எத்தனையோ சப்பதங்களை
நுகர்ந்த உன்னால் தான்
நிசப்தங்களின் அலைவரிசைகளை
மொழிபெயர்க்க முடியும்
சப்தங்களாலே பேசப்பட்ட
நானும் நீயும்
கடைசியில் 'அதுவும்'
சில மெளனங்களை கொணர்ந்து
உயிருக்கும் உயிரற்றவைக்கும்
அர்த்தங்களை சூடிச்சென்றது
ஒரு துளி தேனுக்கு
ஆசைப்பட்டு
தேன்கூட்டைக் கலைக்க
நானொன்றும் வேடனல்லன்
காதலைவிட காதலிக்கப்பட வேண்டும்
உன்னை நான்
Wednesday, February 9, 2011
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
நல்ல கவிதை...
கவிதை அருமை...
கடைசி வரி அருமை றமேஸ்.ஊர் ஈரமாய்க் கிடக்கென்று மனசையும் ஈரமாக்கி வச்சிருக்கீங்களோ !
ரமேஸ்....??????
இந்த சிதறல் நல்லா இருக்கு
நன்றி
ஜேகே
very nice. :-)
கவிதை aupper
ஒரு துளி தேனுக்கு
ஆசைப்பட்டு
தேன்கூட்டைக் கலைக்க
நானொன்றும் வேடனல்லன்//
கவிதையினை அழகுபடுத்த உருவகித்து இருக்கிறீர்கள் சகோதரா, அதிலும் இவ் வரிகளின் பின்னர் வரும் இறுதி வரி இருக்கிறதே, கவிதையின் உச்சஸ்தாயியே அது தான் என்று சொல்லுமளவிற்கு கற்பனைச் சிதறலை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். சிதறல்கள் தொடர்ந்தும் கவிதைகளைச் சிந்தட்டும்.
Post a Comment