Pages

Wednesday, September 30, 2009

உனக்காக எல்லாம் என் சகியே ...



கடவுள் குடியிருக்கும்
கோவில்
உன் உள்ளம்

என் சகியே

நீ விளையாட
இந்த நிலா முற்றம்
ஏய்
பிறை நிலவே
என் பிள்ளையின்
கத கதவென்று குழைந்த
மழலைச் சிரிப்பைப் பாடு

அந்த "செல் " விழுந்த
மாமரம் இன்று
துளிர் விட்டு
கிளை பரப்பி
நிற்குது
உனக்காக
நீ ஆடவே
வா என் சகியே
பொன்னூஞ்சல்
கட்டித்தாறேன்
ஆடு...
விளையாடு....

குருத்து மணல் பரப்பி
உன்னைப்போல்
கொத்துக் கொத்தாய்
பூக்கள் பூக்க
பூமரம் நட்டு
பூங்கா தாரேன்
பக்கத்து வீட்டு
நட்சத்திரங்களையும்
கூட்டி வந்து
விளையாடு
என்
செல்ல மக

கொம்புத் தேனும்
எருமைத் தயிர் குழைத்து
தண்ணிச் சோறு தாறேன்
கொழு கொழு என
கொழுத்து நீ வளர
கொடுத்து உண்ணவும்
பழகு கண்மணியே

நீ படிக்க
புத்தகங்களும்
எழுதிக்கொள்ள
எழுதுகோல்களும்
இவற்றைச் சுமந்துகொள்ள
பொம்மை பையும்
தறேனம்மா
நல்லா படிச்சுக்கொள்
செல்ல மக

சட்டையில் மடித்துச் செருகிய
கைக்குட்டையில் உன்
வியர்வையைத் துடைத்துக்கொள்
நாளை மற்றவர்களின்
நெற்றி வியர்வையை
தொடைக்க வேண்டுமம்மா நீ

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு