Pages

Friday, December 18, 2009

ஒரு அஞ்சலியுடன் மறுமலர்ச்சிகாக இந்தத் தபோவனம்

சகோதரர்களே!
வேக நடைபோடும் இந்த உலகத்தின் மனதுக்கு அமைதி வேண்டி எத்தனை எத்தனை பிராத்தனைகள். கஸ்டம் வரும்போதே மனிதன் கடவுளை நாடுவான். இதற்கு மாறாக சில பிதற்றல்களுடன் நடைபெறும் மதமாற்றங்களும் பொருளாதார இன்னல்களுக்கு உள்ளாகும் வறிய குடும்பங்களின் உரிமை மீறல்களும் வழக்கிலுள்ளது. இம்மதமாற்றங்கள் ஒரு மனிதனது தற்றுணிவின்மையை எடுத்துகாட்டுகிறது அதேபோல் தம்மைத் தாமே விற்றுக்கொள்வதாகிறது.ஆனாலும் இங்கு ஒரு மகானின் ஆத்ம திருப்பதியின் அஞ்சலிகாக ஒரு தபோவனம் உருவாகுகிறது.
நிற்க.
சொல்ல வந்த விடயம் மறந்துபோகும்...

பாரம்பரிய இந்து - தமிழ் சமய கலாச்சார விழுமியங்களைக் கட்டிக்காக்கும் நம்ம ஊரில் மற்றொரு மலர்ச்சி இது, வேறொன்றுமில்லை. ஆனால் இதுவே இக்காலத்தில் எவ்லோருக்கும் வேண்டியதொன்றாகிறது.. இதுதான் "ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம்".



ஆம், தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தின் முழு முயற்சியில் அழகிய தேற்றாத்தீவுக் கடற்கரையோரத்தில் வீற்றறிருக்கும் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலயத்தினருகாமையில் இத்தபோவனம் தோற்றம் பெற்றுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு தேற்றாத்தீவு தெற்கு - 02 பல்தேவைக்கட்டடத்தில் நேற்று 17-12-2009 ஆந்திகதி வியாழக்கிழமை இந்து இளைஞர் மன்ற செயலாளர் திரு.த.விமலானந்தராஜா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. நாள்கோள் நற்பலனுக்கேற்ப தென்னை மரநடுகை செயற்றிட்டம் கால்கோளிட அதற்குரிய நிலப்பகுதி இயந்திரங்கள் கொண்டு மண் சமப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்க மறுபுறத்தில் சம்பிரதாய நிகழ்வு ஒன்றுகூடலானது.

மரநடுகையில் சில காட்சிகள்

 
 

ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ அவர்களின் நல்லாசியுடனும், தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடனும் திரு.ச.இன்பராஜன் அவர்களின் இனிய பஞ்சதோத்திர கடவுள் வணக்கத்துடனும் திரு.விமலானந்தராஜா அவர்களின் தலைமையுரையுடனும் இவ்வொன்றுகூடல் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்து.

விபுலாநந்தா இந்து கலாச்சார பொதுப்பணிமன்றத் தலைவர் திரு.சோ. கணபதிப்பிள்ளை அவர்கள் மங்களவிளக்கேற்றும்போது


திரு.ச.இன்பராஜன் அவர்கள் தேவாரப்பாராயணம் செய்யும்போது
 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் கிராமத்தின் நாற்புறமும் அமைந்துள்ள நான்கு கோயில்களில் பஜனைகள் நடைபெற்றுவருவதும் அதில் வயது வேறுபாடின்றி அனைவரும் பங்குகொள்ளுதலும் இந்தத் தேற்றாத்தீவு கிராமம் இதனால்தான் ஆழிப்பேரலைகளின் தாக்கத்துக்குட்பட்டபோதும் ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இப்போது ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம் மன நிறைவை அளிக்கும் தியானம்,யோகாசனம்,இந்து மதப்போதனைகள் சிறப்பான வழிகாட்டல்களுக்கான ஒரு நிலையமாக அமைய எல்லாம் வல்ல நம்மிறைவனின் துணை எப்போதும் கிடைக்கும் என்று தமது நல்லாசியை வழங்கினார் ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ.

