கள் ஒரு காதலுக்குள் மூழ்கிய நிலைதந்துகொண்டிருக்கின்றன. இங்கு "காதல் கேளாய் தோழி" என்று கவிஞர் தமிழ் சத்தியனின் புத்தகத்தை படியுங்கள். இங்கு

"உன்னைப் பற்றி
நான் எப்படி சொல்ல
என்தோழியிடம்
சொல்ல சொல்ல
தீர்ந்துவிடும் சொல்"

அவரின் இந்தக்கவிதையே அந்தப்புத்தகத்துக்கு நான் சொல்லிக்கொள்ளுவதும். கிடைத்தால் படியுங்கள்.முன்னைய காதல்
காதலர் தினத்துக்கு முன்னதாக சிதறல்களில் சிதறிய சில காதல்களைப் பாருங்கள் காதல் என்றால் என்ன என்பதை சொல்லியிருக்கிறேன். வாசிக்கத்தவறியவர்களுக்காக

காதல் சாதல்

ஒரு ஆணாய்:
பதின்மவயது அந்தா இந்தா என்று ஆணாய் இருந்து அர்த்தம் தேடும் பருவம். காதல் என்றால் என்ன என்று விழுந்து புரள எண்ணும் மனது. காதல் பாடல்கள் பிடிக்கும் ஐட்டம் அல்லது பிகருகள் என்று எதிர்ப்பால் தேடும் பருவம்.

"பருவம் படர்ந்து
பார்வைகளில் சிதைந்து
காதல் மொழி
எதுவென தேடும் மனது"

மரண ஊர்வலம்

7 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
தாஜ்மகாலின் நாயகி மும்தாஜ் இல்லை திலோத்தமி தான்..

ம.தி.சுதா said...

ஃஃஃஃஅலைகள் வந்தது நினைவுகளுடன்.
அடித்துநொருக்கிச்சென்றது தடங்களை,
இன்பநிலைஃஃஃஃ

உங்களுக்கோ ஒரு ஸ்டேடஸ் ஆனால் என் மனதில் அது lotus..

தமிழ் உதயம் said...

அறிஞரின் பிறந்த தினம், அழகான புகைப்படங்கள், காதல் குறித்த ஒரு புத்தக விமர்சனம்... மொத்தத்தில் அழகான பதிவு.

நிரூபன் said...

காதல் என்றால் என்ன என்று விழுந்து புரள எண்ணும் மனது. காதல் பாடல்கள் பிடிக்கும் ஐட்டம் அல்லது பிகருகள் என்று எதிர்ப்பால் தேடும் பருவம். //


வணக்கம் சகோதரா, அருமை, அருமை. கவித்துவம் நிரம்பிய கைதேர்ந்த கவிஞனுக்கு நிகர்- இந்த வார்த்தைகள் தான். எங்களின் பதின்ம வயது நினைவுகளை அப்படியே படமாகக் காட்டியுள்ளீர்கள். சில்லறைகள் சொல்லரும்புகளாக எங்களைக் குளிர்விக்கின்றன.
சிதறல்கள் நாற்று மேடைப் பக்கம் எட்டிப் பார்க்காதோ?

யாதவன் said...

வாழ்த்துக்கள்

Jana said...

டார்வின், காதற்புத்தகம், இயற்கை புகைப்படம், காதலுடன் எழுத்தக்கள் என்று இன்று சிதறிய சில்லறைகள் பலவற்றை உணர்த்துகின்றன.

றமேஸ்-Ramesh said...

@@நன்றி நன்றி சுதா
@@நன்றி நன்றி தமிழுதயம்
@@நன்றி நன்றி நிரூபன்
@@நன்றி நன்றி யாதவ்
@@நன்றி நன்றி ஜனா அண்ணா

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு