இது ஒரு எச்.ஐ.வி தொற்றுற்ற ஒரு எயிட்ஸ் நோயாளியின் புலம்பல்
என் ஜனனம்
தாயிடமிருந்து
மரணம்
நான் வாங்கிக்கொண்டது
ஐந்து நிமிடங்கள் -அந்த
அரை மணிநேரம்
அரை குறையாய் அங்கே
அழிந்துவிட்டேன்
அழித்துவிட்டேன் அழகிய
வாணாளை
அர்த்தமுள்ள வாழ்க்கையை
அநியாயமாக்கிவிட்டேன்
அவளைப் பார்த்த
அந்த அவசரத்தில்....
என் வாளுறை தவறியதால்
வந்த வினை
அவள் சொல்லியிருக்கலாம்
அத்துவைதம் தவிர்த்திருக்கலாம்
தப்பியிருப்பேன்
இது விதி என்று
பழிபோடமாட்டேன்
நானாக மாட்டிக்கொண்டேன்
நான்
வயது தவறிய
வாழ்க்கைப் பிழை
எச்.ஐ.வியின்
சிறைக்கைதி
நானும் ஒரு
எயிட்ஸின் அடையாளம்
இப்போது
என் இரத்தின் இயக்கம்
எச்.ஐ.வி உயிர்க்கொல்லியிடம்
நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு கணமும்
ஒவ்வொன்றாக இறக்கிறேன்
என் உயிர்ப்புள்ள நீர்ப்பீடனம்
அழிக்கப்படுகிறது
ஆட்சிப்படுத்தமுடியாமல்
செத்துத் தொலைகிறது
இன்னும்
சில வருடங்கள்
சில மாதங்கள்
சில வாரங்கள்
சில நாட்கள்
மட்டுமே
என் வாழ்க்கை
இல்லை அழிந்துபோன
வாழ்க்கை....
மனித வாழ்வின் வரம்புகளை
எட்டிப்பார்க்க முடியாமல்
தவிக்கும்
எரிபந்தம் விழுந்த
வேளாண்மையாய்
என் வாழ்க்கை
சில பேர்களைப் பார்க்க
சிரிக்கத்தோன்றுகிறது
அந்த அணங்குகளிடம்
சிக்கக்கூடாதென்று அவர்களை
எச்சரிக்கிறேன்
ஒருவனுக்கு ஒருத்தி
ஒருத்திக்கு ஒருவன்
என்ற வாழ்க்கையைக்
கற்றுக்கொள்ளுங்கள்
இல்லையேல்
ஒவ்வொரு விடியலும்
தூக்குக்கைதியின் கடைசிப்
பகலைப்போல்
உங்களுக்கும்....
விட்டுவிடுங்கள்
தவறான உறவை
உங்களுக்கும் சேர்த்து
நான் மட்டும்
சாகிறேன்
இன்னும்
சில வருடங்கள்
சில மாதங்கள்
சில வாரங்கள்
சில நாட்கள்
மட்டுமே
என் வாழ்க்கை
Tuesday, December 1, 2009
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
very fine....
thanks da
அருமையான கவிதை நண்பா
நன்றி சுபாங்கன்
வருகைக்கும் கருத்துக்கும்
தொடர்ந்திருங்கள்
அருமையான கவிதை!!!
செந்தில் நன்றி நண்பா
வருகைக்கும் கருத்துக்கும்
ஒரு நல்ல கவிதையாக படுகிறது எனக்கு.!
நன்றி அச்சு
பங்குச்சந்தை பிசியிலும் கவிதைப் பக்கம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நான்
வயது தவறிய
வாழ்க்கைப் பிழை
எச்.ஐ.வியின்
சிறைக்கைதி
நல்ல வரிகள்..
நல்ல கவிதை...
///நல்ல வரிகள்..
நல்ல கவிதை...///
கமலேஷ்
நன்றி நண்பா வருகைக்கும் சேர்த்து
தொடர்ந்திருங்கள்
// எரிபந்தம் விழுந்த
வேளாண்மையாய் //
அழகிய தமிழ்
நன்றி பழனியப்பன்
வருகைக்கும் கருத்துக்கும்
கிராமச்சாவடியில் விழுந்து புரள்கிறேன்
"
விட்டுவிடுங்கள்
தவறான உறவை
உங்களுக்கும் சேர்த்து
நான் மட்டும்
சாகிறேன்"
................அருமை. தான் மட்டும் சாகாமல், அப்பாவி மனைவியையும்/கணவனையும், குழந்தைகளையும் பலி கொடுத்து விடுபவர்கள், சிந்திக்க வேண்டும்..
///அருமை.///
நன்றி சித்ரா, உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...
//// தான் மட்டும் சாகாமல், அப்பாவி மனைவியையும்/கணவனையும், குழந்தைகளையும் பலி கொடுத்து விடுபவர்கள், சிந்திக்க வேண்டும்..////
உண்மைதான்...
இக்கருத்தை வைத்தே இன்னொரு கவிதை வரைய இருக்கிறேன்.. விரைவில் வந்துசேரும்..
nice :)
Post a Comment