ஸ்ரீ படபத்திரகாளி அம்மன் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ரவிஜீ அவர்கள் நல்லாசி வழங்கும்போது


தொடர்ந்து இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மட்டக்களப்பு மாவட்ட இந்துப்பேரவைத் தலைவர் திரு.சீ.யோகேஸ்வரன் ஐயா அவர்கள் சிறப்புரையை வழங்கினார்.

இவரின் சில சில்லறைகளில்.........


ஸ்ரீமத் சுவாமி தந்திரதேவா தபோவனம் ஆனது சமாதி நிலையடைந்த சுவாமி தந்திரதேவா அவர்கள் தாம் உயிரோடு இருந்தபோது அவர்களின் எண்ணத்தில் உதிர்த்த சிந்தனைனையே. இதற்கு தேற்றாத்தீவு இந்து இளைஞர் மன்றத்தினால் இப்போது செயல்வடிவம் கொடுக்கப்படுவது வரவேற்கப்படவேண்டியதொன்றே. அவரோடு இறுதிக்காலம் வரை பழகிய நானே இவரின் இறுதிக்கிரியைக் கூட செய்யும் பாக்கியம் பெற்றேன். ஒரு அமெரிக்க நாட்டு பிரஜை இந்து மதச்சிந்தனை நூல்களையும் ஆத்மீக வழிகாட்டல்களையும் செவ்வனே கற்று தமிழிலும் சிறப்புற்று இலங்கை நாடெங்கிலும் பல எண்ணிலடங்கா இந்துமத சேவைகளை செய்த உத்தமர். ஏனெனில் இலங்கையைப் பொறுத்தவரையில் இந்துமத சேவையாளர்கள் தத்தமது பிரதேசங்களை மட்டுமே மையப்படுத்தி இந்துமதப்போதனைகள் சமயஇல்லங்கள் என்பவற்றை நடாத்திக்கொண்டிருப்பது வழமை. உதாரணத்திற்கு யாழில் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையாரைச் சொல்லலாம். இவ்வம்மையாரின் சேவை யாழ்ப்பாணத்துக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதே சற்றுவேதனை. காரணம் ஒரு இந்துப் பெரியம்மையாரின் சேவை இலங்கை நாடெங்கெணும் கிடைக்கவி்ல்லை என்ற மனக்குறை மட்டுமே.
ஆனால் இலங்கையின் பல பாகங்களில் இந்துமதச் சேவைகளை செய்த சுவாமி தந்திரதேவா
அவர்களுக்கு உரிய ஆதரவு மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் பெரிதளவில் செய்யப்படாமை வருந்தத்தக்கது. அவருடைய மாபெரும் நற்பணிகள் அதிகமாக இடம்பெற்ற திருகோணமலையில் கூட அவரின் சுவடுகள் தெரியாமல் மறைந்துவிட்டமை மனதுக்கு கஸ்டமாக உள்ளது. இந்து அபிவிருத்தி சபைக்குச் சேரவேண்டிய அவரின் பல சொத்துக்கள் இன்றும் ஒரு சிலபேரினால் முறைகேடாக முடக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவரின் விருப்பப்படி தந்திரதேவா சுவாமி அவர்களின் அஸ்தி தேற்றாத்தீவிலும் கரைக்கப்பட்டது.
இருந்தபோதிலும் தேற்றாத்தீவு இந்துமக்கள் ஒன்றுசேர்ந்து இத்தபோவனத்தினை அவரினது பெயர் கொண்டு அமைப்பதன் மூலம் அவருக்கு அஞ்சலியுடன் மாபெரும் கடமையைச் செய்கிறார்கள்.
இதற்குமேலாக இக்கிராமத்திலுள்ள எத்தனையோ பெரிய சேவையாளர்கள் இந்துமதப் பெரியவர்கள் அவர்களைப்பற்றிய வாழ்க்கை வரலாற்று ஆவணப்படுத்துமாறு இக்கிராம மக்களிடம் நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன் என்று தனது உரையை முடித்தார்.

அந்த சிறப்புரையைத் தொடர்ந்து எமது கிராமத்தின் பல பெரியவர்கள் தத்தமது கருத்துரைகளை வழங்கிக்கொண்டு இருக்க இடைவேளைக்காக குளிர்பானமும் பரிமாறப்பட்டுக்கொண்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

நிகழ்வுகளின் சில படங்கள்

No comments:

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு