Pages

Wednesday, December 16, 2009

பதிவர் சந்திப்பு தித்திப்பு

அறிமுகம் தந்தது
கீர்த்தி
நேரம் தவறாமை
திருப்தி
பசு போய் தந்தது
ஆரம்பம்

முதல் தலைப்பு
பயனுறப்பதிவெழுதல்
பயனுள்ளதானது
புல்லட்டுக்கு வாழ்த்து
'டுமீல்'
மலேசியப் புன்னகை அவர்
மனதில் பட்டாம்பூச்சிகள்

பெண்களும் பதிவுலகமும்
பதிவுலகில் பெண்களுக்கானது
ஆரம்பம் அலட்டல்
அவசியக்கருத்துக்களால்
சிறப்பானது கருத்துக்களம்

அடுத்த நிமிடங்கள்
அனானிகளின் இம்சைகளுக்காக
சந்திராயன் கருத்துக்கள்
சந்திப்பில் எகுறியது??

ஆச்சி சுட்ட வடைகள்
பயற்றம் பணியாரத்துடன்
பரிமாற்றம்
வாயுறியது நமக்கு
வயிறு குழப்பியிருக்கும்
அவர்களுக்கு (ஹிஹிஹி..)

தொப்பை நிரப்பிய
பதிவுச் சிற்பிகள்
ஆற அமர

இலங்கைப் பதிவர் குழும
விளக்கம்
அழகு தமிழில்
தொழிநுட்ப முழக்கம்

அங்கேயும்
இருகுழுக்கள்
சுவாரஸ்ய போட்டி
நிகழ்வு
இன்ப நிறைவு
மகிழ்ச்சிப் பொங்கல்...

(வேறு)

என் வங்கிகணக்குகளிலிருந்து
ATM கூட காசு தர மறுத்ததால்
வருகைதர முடியவில்லை

இடையறா இணையத்தில்
இருந்தபோது - சந்திப்பில்
இருந்த முழுத்திருப்தி

பதினாறுக்கு மேற்பட்ட
பதிவாளர்களுடன்
இணைய இணைப்பிலிருந்தமை
மகிழ்ச்சி

அடிக்கடி தொ(ல்)லைபேசி
அழைப்பால் -அன்பு
வெற்றியாளனுக்கும் பக்கத்து
ஊரானாக்கும் என்குறுக்கீடுகள்
அது இணைய
துலக்கத்துக்காய் பட்டபாடு

கமராக்காரர்களையும்
கவனம்கலைப்பாய் ஆனவர்களையும்
பார்த்தோம்,ரசித்தோம்

இதனைவிட பல நாட்களுக்குப் பிறகு
என் பெளதிகவியல் ஆசிரியை
திருமதி.நடராஜா மற்றும் அங்கிள்
திரு. நடராஜா அவர்களை பார்த்தது
மகிழ்ச்சி வெள்ளத்தில்
என் உள்ளம்

 


நன்றிகள் ஏற்பாட்டாளர்களுக்கும்
இணைய வழி நேரலை
தந்தவர்களுக்கும்
இணையத்தோடு
தொடர்பிலிருந்தவர்களுக்கும்

அடுத்த சந்திப்பு????
கலக்குவோம்

2 comments:

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

றமேஸ் உங்களை எதிர்பார்த்தேன் சந்திப்பிற்கு... ம்ம்ம்... பரவாயில்லை இணைப்பில் இருந்தீர்களா.. கவனிக்கவில்லை.. கவிதை வித்தியாசமா நல்லாயிருக்கு..

Ramesh said...

//இணைப்பில் இருந்தீர்களா.. கவனிக்கவில்லை.. ///
அந்த ஸ்ட்லைலில இருந்தா நம்மள எங்கப்பா.. பிசியிலிருந்தீங்க எண்டு சொன்னன்
///கவிதை வித்தியாசமா நல்லாயிருக்கு..///
நன்றி.
லேட்டா வந்ததுக்கு மன்னிக்கவும்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு