Pages

Saturday, February 19, 2011

மனம்போன போக்கிலே..

தேடல்களில் சிக்கித்தவிக்கும்
மனம்
மனம்போன வாழ்க்கையில்
வாழும் நான்
நான் என்பதை அறியுமுன்
நீ யார்
யார் நீ என்று ஏக்கமுற
நான் என்பது மறந்துபோகிறது

ஸ்பரிசங்களை நேசிக்கிறேன்
புன்னகை தவழும் இலைகள்
இலைகளில் பூக்கும் பனித்துளிகள்
பூமிசுற்றிய அலைகள்
வானம் மூடும் மேகம்
மேகம் தீண்டும் விரல்கள்
நான்
ஸ்பரிசங்களை நேசிக்கிறேன்

இதயம் வருடும் இசை
இசைந்து போகும் வாழ்க்கை
வாழ்க்கையில் கரையும் கண்ணீர்
கண்ணீரில் கரையவிடும் கண்கள்
தவாளிப்புக்களும் தேய்வுகளும்
செருப்புகளில்

வெயிலின் வெப்பதுகள்கள்
வரண்ட பூமி நாக்கு
பட்டமரம் கூறும் செய்தி
வெட்டும் மரங்களின் தேவை

மனம்போன வாழ்க்கையில்
வாழும் நான்
நான் என்பதை அறியுமுன்
ஏன் என்பது மறந்துபோகிறது
வாழுகிறேனா வாழ்வேனா
எனக்காகவும் உனக்காகவும்

(Manivarma Ko அவர்களின் முகப்புத்தகத்திலிருந்து படம் -  நன்றி அண்ண)

3 comments:

Jana said...

//மனம்போன வாழ்க்கையில்
வாழும் நான்
நான் என்பதை அறியுமுன்
ஏன் என்பது மறந்துபோகிறது
வாழுகிறேனா வாழ்வேனா
எனக்காகவும் உனக்காகவும்//


அருமை. அனால் இந்த பதிவில் நான் இரண்டு பொருள் கொண்டுள்ளேன். சரியானது எது என்று போன்போட்டு கெட்டுக்கொள்கின்றேன்.

goma said...

மனம் போன வாழ்க்கை.....

ஆழ்ந்த சிந்தனையா
மேலோட்ட தேடலா
அவசர எழுத்தலயா
எதுவானாலும் அருமை

நிரூபன் said...

நான் என்பதை அறியுமுன்
ஏன் என்பது மறந்துபோகிறது
வாழுகிறேனா வாழ்வேனா
எனக்காகவும் உனக்காகவும்//

மனம் போன போக்கில் சகோதரன் ஜனா கூறியது போல எனக்கும் இரு பொருள்களை உணர்த்துகிறது. கவிதை மனதிற்கு வேண்டியவரை வைத்துப் பாடுவதாகவும், பிறருக்காக வாழும் மனிதத்தைப் பாடுவதாகவும் சுட்டி நிற்கிறது. ஆளைக் காணவில்லை. கிறிக்கற்றுடன் ஐக்கியமாகி விட்டீர்களோ?

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு