நீங்கள் இல்லாமல்
நான் ஆனது இல்லை
என் ஒவ்வொரு வெற்றியையும்
மகிழ்ச்சியாயும்
ஒவ்வொரு தோல்வியையும்
வெற்றிப்படியாகவும்
சமவிகிதத்தில் ஏற்றொழுகி
தோள் தடவிவிடும்
உங்களது கைகள்
கடவுளின் உன்னத ஸ்பரிசங்கள்
உங்கள் குழந்தை மனசு
என்னை இன்னுமின்னும்
ஆளாக்கும்
ஆளுமையானவனாய்
உங்கள் பேரன்
நான் சுருண்டு விளையாடி
ஓய்வெடுக்கும் உங்கள் மடியில்
இன்பங்களையும் நுகர்ந்திடுவான்
என்கிற எண்ணத்தில்
'தந்தையாகணும்' என்ற
எண்ணம் இன்னும் வந்ததில்லை
உங்கள் உடம்பு தேறவேண்டும்
உங்களுக்கான
என் பிராத்தனைகள்
உங்கள் உளவுறிதியைக்
கூட்டிக்கொள்ளும்
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
நன்றாயிருக்கிறது
றமேஸ்....போன வருடத்திலும் அப்பாவுக்குச் சுகமில்லையென்றீர்கள்.
கவனித்துக்கொள்ளுங்கள்.நிச்சயம் அவர் மடி பேரனைச் சுகமாயச் சுமக்கும் !
We pray for the speedy recovery and good health.
உடம்பு தேறவேண்டும்
உங்களுக்கான
என் பிராத்தனைகள்
நலம்பெறவேண்டும். ம்ம்ம்... மகன்வழிப்பேரனையும் அந்த மடி நிச்சயம் ஏந்திக்கொள்ளும். உறுதியாக.
இலேசாக இருங்கள்..
அப்பா சுகமடைந்து வீடு திரும்ப வேண்டும். கவிதை யதார்த்தமாக இருக்கிறது ரமேஸ். நீங்களும் நலமோடிருங்கள்.
ம்ம் டச்சிங்..
Post a Comment