Pages

Saturday, December 19, 2009

இது ஒரு நண்பனின் காதல்..

அவனும் அவளும்
அந்த நெடுஞ்சாலையில்

அவசர நெருக்கடியில்
அற்புத சந்திப்பு அவர்களுக்கு

அவன் :
"மனசில தித்திப்பு
மறுபடி பார்க்கத் துடிக்குது"

அவள் :
"பேசிக்கொள்ளலாமே
இந்தா
என் தொலைபேசி
இலக்கம்"

சுவீப் ரிக்கட்டுப்
பரிசு விழுந்தவனாய்
அவன்
அசடுவழிய
பேசிப்பேசி
எஸ்.எம்.எஸ், ரீலோட்
என்று
காசு கரைத்தான்
கடிகாரம் மறந்த
அந்த நாட்கள் அவனுக்கு
அவசியமில்லாமல்
அற்புதமாக


அவளை
அன்புத்தோழியாக
ஏற்றுக்கொண்டான்...

அவள் மனசுல சந்தேகம்
அன்றொருநாள் திடீரென்று

அவள்:
"நீ
என்னைக்
காதல் செய்கிறாயா..?"
என்றாள் மெளனமாக

மழைவெள்ளத்தில்
அகப்பட்ட குழந்தை போல
அவன்பட்ட கஸ்டம்
அவளுக்குத்தெரியுமா?
இருந்தாலும் மனசு
நந்தவனமாக...

அவன்:
"ஆம்
ஆனா
இல்லை"

என்று
இரண்டும் சேர்த்து
இரண்டுமில்லாமல்
அவன்
சனியன் பிடித்த
சகபாடியானான்

அப்போது அவள்:
"காதல் தவறி
நம்
வாழ்க்கையில்
விழுந்துவிட்டது
காதல் கொண்டு
வாழ்க்கை செய்வோம்
என்றாள்"


மறுக்க முடியாமல்
அவன்
நாடகள்
சதம் சதமாய் கழிய
இன்பச் சில்லறைகளைச்
சேமித்துக்கொள்ள முடியாமல்
தடுமாறினான்

அவளிடம் அவன்:
"ஐஸ்கிறீம் குடிக்கலாமே"

அவள்:
"சூடாக தேனீர்
வேண்டுமென்றாள்"

இப்படி
விவாத மேடை
அடிக்கடி
அரங்கேறியது
முடிவு எட்டப்படாமல்
காதல் தடுமாறியது.

அவனது
விட்டுக்கொடுப்புகள்
எல்லாம்
அவளுக்கு
ஒத்துழைப்புகளாயின

திட்டுக்கள் எல்லாம்
வாதிகளின்
வாதங்களாகின

இப்போது
காதல் தவறி
அவன்
வாழ்க்கை
விழுந்துவிட்டது.

யாகூ ஸ்க்கைப்
ஐடி மாத்தி
இன்னும் நீளும்
அவள்....
வேறொருத்தியாய்
அவளே...
அவனுக்கு
தொல்லை கொடுக்க

அவன்
வாழ்க்கை வெறுத்த
சக்கையாகிறான்...

இப்போது
அவன்
பேசா இளந்தை

இது என் நண்பன் ஒருவன் படும் அவஸ்த்தை அவனுக்காக அவன் கேட்டதற்காக..

11 comments:

Paleo God said...

//இது என் நண்பன் ஒருவன் படும் அவஸ்த்தை அவனுக்காக அவன் கேட்டதற்காக..//

ரொம்ப பாவங்க அவரு... சோர்ந்து போகாம பேசி தீக்கச்சொல்லுங்க... குனிய குனிய குட்டு விழுந்து கிட்டே தான் இருக்கும்... தீர்வு காண முடியாத என்ற ஒன்று இல்லை...

Ramesh said...

///ரொம்ப பாவங்க அவரு... சோர்ந்து போகாம பேசி தீக்கச்சொல்லுங்க... குனிய குனிய குட்டு விழுந்து கிட்டே தான் இருக்கும்... ///

ம்ம்ம்..
நான் இதை அவனிடம் கொண்டு செல்கிறேன்..
நன்றி..
///தீர்வு காண முடியாத என்ற ஒன்று இல்லை...///
மிகச் சரியான கருத்து
தீர்வ இருக்கும் ஆனா சாதகமா இருக்குமா என்பதுதான் கேள்வி.

நன்றி
உங்களது பெயரைக் குறிப்பிடலாமே...

Jeya said...

//இது என் நண்பன் ஒருவன் படும் அவஸ்த்தை அவனுக்காக அவன் கேட்டதற்காக..//

இது உங்க சொந்த அனுபவமா என்று கேட்டுவிடுவோம் என்று பயந்து தானே இப்படி எல்லாம் எழுதுறீங்க!!!!

Ramesh said...

///இது உங்க சொந்த அனுபவமா என்று கேட்டுவிடுவோம் என்று பயந்து தானே இப்படி எல்லாம் எழுதுறீங்க!!!!///

சொந்த அனுபவம் உங்களுக்குத்தான் தெரியுமே, அப்போ இது இல்ல என்று கூட தெரியும்..ஆக ஏன் இப்படி??

Theepan Periyathamby said...

யாரு Ramesh அந்த பெண் , எங்க கிட்ட எதுவும் சொல்லலியே நீங்க?

Ramesh said...

//யாரு Ramesh அந்த பெண் , எங்க கிட்ட எதுவும் சொல்லலியே நீங்க?///
தீபன் வேண்டாம்.
உங்கள் பின்னூட்டங்கள் வழி தவறிப்போகுது...

Chitra said...

அவனது
விட்டுக்கொடுப்புகள்
எல்லாம்
அவளுக்கு
ஒத்துழைப்புகளாயின
................யாஹூ வானமே எல்லை கொண்ட "லவ் டுடே"............ உங்கள் நண்பர் மீண்டு வந்து உண்மை காதலை சீக்கிரமே காணட்டும்.

Ramesh said...

நன்றி சித்ரா..
எனது நண்பர் இப்போது பார்த்துக்கொண்டிருப்பார்.
அவரிடம் இதை சொல்கிறேன்...

Ramesh said...

என் நண்பன் சொன்னது...( நான் யாருக்ககாகவோ எழுதினனோ அந்த நண்பன் சொன்னது)
realy superda
ellorukkum thanks solluda
unmaila aaruthala kodukkum naparkalai ninaithu nan santhosa paduren ramesh

balavasakan said...

இது உங்க நண்பன் மட்டும் இல்லைங்க பலர் படும் அவஸ்தை...

மழைவெள்ளத்தில்
அகப்பட்ட குழந்தை போல
அவன்பட்ட கஸ்டம்
அவளுக்குத்தெரியுமா?
இருந்தாலும் மனசு
நந்தவனமாக...

நான் மிகவும் ரசித்தவை...

Ramesh said...

///இது உங்க நண்பன் மட்டும் இல்லைங்க பலர் படும் அவஸ்தை...///

அப்படியென்றால் உங்களுக்கும் இப்படி...ஏதும்..

நன்றி வருகை மற்றும் பின்னூட்டல்களுக்கு

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு