எந்தப் பிரிவில்
இந்த உறவைச் சேர்ப்பது
அடிக்கடி கேட்டுகொண்டன
நம் மனசுகள்
நாமிருவரும்
வாய்விட்டுக் கேட்காமல்
உனக்கும் எனக்கும்
தெரியும்
இது
அதுவல்ல என்று
இருந்தாலும்
நமக்குள்ளே
விடைகாணா கேள்வி
இது மட்டும் தான்..
நான் கேட்ப்பேன்
நீ தருவாய்
ஒரு கோப்பையில்
உன்வீட்டுச் சமையல்
பசியாறும் நம்
இரு உள்ளங்கள்
வா என்பாய்
நண்பர்கள் அடர்ந்த
அந்தப்பகுதியில்
கைபிடித்து
நடைப்பயணம்
ஓ..
அது நிஜங்களில்
நம் நினைவுப்பயணங்கள்
தண்டனைகள் சில
குறும் பிரிவுகளுக்காக...
அடைமழையிலும்
ஐஸ்கிரீம் தந்து
அன்பு பரிசுகள்
ஆயிரம் ஆயிரம்
நீ
விடைபெறும் நேரம்
மனசில் பாரம்
கண்ணில் ஈரம்
இப்போது
புன்னகை உனக்கு..
துணைக்கு
என்நினைவுகள்
எப்போதும்
வாழ்த்துக்கள்
சொன்னபோதும்...
............
கடைசியில்..
இந்த உறவைச்
எந்த வகுப்பில்
சேர்ப்பது?
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
பலர் கேட்கும் கேள்வி இது.
இது அனுபவப்பகிர்வோ?????
////பலர் கேட்கும் கேள்வி இது.///
அதுதான் இப்படி வநதது.ஹிஹிஹி
///இது அனுபவப்பகிர்வோ?????///
இல்லை என்று மறுத்தால் நம்பவா போகிறீர்கள்
நன்றி அஸ்பர்
முதல் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்
Ramesh உங்கள் அனுபவமும் தெரியும் அதற்கு காரணம் யாரு என்றும் தெரியும். எல்லோருக்கும் தெரியும் படி சொல்லவா?
Theepan...அப்படியா???
கில்லியிலிருந்து ஒரு வசனம் >>>ஆதிவாசி அடிக்கிவாசி
டேய் சும்மா ஒரு கவிதை எழுத விடமாட்டியா
கவிதை என்றால் அப்படித்தான் அனுபவித்து எழுத வேணும்
ரசித்தேன்
நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்
///கவிதை என்றால் அப்படித்தான் அனுபவித்து எழுத வேணும்///
அனுபவம் தான்
கவிதையின் களம்
///ரசித்தேன்
நல்ல வரிகள்
வாழ்த்துக்கள்///
நன்றி கரவைக்குரலே
//Ramesh உங்கள் அனுபவமும் தெரியும் அதற்கு காரணம் யாரு என்றும் தெரியும். எல்லோருக்கும் தெரியும் படி சொல்லவா? //
என்ன தீபன் நீங்க கோழிய கேட்டா குழம்பு ஆக்குறது.
///என்ன தீபன் நீங்க கோழிய கேட்டா குழம்பு ஆக்குறது.///
ஜெயகெளரி
கவிதைக்கு பபின்னூட்டல் இடுவதை விட்டுட்டு எதுக்கு தீபனை வம்புக்கு இழுக்குறீங்க..வலிக்குது
Post a Comment