Pages

Friday, December 25, 2009

வைக்கோலில் ஓர் ஒளிப்பிளம்பு


இரண்டாயிரம் ஆண்டுகள் முன்

வைக்கோலில் ஓர்
ஒளிப்பிளம்பு
ஏழ்மையின் விளக்கு
தாழ்மையில் எழுந்தது
மானுடம் பிறந்தது
உலகம் உய்த்தது

உலகம் மீட்க பிறந்த
உத்தமரின்
இத்தினம் முதல்
மனமெங்கணும்
மகிழ்ச்சி மலர்கள்
பூக்கட்டும்...

உன்னொளி எமக்கு
புதுத்தெம்பு தரவேண்டும்
மனஇருள் போக்க
மரணித்தெழுந்த பிதாவே
உன்னருளாலே நம்
உள்ளம் வளரட்டும்
இல்லம் இனிக்கட்டும்

பரிசுத்த ஆவியின்
அற்புத ஒளியினில்
நள்ளிரவுச் சூரியன்
எளிமையாய் பிறந்ததே
உள்ளிருக்கும் மனச்சுமை
இனிக்குறையுமே...

உனது பிறப்பு
உன்னத சேவை
நம் நல்லுறவு
பாசம்
அன்புத்தோழமை
நட்புறவு வளர
இன்னுமின்னும்
நாம் பாடுவோம்
உனக்காக கரோல் கீதங்கள்...
எம்மனம் இப்போது
தூய்மை...
வல்லமை கீதங்கள்
உனக்காக...
என்றும்
நாம் உன்னில்...


 


அனைவருக்கும் எமது கிறிஸ்த்தவ தின நல்வாழ்த்துக்கள்

17 comments:

Admin said...

கவிதை அருமை. இனிய நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.

Bavan said...

இனிய நத்தார் பண்டிகை நல்வாழ்த்துக்கள்...:)

Ramesh said...

நன்றி சந்ரு பவன்....
வாழ்த்துக்கள் அனைவருக்கும்

Theepan Periyathamby said...

அருமை, அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்.

Ananth said...

மிகவும் அருமையான கவிதை ரமேஸ்,
தங்களுக்கும் பாலன் இயேசுவின் அருளும் நல்லாசிகளும் உரித்தாகட்டும். உங்களது இக் கற்பனைகள் இன்னும் இன்னும் பரவ எனது வாழ்த்துக்ள்.

Unknown said...

நத்தார்தின வாழ்த்துக்கள்

Ramesh said...

நன்றி தீபன்

Ramesh said...

//மிகவும் அருமையான கவிதை ரமேஸ்,
தங்களுக்கும் பாலன் இயேசுவின் அருளும் நல்லாசிகளும் உரித்தாகட்டும். உங்களது இக் கற்பனைகள் இன்னும் இன்னும் பரவ எனது வாழ்த்துக்ள்.//

நன்றி ஆனந்தன் அண்ணா...
உங்கள் முதல் வருகை மற்றும் வாழ்த்துக்களுக்கும்

உங்களுக்கும் உங்கள் குடுப்பத்தவர்களுக்கும் உள்ளம் கனிந்த நத்தார் தின வாழ்த்துக்கள்

இயேசு பாலனின் ஆசிகள் என்றும் கிடைக்கட்டும்

Ramesh said...

நன்றி அஸ்பர்
வருகை வாழ்த்துக்களுக்கு

Paleo God said...

MERRY CHRISTMAS RAMESH::)

Ramesh said...

நன்றி சங்கா (பலா பட்டறை)
உங்களுக்கும் நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்

balavasakan said...

வைக்கோலில் ஓர்
ஒளிப்பிளம்பு
ஏழ்மையின் விளக்கு
தாழ்மையில் எழுந்தது
மானுடம் பிறந்தது
உலகம் உய்த்தது

உலகம் உய்யவில்லை றமேஸ்...

உன்னொளி எமக்கு
புதுத்தெம்பு தரவேண்டும்
மனஇருள் போக்க
மரணித்தெழுந்த பிதாவே
உன்னருளாலே நம்
உள்ளம் வளரட்டும்
இல்லம் இனிக்கட்டும்

நன்று நன்று ... றமேஸ்..ந்ததார் வாழ்த்துக்கள்...

Ramesh said...

//உலகம் உய்யவில்லை ..//
அது அப்போ...
அப்படியா ??
என்றும் சொல்லலாம்..

நன்றி பாலா
உங்களுக்கும் நத்தார், மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்

கா.பழனியப்பன் said...

வாழ்த்துக்கள் தல.
இந்த புதுவருடம் உங்களுக்கு நிறைய கவிதை மலர ஆண்டவனை பிராத்திக்கிறேன்

கமலேஷ் said...

கவிதை அழகு..
கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

Ramesh said...

நன்றியுடன் வாழ்த்துக்கள் பழனியப்பன்

Ramesh said...

நன்றி கமலேஷ்

வருகைக்கு நன்றி எனது படைப்புக்கள் ரசனைகளை ரசித்ததற்கு நன்றி மீண்டும் சிதறும் உங்களோடு