Pages

Tuesday, February 15, 2011

இது ஸ்டேடஸ் - 11

"வாழ்க்கையின் ஒரு பாதி நான் ஆனால் மறுபாதி ?? - என் ரசனைகளின் ஓரத்தில் தெரியும் அன்பு உணர்வுகள் தான்.
நுனி நாக்கில் ஈரப்படுத்துவதை விட இதயத்தின் ஒரு சொட்டு இரத்தம் இனிக்கும்"

"எதிர்கால கனவுகளை விட நிகழ்கால நிஜங்களே மேல்
அதை வெல்வோம் வாருங்கள்"

"அடைமழை
அனுபவிக்கிறோம்.....""

"நாடுபூராக மழையும் வெள்ளமும் மண்சரிவும் ஆனாலும் சுதந்திர தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டதாம்..
ஆமா சுதந்திரம் யாருக்கு?யார் கொண்டாடினவர்கள்"

""நான் விழக்கூடாதென்று ஏணியை பிடித்துதுக்கொண்டு இருக்கிறாள் அம்மா.
எப்போதும் இவனை ஏற்றவேண்டும் என்றும், கையில் விளக்கும் கொண்டுபோ என்கிறாள்"
----தாய்மை படும் பாடு தாய் படும் பாடு----""""

"என்னை உனக்க பிடிக்காமல் போகலாம்..
உனது கண்களின் ஓரத்தில் நான் இருப்பேன் என்று எனக்கு தெரியும்.
கண்ணீர் உப்பு நுனிநாக்கில் கரைகிறது.."

"உன்பேச்சிலும் எழுத்திலும் நீயிருப்பாய் உன்பதவியும் பொருளும் உன்னை அடயாளப்படுத்தாது"

"நானெடுக்கும் முடிவுக்கு சொந்தக்காரன் என்பதால் அதனை மனதார விரும்பி ஏற்றுக்கொள்வேன். பிறரின் போலியாய் இருப்பதிலும் நானாக இருப்பதில் மகிழ்ச்சியடைவேன். எப்போதும் எனது நான் என்பதில் நாங்கள் இருக்கும்"

"ஒரு துளி தேனெடுக்க தேன்கூடை ஏன் கலைக்கிறாய்??"

"எனக்காகவும் சிலவேலைகளை செய்துமுடிக்கவேணும் தொலைபேசியில் அழைப்பெடுக்க வேண்டாம் இன்று"

""கருப்புக்களில்தான் வெள்ளைப்புள்ளிகள் தெரியும் நான் வெள்ளைப்புள்ளியா இல்லை கருப்பு படலமா என்பதே உனக்குள்ள கேள்வி,
இப்பொழுதும் ஆர்ப்பரிக்கிறேன் நீ கருப்பானால் நான் வெள்ளைப்புள்ளி. நான் கருப்பாக இருப்பேன் நீ வெள்ளைப்புள்ளியாக"""

"உன்னை உன்னால் எழுதமுடிந்தால் தான் என்னால் வாசிக்கமுடியும் உன்னை. எழுது வாசிக்கிறேன்"

இனி படித்துப் பிடித்தவை சில

"வாழ்வது எளிது
அன்பு செய்வது எளிது
புன்னகைப்பது எளிது
வெற்றி பெறுவதும் எளிது
ஆனால் எளிமையாய் இருப்பதில் தான் இருக்கிறது கடினம்""

காதல் ஒரு 'விசிட்டிங் கார்ட்'(Visiting Card)
வாழ்க்கை என்பதோ ஒரு 'கிரெடிட் காட்" (Credit debit Card)
மனைவி என்பவள் ஒரு 'விசா காட்'( Visa Card)
காதலரோ ஒரு 'ஏ ரி ம் காட்' (ATM Card)
நட்பு என்பது ஒரு 'லைஃப் காட்' (Life Guard) அதைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்..


(Manivarma Ko அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து அழகிய அற்புத படம் நன்றி அண்ணா)6 comments:

Jana said...

ஆஹா.. இவற்றை வெறும் ஸ்ரேட்டஸ்ட்களாக எடுத்துக்கொள்ளவில்லை. ரமேஸ் சித்தரின் தத்துவங்களாக எடுத்துகொள்கின்றேன். நல்லவற்றை சொல்லும் தாமசுக்கு வாழ்த்துக்கள்.

Chitra said...

"உன்னை உன்னால் எழுதமுடிந்தால் தான் என்னால் வாசிக்கமுடியும் உன்னை. எழுது வாசிக்கிறேன்"


... very nice post.

தமிழ் உதயம் said...

நீங்கள் படைத்தது... நீங்கள் படித்தது, இரண்டுமே அற்புதம்.

ஹேமா said...

றமேஸ்...நீங்கள் வாழ்வில் படிக்கும் பாடங்களைப் பதிவாக்குகிறீர்கள்.
சுதந்திர தினம்,அம்மா படும் பாடு,மழை மனதில் பதிகிறது !

நிரூபன் said...

சிதறல்களின் தத்துவங்களும் கவித்து நயங்களும் அருமை. அதுவும் ஒவ்வோர் வரிகளும் கூடிய கவனம் எடுத்து எழுதியுள்ளமை போன்ற உணர்வினைத் தருகின்றது வரிகள் -காரணம் எல்லா வரிகளும் உண்மையான உறுதியான வரிகள். தொடர்ந்தும் ஸ்டேட்டஸினை எதிர்பார்த்தபடி.

றமேஸ்-Ramesh said...

@@ நன்றி நன்றி ஜனா அண்ணா
@@ நன்றி நன்றி சித்ரா
@@ நன்றி நன்றி ஹேமா
@@ நன்றி நன்றி நிரூபன்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு